செவ்வாய், 9 செப்டம்பர், 2014

நெல்லை மேயராக அதிமுக புவனேஸ்வரி போட்டி இன்றி தெரிவானார் !

வேட்புமனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றதையடுத்து, அதிமுக வேட்பாளர் இ.புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருநெல்வேலி மேயர் பதவிக்கு வரும் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருந்தது. இந்தத் தேர்தலில், அதிமுக சார்பில் கட்சியின் மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலர் புவனேஸ்வரி, பாஜக சார்பில் வெள்ளையம்மாள் உள்பட 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுக்கள் மீதான பரிசீலனையில் அதிமுக, பாஜக வேட்பாளர்களின் மனுக்கள் தவிர, பிற வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, அதிமுக, பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டது.
திடீர் திருப்பம்: இந்த நிலையில், திடீர் திருப்பமாக, பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் போட்டியிலிருந்து திங்கள்கிழமை விலகினார். தேர்தல் கமிசனோடு கூட்டணி தொடரும் வரையில் ஜெயலலிதாவின் வெற்றி தொடரும் ! இது ஒன்னும் உலக மகா ரகசியம் அல்ல ,
மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த அவர், வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான படிவத்தை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவருமான அர. லட்சுமியிடம் காலை 11.15 மணிக்கு அளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர், போட்டியில் வேறு யாரும் இல்லாத நிலையில், அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரி மேயராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். அதற்கான சான்றிதழை புவனேஸ்வரியிடம் அவர் வழங்கினார். dinamani.com

கருத்துகள் இல்லை: