சனி, 27 செப்டம்பர், 2014

ஜெ. கைதி எண்: 7402- சிறைக்கு வெளியே கண்ணீரும், கம்பலையுமாக அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்

10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை வழங்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பரப்பன அக்ரஹாராவில் உள்ள அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  ஜெயலலிதாவுக்கு கைதி எண் 7402 அளிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு 7403, சுதாகரனுக்கு 7404, இளவரசிக்கு 7405 ஆகிய எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் நான்கு பேரும் சிறைக்குள் இருக்க அதிமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சிறைக்கு வெளியே கவலையுடன் அமர்ந்துள்ளனர். சிறைக்கு வெளியே கவலையும், கண்ணீருமாக அதிமுகவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உணவு: சிறையில் அறை எண் 23ல் அடைக்கப்பட்ட ஜெயலலிதா இரவில் சாப்பிட உணவும், பழங்களும் வாங்கினார் ஓ. பன்னீர் செல்வம். அதை அவர் சிறை வளாகத்திற்குள் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அளித்து ஜெயலலிதாவிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: