திங்கள், 8 செப்டம்பர், 2014

தூத்துக்குடியில் பாஜக மேயர் வேட்பாளர் விலகாவிட்டால் அதிமுக அமைச்சர் செல்லபாண்டியன் பதவி கோவிந்தா !

நெல்லை மேயர் இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் திடீரென விலகியது போல தூத்துக்குடியிலும் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமிக்கும் குறிப்பிட்ட தரப்பிலிருந்து விலகிக் கொள்ளுமாறு நெருக்கடி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு வேளை அவர் விலகாவிட்டால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்லப் பாண்டியன் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்து விடும் என்றும் அதிமுக தரப்பில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. நெல்லை மேயர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் புவனேஸ்வரியும், பாஜக சார்பில் வெள்ளையம்மாளும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான இன்று திடீரென வெள்ளையம்மாள் தனது மனுவைத் திரும்பப் பெற்று அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். இதனால் அதிமுக வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வாகிறார்.ஏன்தான் இவ்வளவு கஷ்டபடுகிராகளோ? அதாய்ன்  இருக்கவே  இருக்காரில்ல நம்ப பிரவீன் ?
இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மேயர் இடைத் தேர்தலிலும் இதேபோல நடக்கப் போவதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. அங்கு அதிமுக சார்பில் அந்தோணி கிரேசியும், பாஜக சார்பில் ஜெயலட்சுமியும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதில் ஜெயலட்சுமியை வாபஸ் வாங்க வைக்க சிலர் தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஜெயலட்சுமியும் நெருக்குதலுக்குப் பணிந்து வாபஸ் பெறலாம் என்ற பரபரப்பும் நிலவுகிறது. ஒருவேளை ஜெயலட்சுமி வாபஸ் பெறாவிட்டால் அமைச்சர் பதவியிலிருக்கும் செல்லப்பாண்டியன் பதவிக்கு ஆபத்து வரலாம் என்றும் அதிமுகவினர் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது. சங்கரன்கோவில் 2 சுயேச்சைகள் விலகல் - அதிமுக வெற்றி இதற்கிடையே, சங்கரன்கோவில் நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் ராஜலட்சுமியும், சுயேச்சைகளாக தெய்வானை மற்றும் மாரியம்மாள் ஆகியோரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து கடந்த 2 நாட்களாக இரு சுயேச்சைகளிடமும் குறிப்பிட்ட தரப்பிலிருந்து தீவிரப் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறுகிறார்கள். இதன் விளைவாக தெய்வானையும், மாரியம்மாளும் இன்று தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதனால் அதிமுக ராஜலட்சுமி போட்டியின்றி தேர்வாகிறார்.

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: