திங்கள், 20 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் வழக்கு: நாளை விசாரணை ~! சட்டபேரவை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி

சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி தலையிலான தனது அரசை நிருபிக்க கோரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்துமாறு திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் அமளியில் ஈடுபட்டனர். திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், அவர்களை வெளியேற்றும்படி உத்தரவிட்டாடர். இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து அவைக் காலர்களால் திமுக உறுப்பினர்களை வலுக்ககட்டாயமாக வெளியேற்றி அதன் பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில், திமுக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு அவரச வழக்காக எடுத்து விசாரிக்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர் .நக்கீரன்

கருத்துகள் இல்லை: