திங்கள், 20 பிப்ரவரி, 2017

ஜெயலலிதா சசிகலா பற்றி கொடைநாடு எஸ்டேட் தொழிலாளர்கள் கதை கதையாக கூறுகிறார்கள் .. அம்மாவை சசி கொன்றிருப்பார் ... நம்புகிறார்கள் !

2000 ஏக்கர் பரப்பளவில் 14,00 கண்காணிப்பு கேமராக்கள், மலைமேல் ஹெலிபேட், அங்கிருந்து பங்களா செல்ல பளபளக்கும் தார்ச்சாலை அதென்னவோ தெரியவில்லை... இந்த நீலகிரியின்  கொடநாட்டிற்குள் வருவதை நினைத்தாலே என் மனம் சில்லென்று ஆகிவிடுகிறது. இங்கே நான் வரும் காலங்கள்தான் என் வாழ்க்கையின் அபூர்வ காலங்களாய் நான் கருதுகிறேன். இந்த நீலகிரியில் யூகலிப்டஸ் தைல மணம் எப்படி நிறைந்து இருக்கிறதோ அதுபோல இந்த நீலகிரி மக்கள் என் மனதிற்குள் ஆழப் பதிந்துவிட்டார்கள்...''’-இது நீலகிரியின் கோத்தகிரியில் நடந்த ஒரு கூட்டத்தில் மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராய் இருந்தபோது உதிர்த்த வாசகங்கள்.>ஆனால்... இப்போது நீலகிரியில் "ஜெ. இல்லாத கொடநாடு எப்படி இருக்கிறது?' என அங்குள்ள தொழிலாளர்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம். ""அம்மாவோட இந்த எஸ்டேட்ல நாங்க வேலை பாக்கறதை ரொம்ப கௌரதையா அப்ப நெனச்சுக்குவோம். இங்கே அம்மா பேட்டரி கார்ல வந்து  நாங்க எல்லாம் எப்படி வேலை செய்யறோம்னு பாக்க வரும் போது... எங்ககிட்ட எல்லாம் சிரிச்சு... சிரிச்சு பேசுவாங்க. அப்ப இந்த சசிகலா கூட இருப்பாங்க. உம்முன்னே இருப்பாங்க. எங்களுக்கு  அப்பவே சசிகலாவை பிடிக்காது. அம்மா முகத்துக்காக மட்டும் தான் நாங்க இங்கே வேலை பார்த்துட்டு இருந்தோம். இல்லைன்னா பக்கத்துல இருக்கற தேயிலை தொழிற்சாலைகள்ல தீபாவளி போனஸா நூற்றுக்கு முப்பது, முப்பத்தஞ்சு பர்சென்ட் கொடுப்பாங்க. நாங்க அங்கே போக ரொம்ப நேரமாகாது. ஆனா இங்கே போனஸ் ரொம்ப கம்மியா இருந்தாலும் "அம்மா' என்கிற அந்த பேருக்கு வேண்டியே நாங்க  இங்கே இவ்வளவு வருஷங்களாய் இருந்துட்டோம். இனிமேல் அது நடக்காது...'' என்கிறார்கள் கோரஸாய்.
""ஏன் அவுங்க அப்படிச் சொல்றாங்கன்னு பாக்கறீங்களா?'' என கேள்வி கேட்டபடியே நம்மிடம் பேசினார், ஜெ.வுக்கு மட்டுமல்ல... சசிகலாவுக்கும் சேர்த்து கொடநாட்டிற்குள் கார் ஓட்டிய திவாகர்.


"சார்... நான் யாருக்கும் பயந்துக்கமாட்டேன். நான் சொல்றதை அப்படியே எழுதிக் குங்க.  இப்போ இங்குள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர் களும், "அம்மா இறக்கவில்லை... கொன்னுட்டாங்க... அம்மாவைக் கொன்றது சசிகலாதான்' என முழுமையாய் நம்புகிறார்கள் .

அதற்கு காரணமும் இருக்கிறது. ஒரு தடவை... அதாவது 2006-ல் அம்மா ஆட்சியில் இல்லாத   நேரம். அம்மா இங்கே இருக் கிறார்கள். அம்மாவின் அண்ணன் மகளான தீபா அம்மாவைப் பார்க்க கொடநாட்டிற்கு வந்தி ருந்தார். அப்போது கேட்டின் வாசலில் தீபாவை நிற்க வைத்த சசிகலா, "எதற்கு அக்காவைப் பார்க்க வேண்டும்?' என கேட்ட போது... "அத்தைங்கற முறை யிலதான் பார்க்க வந்தேன்' என தீபா சொல்லினார்.

அதற்கு சசிகலா... பூங்குன்றனை அனுப்பி "அக்கா ரொம்ப பிஸியா இருக்காங்க. இப்பவெல்லாம் பார்க்க முடியாதுன்னு சொல்லிடுங்க'ன்னு கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாம தீபாவை திருப்பி அனுப்பினதை இங்குள்ள எல்லா மக்களும் பார்க்கத்தான் செய்தார்கள்.
பணத்துக்காக சொந்த உறவு களையே நெருங்கவிடாமல் செய்த சசிகலா, அதே பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் அம்மாவை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என நம்பும்படியாய் அந்த விஷயம் அவர்களுக்குள் அப்போதே காட்டுத் தீ போல கொழுந்துவிட்டு எரிந்தது.

இதுமட்டுமல்ல... அம்மாவுக்கு யார், யார் பங்களாவுக்குள் உண்மை விசுவாசிகளாக இருந்தார்களோ அவர்களை எல்லாம் எஸ் டேட்டில் இருந்து வெளியே அனுப்பினார் சசிகலா. அப்போது எஸ்டேட் மேனேஜராய் இருந்த பாபு, ஜி.எம்.மாக இருந்த ரவிச்சந்திரன் ஆகியோர் மீது இல்லாத பொல்லாத குற்றங்களை சுமத்தி வெளியே அனுப்பினதையும் தொழிலாளர்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
அதோடு அம்மாவை நன்றாகப் பார்த்துக்கொண்ட பிராமின் பொம்பளையான அச்சம்மா, திருச்சியைச் சேர்ந்த தயா, வேலூரைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரையும் பங்களாவை விட்டே வெளியே அனுப்பினார் சசிகலா. அம்மாவுக்கு வேண்டியவர்களை விரட்டிவிட்டு, எஸ்டேட்டுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாய் தன் உறவு சம்பந்தப்பட்ட நடராஜனை கொடநாடு மேனேஜராய் ஆக்கிவிட்டார் சசிகலா

இப்பதான் சசிகலாவுக்கு கட்சித் தலைவி ஆசை வந்துருக்குன்னு ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குறாங்க. ஆனா அதில் உண்மையில்லை. கடந்த 2009-ஆம் வருடத்தில்... குன்னூர் விவேக் ஹோட்டலில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள அம்மா கிளம்புகிறார்.  அப்போது அம்மாவிடம் சசிகலா... "எம்.ஜி.ஆர். உங்களை கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆக்கியதைப் போல... என்னை நீங்கள் கொள்கை பரப்புச் செயலாளராய் ஆக்கவேண்டும்...' என்று அம்மாவிடம் எல்லோர் முன்னிலையிலும் வலிந்து கேட்டார் சசிகலா. அப்போதைக்கு தலையாட்டினார் அம்மா. 
வழக்கமாய் கட்சிக் கூட்டங்களின்போது காருக்குள் அமர்ந்துகொள்ளும் சசிகலா... அந்த விவேக் ஹோட்டலில் நடந்த கட்சி மேடையில் முதன்முதலாய் நாற்காலியில் அமர்ந்தார்.

அந்தக் கூட்டத்தில் தனக்கு பதவி கிடைக்கும் என்று நினைத்த சசிகலாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பங்களாவுக்குள் வந்து... "ஏன் எனக்கு பதவியை அறிவிக்கவில்லை'... என அம்மாவிடம் சசிகலா சண்டையிட்டது, எஸ்டேட் தொழிலாளர்கள் எல்லோருக்கும் தெரியும்.

;இதனால் மனமுடைந்த அம்மா அடுத்தநாள் காலையில் பங்களா பக்கத்தில் உள்ள பூ கார்டனை  திறந்துவைக்க வரவில்லை. ஆனால் அம்மாவுக்குப் பிறகு தான்தான் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தணும் என்பதற்காக... அந்த பூ கார்டனை சசிகலாதான் திறந்து வைத்தார். அப்போதிருந்தே சசிகலாவுக்கு அரசியல் ஆசை அதிகம்தான்... என்பதையும் தொழிலாளர்கள் அறிவார்கள்.

இப்படி, "அம்மா இறப்புக்குப் பின் சசிகலாதான் இருக்கிறார் என பலரும் நம்புகிறார்கள். சசிகலா, இளவரசி என 15-பேரின் பிடியில் இருக்கும் கொடநாடு எஸ்டேட் இப்போது யார் பிடியில் இருக்கிறது தெரியுமா? அம்மாவால் கட்சியில் இருந்து விரட்டப்பட்டு, சிறைக்குள் வைக்கப்பட்ட  இராவணனிடம்தான். அவர்தான் அம்மா வழக்கமாய் போகும் போட்ஹவுசில் தன்னை மறந்த நிலையில் அடிக்கடி உலா போய் வருகிறார். அதேபோல அம்மா இறந்தநாள் முதல் இப்போதுவரை ஒருநாள் கூட உள்ளே கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் கட்டும் பணி நிறுத்தப்படவேயில்லை.

மணல் மன்னனான ஓ. ஆறுமுகச்சாமியின் செந்தில் மணல் கம்பெனி இலவசமாக மணல் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தக் கட்டிடப் பணிகளை  இராவணன்தான் பார்த்துக்கொள்கிறார். "நான் சென்னைக்கு கிளம்பிட்டேன். உங்கள் குழந்தைகளை நல்லாப் பார்த்துக்குங்க...' என கடைசியாய் அம்மா எஸ்டேட் ஆட்களிடம் சொல்லிவிட்டுப் போனார்.

இப்படி ஒரே அடியா போவாங்கன்னு யாரும் நம்பவேயில்லை

"மொத்தமாய் அம்மா இறந்த வடு தொழிலாளர்களின் மனதில் பதிந்துவிட்டது. கொடநாட்டு பங்களாவாசிகள்தான் அம்மாவை மனதில் இருந்து எடுத்துவிட்டார்கள்...'' என்கிறார் திவாகர் உண்மையாய்.

ஜெ.வுக்கு 4 ஆண்டு தண்டனை வழங்கிய நீதியரசர் குன்ஹா, ஜெ.-சசி வகையறாக்கள் வாங்கிக் குவித்த சட்டவிரோத சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். பிப்.14ல் உச்சநீதிமன்றமும் குன்ஹா தீர்ப்பை உறுதி செய்துள்ளதால் 2000 ஏக்கர் பரப்பளவில் 14,00 கண்காணிப்பு கேமராக்கள், மலைமேல் ஹெலிபேட், அங்கிருந்து பங்களா செல்ல பளபளக்கும் தார்ச்சாலை என சகலமும் கொண்ட இந்த கொடநாடு எஸ்டேட் உட்பட மற்றவை அரசாங்கத்தின் பிடிக்குள் செல்லப்போகிறது."-அருள்குமார்நக்கீரன்

கருத்துகள் இல்லை: