திங்கள், 21 செப்டம்பர், 2015

விஷ்ணுப்பிரியாவின் இறுதி கடிதத்தின் பல பக்கங்களை காணவில்லை! இது கொலை அல்லது தூண்டப்பட்ட தற்கொலை!

திருச்செங்கோட்டில் தற்கொலை செய்து கொண்ட, டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா கடிதத்தின் அனைத்து பக்கங்களையும் வெளியிடாமல், குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டுமே போலீசார் வெளியிட்டுள்ளதால், தற்கொலைக்கான காரணங்களை மூடிமறைக்க முற்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். ஜூன், 23ல், திருச்செங்கோட்டில் கடத்தப்பட்டு, பள்ளிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.இந்த கொலையின் பரபரப்பு முடிவுக்கு வரும் முன், வழக்கின் விசாரணை அதிகாரியான, திருச்செங்கோடு டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, 18ம் தேதி, முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கு முன், விஷ்ணுபிரியா, 10 பக்க கடிதம் எழுதியிருந்ததாக, முதலில் தகவல் வெளியானது. ஆனால், பத்திரிகையாளர்களுக்கு, ஒன்பது பக்க கடிதத்தை மட்டுமே, இரு பாகங்களாகபோலீசார் வழங்கினர்.      பல பக்க கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து இருப்பது சந்தேகம் கொடுக்கிறது..........மேலும் கடிதத்தில் இதை அரசியல் ஆக்க கூடாது .....அந்த gokul ராஜ் வழக்கோடு இதை சம்பந்த படுத்த கூடாது என்று எழுதி இருபதாக சொல்ல படுவது நம்பும் படியாக இல்லை ......விட்டால் இன்னும் காவல் துறைக்கு அதிக ஊதியம் வழங்க 7 வது pay commision அமுல் படுத்துங்கள் என்று எழுதி இருபதாக கூட சொல்ல்வார்கள் ...........தற்கொலைக்கு முயன்றவர் எதோ பெரிய பொது கூட்டத்தில் பேசுவதற்கு உரை தயாரித்து இருபதாக சொல்ல்வது மிக பலத்த சந்தேகம் கொடுக்கிறது
ஆனால்,'கடிதத்தில் உள்ள கையெழுத்து, தன் மகளின் கையெழுத்து அல்ல' என, விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி மறுத்தார்.

மேலும், கடிதத்தில் உள்ள தகவல்கள் அனைத்துமே, விஷ்ணுபிரியா, தன் குடும்பத்தாருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளாகவேஉள்ளது. அதிலும், தான் தற்கொலை செய்து கொள்ள மனமின்றி, அந்த காரியத்தை செய்வதாக தெரிவித்துள்ளார். இதனால், அவரது தற்கொலைக்கு, 'டார்ச்சரே' காரணம் என்பது, இலைமறை காயாக தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், கடிதத்தில் முக்கியமானதாகக் கருதப்படும், விஷ்ணுபிரியாவுக்கு, 'டார்ச்சர்' கொடுத்த அதிகாரிகளின் பட்டியல் அடங்கிய பக்கத்தை, போலீசார் மறைத்து இருக்கலாம் என, கூறப்பட்டது. அதற்கேற்ற வகையில், விஷ்ணுபிரியா, 15 பக்க கடிதம் எழுதியதாகவும், போலீசாரால் வெளியிடப்பட்ட, ஒன்பது பக்கம் போக, மீதமுள்ள, ஆறு பக்கங்களில், போலீஸ் அதிகாரிகளின், டார்ச்சர் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்ததாகவும் சில தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தனக்கு டார்ச்சர் கொடுத்த உயர் போலீஸ் அதிகாரிகள், சக போலீஸ் அதிகாரிகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு அரசியல் பிரமுகர்கள் பற்றிய விவரங்களை விஷ்ணுபிரியா குறிப்பிட்டிருந்தார் என, கூறப்படுகிறது.மேலும், கடிதத்தின் பாதிக்கும் மேற்பட்ட பக்கங்கள் மறைக்கப்பட்டதற்கும், உயர் போலீஸ் அதிகாரிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும், சர்ச்சையும் எழுந்துள்ளது. இதை, பிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.,யுமான மகேஸ்வரியும், பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.தற்கொலைக்கான காரணங்களை மூடிமறைக்க, நாமக்கல் போலீசார் முற்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளதால், கடிதத்தின் நகல், டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின், 'இ - மெயில், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்'பில் உள்ளதா? என, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்த துவங்கி உள்ளனர்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, கடிதத்தின் முழு தகவல்களையும் வெளியிட வேண்டும் என்பது தான், நேர்மையான போலீசார் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை.>குற்றம் சுமத்துவது தவறு: நாமக்கல் மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் கூறியதாவது:
டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில், உயர் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவது தவறு. கோகுல்ராஜ் கொலை வழக்கில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில், தனி நபர் மீது எப்படி நிர்ப்பந்தப்படுத்த முடியும். அந்த வழக்கு, என் மேற்பார்வையில் நடக்கிறது. எதுவாக இருந்தாலும் உண்மையை மறைக்க முடியாது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் தனியாக விசாரணை நடத்துவர். ஏதாவது சந்தேகம் என்றால், விசாரணை அதிகாரியிடம் ஆலோசனை செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு: டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தற்கொலை, பொறியியல் கல்லுாரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் நேற்று, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.இந்த இரு வழக்குகளின் விசாரணையையும், சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் ஒப்படைக்க, நேற்று முன்தினம், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.இதையடுத்து, கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரிக்கும், கோவை மண்டல சி.பி.சி.ஐ.டி., - ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரிக்கும், சேலம் மண்டல சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., ராஜன் ஆகியோர், நாமக்கல் எஸ்.பி., செந்தில்குமாரை, நேற்று காலை சந்தித்து, வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது, இரு வழக்குகளின் ஆவணங்களும், சி.பி.சி.ஐ.டி., போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டன.>'தோழிக்கு பாதுகாப்பு தேவை': விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி கூறியதாவது:
என் மகள் இறப்பு சம்பவம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி., விசாரணை மேலோட்டமாக நடக்கும் என்பதால் உண்மை வெளிவராது. ஆகவே, இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு, தமிழக முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும். என் மகளின் தற்கொலை சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய, அவரது தோழியான கீழக்கரை டி.எஸ்.பி., மகேஸ்வரியை பழிவாங்காமல், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு ரவி கூறினார்.>'சி.பி.ஐ., விசாரணை வேண்டும்': தாய் கலைச்செல்வி கூறியதாவது:மகளுடன், நானும் திருச்செங்கோட்டில் தங்கி இருந்தேன். விநாயகர் சதுர்த்திக்காக நானும், விஷ்ணுபிரியாவும் கடலுாருக்கு வந்தோம். அப்போது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேலதிகாரிகளின் அழுத்தத்தால், 'டென்ஷனாக' உள்ளதாக கூறினார். இந்த வழக்கில் சிலரை, 'குண்டர்' சட்டத்தில் கைது செய்ய வற்புறுத்துகின்றனர். ஆனால், மனசாட்சிக்கு விரோதமாக செயல்பட முடியவில்லை என புலம்பினார். அவருக்கு நான் ஆறுதல் கூறினேன்.விநாயகர் சதுர்த்தி படைத்து முடித்ததும், கடந்த, 17ம் தேதி இரவு, அவர் மட்டும் திருச்செங்கோட்டிற்கு புறப்பட்டு சென்றார். வீட்டிலிருந்து மகிழ்ச்சியுடன் சென்றவர், மறுநாள் மாலையில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது.என் மகள் இறப்பில் பல்வேறு சந்தேகம் உள்ளது. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற உண்மை வெளிவர வேண்டும். அதற்காக என் மகள் தற்கொலை வழக்கையும், அவர் விசாரித்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கையும் சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும். அப்போது தான் முழு உண்மையும் தெரிய வரும்.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் - dinamalar.ocm 

கருத்துகள் இல்லை: