செவ்வாய், 8 ஜூலை, 2014

வறுமைக்கோடு வரையறை சர்ச்சை: கட்சிகள் கடும் எதிர்ப்பு !

புதுடில்லி : 'நகர்ப்புறங்களில், தினமும் 47 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களையும், கிராமப்புறங்களில், 32 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களையும், ஏழைகளாக கருதக் கூடாது' என, மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. நிபுணர் குழுவின் இந்த வறுமைக் கோடு வரையறை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
பிறகு எதற்கு நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கு 120 ரூபாய் என்று நிர்ணயம் செய்தீர்கள் ? பேசாமல் கிராமத்தானுக்கு 25 ரூபாயும் நகரத்தானுக்கு 30 ரூபாயும் என நிர்ணயம் செய்தால் குறைந்தது கிராமப்புறத்தில் தோட்டங்களிலும் வயல்களிலும் வேலை செய்ய ஆட்களாவது கிடைப்பார்கள். அரசுக்கும் இதில் பணம் மிச்சமாகும். நீண்டால் ரயிலிலோ பஸ்ஸிலோ காசு கொடுத்து டிக்கட் வாங்கி பயணம் செய்தது உண்டா ? வீட்டிற்கு கரண்ட் பில் கட்டியதுண்டா ? ஸ்கூலுக்கு குழந்தைகளுக்கு பீஸ் கட்டியதுண்டா ? டொனேசன் கொடுத்தது உண்டா / சந்தையில் காய்கறியை காசு கொடுத்து வாங்கியத்ண்டா ? துணியை வெளுத்ததுண்டா ? அதை இஸ்திரி போடா காசு கொடுத்ததுண்டா ? போலீஸ் உங்களை பிடித்து விசாரித்து விட்டபோது மனம் என்ன பாடு படும் என்று தெரியுமா ? அங்கே செலவாகும் கணக்கு தெரியுமா ? குளிர்சாதன அறைக்குள் எவனோ வரிகட்டிய பணத்தில் எல்லா சுகங்களையும் அனுபவிக்கும் உங்களுக்கு சாதாரண மக்களின் பாடு எப்படி புரியும் ? நாற்கர சாலையில் எவ்வளவு கொள்ளை நடக்கிறது என்று போய் பாருங்கள். எத்தனை காலம் வரி வசூல் செய்வது என்ற போர்டோ எத்தனை வசூல் செய்வது ?என்ற போர்டோ இதுவரை எத்தனை வசூல் ஆனது இன்னுமெவ்வளவு வசூல் ஆகவேண்டும் என்ற போர்டோ எங்குமே இல்லையே அதை கவனியுங்கள். உங்கள் அஜாக்கிரதையால் மக்கள் பணம் எவ்வளவு கொள்ளை அடிக்க படுகிறது தெரியுமா ? கேள்வி கேட்க ஆளில்லாமல் எல்லாமே நடக்கிறது.மோடி அவர்கள் இதில் தனி கவனம் செலுத்துவதே சிறப்பு. தனியார் மருத்துவ மனைகளில் அதிகாரிகளின் வியாதிக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து சொந்த பணத்தை கட்டினால் வறுமை கோடு என்றால் என்ன என்பது புரியும்
முந்தைய, காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில், 'நகர்ப்புறங்களில், தினமும் 33 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களும், கிராமப்புறங்களில், 27 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களும், வறுமைக் கோட்டு வரம்பிற்கு கீழ் வர மாட்டார்கள். இவர்கள், ஏழைகள் அல்ல' என, திட்ட கமிஷன் தெரிவித்திருந்தது. இதற்கு, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், மூத்த பொருளாதார அறிஞருமான ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு, வறுமைக் கோடு வரையறை குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசிடம், புதிய பரிந்துரையை அளித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நகர்ப்புறங்களில், தினமும் 47 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களையும், கிராமப்புறங்களில், 32 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களையும் ஏழைகளாக கருதக் கூடாது. இவர்களை, வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களாக கருத வேண்டும்.

அதிகரிப்பு:



நம் நாட்டில் வசிக்கும், 10 பேரில், மூன்று பேர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். 2011 - 12ம் ஆண்டு நிலவரப்படி, நம் நாட்டில், 36 கோடி பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றனர். முந்தைய ஆண்டை விட, தற்போது, 10 கோடி பேர் அதிகரித்துள்ளனர்.
இவ்வாறு, அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, ஆளும் கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மத்திய அமைச்சர் உமா பாரதி கூறுகையில், ''நிபுணர் குழுவின் இந்த அறிக்கை, மிகவும் தவறானது. தற்போதுள்ள விலைவாசியை ஒப்பிடுகையில், இந்த தொகை மிகவும் குறைவானதே. இதுகுறித்த என் எதிர்ப்பை மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தெரி விப்பேன்,'' என்றார்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூறுகையில், ''ஏழை மக்களின் துயரங்களை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில், இந்த பரிந்துரை உள்ளது,'' என்றார்.

சமாஜ்வாதி மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் கூறுகையில், ''ரங்கராஜனுக்கு, தினமும் 100 ரூபாய் தரத் தயார். இந்த தொகையை வைத்து, இந்தியாவின் ஏதாவது ஒரு கிராமத்தில், அவர் வாழ்க்கை நடத்தி காட்டட்டும்,'' என்றார் dinamalar.com

கருத்துகள் இல்லை: