வெள்ளி, 26 செப்டம்பர், 2014

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு நாளை ! தப்பி தவறி அம்மாவுக்கு ஜெயில் என்றால் மீண்டும் கொலை கொள்ளை எரிப்புக்கள் அரங்கேறுமா ? மக்கள் பீதி !

சென்றமுறை தர்மபுரியில் கல்லூரி மாணவர்கள்
சென்ற பேருந்தை எரித்து அதில் பயணம் செய்த மாணவர்களில் சிலரை கொலை செய்தார்கள் அதிமுக கட்சிக்காரர்கள். இன்னும் கூட தண்டனை பெற்ற அந்த கொலைக் குற்றவாளிகளுக்கு அதிமுக ஆதரவு தருகிறது... இது ஒன்றே போதும் இவர்கள் அயோக்கியர்கள் என்று அறுதியிட்டு கூற... அம்மாஜிக்கு தண்டனை கிடைத்தால் கண்டிப்பாக ஏராளமான பொதுச்சொத்துகளுக்கும் பொது மக்களுக்கும் சேதம் விளைவிக்க தயங்கமாட்டார்கள். பொதுமக்கள் கவனமாக இருப்பதே நல்லது... 
பெங்களூரு:தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், நாளை, தீர்ப்பளிக்கப்படுகிறது. இதனால், தீர்ப்பு வழங்கப்படும், பரப்பன அக்ரஹாரா தற்காலிக நீதிமன்றம் உட்பட பல பகுதிகளில், அதிக பட்ச பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஒசூர் வழியாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய, நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பை, இந்தியா முழுவதுமே ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதற்காக, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள, "தற்காலிக நீதிமன்றம்' தயாராக உள்ளது. நீதிமன்றம் முன், போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அருகில், பரப்பன அக்ரஹாரா போலீஸ் ஸ்டேஷன், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையிலுள்ள கைதிகளை பார்க்க வருபவர்கள், "பெட்டிஷன்' போடும் மையம் உள்ளது. சிறையை தாண்டி, போலீஸ் குடியிருப்பும் உள்ளது.
பெங்களூரு-ஒசூர் ரோட்டிலிருந்து, பரப்பன அக்ரஹாராவுக்கு திரும்பும் பாதையிலேயே, போலீஸார் சோதனை தீவிரப்படுத்தப்படவுள்ளது. அதுவும், சிறையின் அருகில், அரை கிலோ மீட்டர் பகுதியை, போலீஸார், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். போலீஸ் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அப்பகுதியில், கைதிகளை பார்க்க வருவோரை, சோதனையிட போலீஸ்காரர் ஒருவர் இருப்பார். தற்போது, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தள்ளுவண்டி எதுவும் நிறுத்தப்படக்கூடாது என்று போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றிலும் செடி, கொடிகள் காணப்படும். இந்த இடத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று, ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் வந்திறங்கும் முதல்வர் ஜெயலலிதா, கார் மூலம் பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு வருவார் என்று தெரிகிறது. கடந்த முறையும் இதே போன்று தான் வருகை தந்தார். வழி நெடுகிலும் போலீஸார், பாதுகாப்புக்கு நிறுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு பற்றி, பெங்களூருவில், நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறியதாவது:பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை முன் பகுதியிலுள்ள, காந்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள, தற்காலிக நீதிமன்றத்தில், ஜெயலலிதா தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியாகிறது. நாளை (இன்று) முதலே, பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை சுற்றுப்பகுதிகளில், போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. பாதுகாப்பு தொடர்பாக, ஏற்கனவே, தமிழகத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் கர்நாடகா அதிகாரிகள் விவாதித்துள்ளனர்.இரு மாநில அதிகாரிகளும் சேர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். பாதுகாப்பு பணி தொடர்புடைய, தகவல்களை விநாடிக்கு விநாடி பகிர்ந்து கொள்கிறோம். பாதுகாப்புக்காக, மத்திய படைகளை நியமிக்கும்படி, நாங்கள் கேட்கவில்லை. நாங்களே, தேவைக்கு அதிகமாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டிருப்பதால், மத்திய பாதுகாப்பு படையினரின் உதவி தேவைப்படவில்லை.கர்நாடகா மாநில ஆயுதப்படை உட்பட பாதுகாப்புக்காக, கூடுதல் போலீஸார் நியமிக்கப்படுவர். தீர்ப்பு வெளியாகும் வேளையில், தமிழகத்திலிருந்து வருபவர்களை கட்டுப்படுத்தி, எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டுவிடாமல், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அமைச்சர்களில் பலர், நேற்றே பெங்களூரு வந்துள்ளதாக தெரிகிறது. இது மட்டுமின்றி, தமிழக அ.தி.மு.க., வினரும் பெங்களூரு வருவதற்கு தயாராகி வருகின்றனர். கடந்த முறை ஜெயலலிதா, பரப்பன அக்ரஹாரா வந்திருந்த போது, தமிழக எல்லையான, அத்திபலே செக் போஸ்டில், தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை, கர்நாடகாவுக்கு நுழைய, போலீஸார் அனுமதி மறுத்தனர். அதிலும், அ.தி.மு.க., கரை வேஷ்டி கட்டியவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. dinamalar.com

கருத்துகள் இல்லை: