ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

உபியில் முதியவரின் டைப் மெஷினை அடித்து நொறுக்கிய போலீஸ் சஸ்பென்ட்....

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அஞ்சல் நிலையத்தின் வாசலில் கடந்த 35 வருடங்களாக ஒரே ஒரு டைப் ரைட்டரை வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு இந்தியில் தட்டச்சு செய்து கொடுப்பதன் மூலம் வரும் 50 ரூபாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார் 65 வயது முதியவரான குமார். நேற்று காலை அவரது வாழ்வில் புயலாகப் புகுந்தார் ஒரு அடாவடி காவலர். தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து உடல்நோக உழைக்கும் குமாரை அந்த இடத்தை விட்டு காலி செய்ய சொன்னார் அந்த அடாவடி சப்-இன்ஸ்பெக்டர். அதற்கு அந்த முதியவர் எதிர்த்து கேள்வி கேட்கவே ஆவேசமடைந்த அவர் அவரது ஒரே வாழ்வாதாரமாக இருந்த டைப் ரைட்டரை பைத்தியம் பிடித்தவர் போல் சுக்கு நூறாக உடைத்தார். இந்த காட்சிகளை உள்ளூர் நிருபர்கள் படம் பிடித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது.
இதையடுத்து, உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் அந்த அடாவடி காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த போலீஸ் சூப்பிரண்டண்டுக்கு அந்த முதியவரை சந்தித்து புதிய டைப் ரைட்டரை வழங்கும்படியும் உத்தரவிட்டார்.

காட்சிகள் மாறியது. ஒரு காவலரால் அவமதிக்கப்பட்டு துரத்தப்பட்ட அந்த முதியவரின் வீட்டுக்கு சென்ற மாஜிஸ்திரேட் மற்றும் மூத்த போலீஸ் சூப்பிரண்டண்ட் இருவரும் அந்த காவலரின் அநாகரீகமான நடத்தைக்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட பின், அந்த புதிய டைப் ரைட்டரை வழங்கினர் maalaimalar.com

கருத்துகள் இல்லை: