செவ்வாய், 23 செப்டம்பர், 2014

சுப்ரமணியம் சாமி மீது ஜெயா மேலும் இரண்டு கிரிமினல் வழக்குகள் ! சு சாமியை கைது பண்ணும்வரை ஓயமாட்டார் ?

சுப்பிரமணியசாமி மீது மேலும் 2 கிரிமினல் அவதூறு வழக்குகள் சென்னை செசன்சு கோர்ட்டில் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. ஆதாரமற்ற கருத்துக்கள் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் தாக்கல் செய்துள்ள கிரிமினல் அவதூறு வழக்கில் கூறியிருப்பதாவது: பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்பிரமணியசாமி, தன்னுடைய டுவிட்டர் இணையதளம் பக்கத்தில் கடந்த 20-ந் தேதி, ”ஜெயலலிதாவுக்கு ஜெயில்”என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில், முதல்-அமைச்சரை பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கள் அனைத்தும் தவறான, ஆதாரமற்றதாகும். சு சாமிமீது ஜெயா கொண்டிருக்கும் கோபத்தின் பின்னணியில் எதோ ஒரு உள்குத்து இருக்கிறது, இரண்டு பேருமே பிராடுகள் . இருவருமே பல விடயங்களை மறைக்கிறார்கள் ? சாமியை ஒரு வழிபண்ணுவதில் ஜெயா மிக தீவிரமாக இருப்பது தெரிகிறது , பல நாள் கள்ளர் இருவரும் மாட்டிகிடும்  நாள் வந்துவிட்டது ?

உள்நோக்கம்


சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக அவரை பற்றி உள்நோக்கத்துடன் இந்த கட்டுரையை சுப்பிரமணியசாமி வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.அதேபோல முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்துள்ள மற்றொரு அவதூறு வழக்கில் கூறியிருப்பதாவது:

சொத்துக்குவிப்பு

சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் இணையதளம் பக்கத்தில் கடந்த 17-ந் தேதி ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில், நீலகிரியை சேர்ந்த பா.ஜ.க.வினர், என்னை சந்தித்து கொடநாட்டில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு உள்ள சொத்து விவரங்களை எனக்கு தந்துள்ளனர். அதனடிப்படையில், மேலும் ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார். இது ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டுகளாகும். முதல்-அமைச்சருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட கட்டுரையாகும். எனவே, சுப்பிரமணியசாமி மீது அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

5 வழக்குகள்


இந்த 2 வழக்குகளும், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. ஏற்கனவே சுப்பிரமணியசாமி மீது ஜெயலலிதா சார்பில் 3 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது மேலும் 2 வழக்குகள் தாக்கல் செய்துள்ளதால், சுப்பிரமணியசாமி மீது இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்கின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: