செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

ஷர்மிளா: ஜெகனின் அரசியலை தடுக்கவே தெலுங்கனா பிரிவினை

ஜெகன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவே தெலுங்கானா: ஷர்மிளா
சாடல்! ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகனின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடவே தெலுங்கானா தனி மாநிலத்தை காங்கிரஸ் உருவாக்கியுள்ளதாக அவரது சகோதரி ஷர்மிளா சாடியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஷர்மிளா, தனி தெலுங்கானா அமைக்கும் மத்திய அரசின் முடிவானது அதிர்ச்சி அளிக்கிறது. எனது சகோதரர் ஜெகனின் செல்வாக்கு அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவே காங்கிரஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்றார். ஜெகன் மோகன் ரெட்டி 2011ஆம் ஆண்டு காங்கிரஸை விட்டு வெளியேறினார். ராயலசீமா, கடலோர ஆந்திரா மாவட்டங்களில் ஜெகனின் ஆதரவு காங்கிரஸை திகிலடைய வைத்தது. இதைத் தொடர்ந்து அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 14 மாத காலமாக ஜெகன் சிறையில் இருக்கிறார். இருப்பினும் ஷர்மிளாவும் அவரது தாயாரும் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: