புதன், 7 ஆகஸ்ட், 2013

ஜேம்ஸ் வசந்தன் ஹேமலதா: கமிஷனரும், ராதாவும் ஒரே மாநிலத்தை KERALA சேர்ந்தவர்கள் ! சாதாரண விஷயத்திற்கு பெண் வன்கொடுமை வழக்கா?


எங்கள் வீட்டின் பின்புறம் ராதா பிரசா:த் என்பவர் வீடு கட்டி உள்ளார். இவர்கள் வீடு கட்டிய நாள் முதல் தொடர் பிரச்னைதான். 3 ஆண்டுகளாக தொடர்ந்து தகராறு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராதாவை நான் கத்தியால் குத்த முயன்றதாக பொய் புகார் அளித்தார். சென்னை : சாதாரண குற்றத்திற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி ஹேமலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண்ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார். அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 4ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து ஜேம்ஸ் வசந்தனின் மனைவி ஹேமலதா கூறியதாவது: எங்கள் வீட்டின் பின்புறம் ராதா பிரசா:த் என்பவர் வீடு கட்டி உள்ளார். இவர்கள் வீடு கட்டிய நாள் முதல் தொடர் பிரச்னைதான். 3 ஆண்டுகளாக தொடர்ந்து தகராறு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராதாவை நான் கத்தியால் குத்த முயன்றதாக பொய் புகார் அளித்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது, என் கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளார். 65 வயதான அவரை எனது கணவர் ஆபாசமாக திட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எந்த உண்மையும் இல்லை. சாதாரண ஒரு வழக்கிற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதில், உள்நோக்கம் உள்ளது. ராதா தொடர்ந்து எங்கள் பகுதியில் தகராறு செய்து வருகிறார். இவரால் எங்கள் பகுதி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி மக்களிடம் இதுகுறித்து கேட்டால் உண்மை வெளி வரும். தவறு செய்த போலீசார் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனரும், ராதாவும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதனால்தான், என் கணவர் மீது பொய்யான புகாரின் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
யாரை திருப்திப்படுத்த இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் புரியாத புதிராக உள்ளது.
இவ்வாறு ஹேமலதா கூறியுள்ளார்.

நிபந்தனை ஜாமீன்

 ஜேம்ஸ் வசந்தனை ஜாமீனில் விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர் கணேசன் நேற்று முன்தினம் ஆலந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி வித்யா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி வித்யா, ஜேம்ஸ் வசந்தனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும், வெள்ளி, திங்கள்கிழமைகளில் விசாரணை அதிகாரி முன்னர் ஆஜராகவும் உத்தரவிட்டார். dinakaran,com

கருத்துகள் இல்லை: