கோவை: தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர்
பதவி, 8 நகராட்சி தலைவர் பதவி உள்பட காலியாக உள்ள 3,075 உள்ளாட்சி பதவி
இடங்களுக்கு வருகிற 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க.,
தே.மு.தி.க. உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் மட்டும் தேர்தலை சந்திக்கின்றன. வேட்பு
மனுதாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதியோடு
நிறைவடைந்தது.
மறுநாள் (5-ஆம்தேதி) மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. 8-ஆம் தேதி மனுக்கள்
வாபஸ் நடந்தது.
நெல்லை மேயர் தேர்வு
இதில் நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு மனுதாக்கல் செய்திருந்த
வெள்ளையம்மாள் கடைசி நேரத்தில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். வேறுயாரும்
மனு தாக்கல் செய்யாததால் அ.தி.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி
நெல்லை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரவீன் குமாரு ரொம்ப நல்லவரு ! கண்டுக்கவே மாட்டாரு பூந்து விளையாடு நையனா
மேலும் 8 நகரசபை தலைவர் பதவிகளில் சங்கரன்கோவில், கொடைக்கானல்,
புதுக்கோட்டை, குன்னூர் ஆகிய 4 இடங்களில் அ.தி. மு.க. வேட்பாளர்கள்
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 7 பேரூராட்சி தலைவர் பதவிக்கு
நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வார்டுகளில் 4 பேரும், 53 நகராட்சி வார்டுகளில் 30 பேரும், 106
பேரூராட்சி வார்டுகளில் 64 பேரும், 11 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 4
பேரும், 82 பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 48 பேரும், 141 கிராம
பஞ்சாயத்து தலைவர் பதவிகளில் 49 பேரும், 1,707 கிராம பஞ்சாயத்து
வார்டுகளில் 1,384 பேரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.
மொத்தம் 1,589 அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் தாம்பரம் நகராட்சி 7-வது வார்டு, 33-வது வார்டுகளில்
அ.தி.மு.க. வேட்பாளர்கள் நாகூர்கனி, கோமளா ஆகியோர் கவுன்சிலர்களாக
போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர்.
பல்லாவரம் நகராட்சி 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.கணேசன்
கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
பொழிச்சலூர் ஊராட்சி 10-வது வார்டில் அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஆறுமுகம்,
முடிச்சூர் ஊராட்சி 4-வது வார்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா பிள்ளை
ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள்.
மீதம் உள்ள 2 மாநகராட்சி மேயர், 4 நகராட்சி தலைவர் பதவி உள்பட 1,486
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்தும்,
தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக