வெள்ளி, 9 ஜனவரி, 2015

மைத்திரிபாலா ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்கா பிரதமரானார்

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேன இன்று மாலை நடந்த பதவியேற்பு விழாவில் அதிபராக பதவியேற்றார். இதே விழாவில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்னிலையில் பதவியேற்க முடியாது என்று மறுத்துவிட்டார் சிறிசேன. இதனால் உச்சநீதிமன்ற நீதிபதி சிறிபவன் முன்னிலையில் மைத்ரிபால பதவியேற்றார்.! இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் சிராணி பண்டாரநாயக்கா. அப்போது அதிபராக இருந்த ராஜபக்சே தம்மிடம் அதிகாரங்களைக் குவித்து வைக்கக் கூடிய திவிநெகும என்ற சட்டத்தைக் கொண்டுவந்தார்.ஆனால் இந்த சட்டத்தை செல்லாது என்று அதிரடியாக சிராணி தீர்ப்பளித்தார். இதனால் அவர் மீது நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இது சர்வதேச அரங்கத்தில் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. சிராணிக்குப் பதிலாக ராஜபக்சேவால் நியமிக்கப்பட்டவர்தான் தற்போதைய தலைமை நீதிபதி மொகான் பிரீஸ். இவர்தான் ராஜபக்சே 3வது முறையாக தேர்தலில் போட்டியிடலாம் என்று அனுமதி கொடுத்தவரும் கூட. இந்த நிலையில் ராஜபக்சேவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் சிராணி பண்டாரநாயக்காவை நிறுத்த வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பின்னர் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து மைத்ரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக அறிவித்தன. சிராணி பண்டாரநாயக்காவும் மைத்ரிபாலவை ஆதரித்தார். தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மைத்ரிபால, ராஜபக்சே ஆதரவாளரான தலைமை நீதிபதி மொகான் பிரீஸ் முன்பாக பதவி ஏற்கப் போவதில்லை என்று கூறியிருந்தார். இலங்கை அரசியல் சாசனப்படி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் முன்பாக அதிபர் பதவி ஏற்கலாம் என்பதால் என். ஸ்ரீ பவன் (தமிழர் ) என்ற நீதிபதி முன்னிலையில் மைத்ரிபால சிறிசேன பதவி ஏற்றார். மைத்ரிபால பதவியேற்ற பின்னர் புதிய பிரதமர் பதவியேற்பு விழா நடந்தது. அதில் முன்னாள் பிரதமரான முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுக tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: