சனி, 10 ஆகஸ்ட், 2013

போலீஸ் முன்பாகவே தமிழ் நாய் என இழிவுப்படுத்திய மலையாளி அதிகார வர்க்கம் : ஜேம்ஸ் வசந்தன் ஆவேசம் !

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத். இவர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொய் வழக்கு போட்டு காவல்துறை கைது செய்தது குறித்து தமிழக முதல்வர் முழு விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை வைத்தார்.
65 வயது மூதாட்டிக்கு தான் எவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும் என்றும், தன் மீது நிலப் பிரச்சனை காரணமாக வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் என்றும், இதற்கு பின்னணியில் பெரிய மலையாளி அதிகார ஊடுருவல் இருப்பதாகவும் தெரிவித்த அவர், காவல்துறை முன்னிலையில் தன்னை தமிழ் நாய் என்று ராதாதேவிபிரசாத் இழிவு படுத்தியதாகவும், இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை அப்புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஜேம்ஸ் வசந்தனுடன், அவரது மனைவியும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். காவல் துறையால் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்று அவர் கூறினார்.
இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார், சின்னத்திரை கலைஞர்கள் உமா பத்மநாபன், விஜய் ஆதிராஜ் ஆகியோர் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதராவாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி கொடுத்தனர்.
நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், மே 17 இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி, தமிழர் பண்பாட்டு நடுவம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சி இயக்கங்களின் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், ஜேம்ஸ் வசந்தனை 'தமிழ் நாய்' என்று இழிவு படுத்திய பெண்மணிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இழிவு படுத்தி பேசியதற்கு அப்பெண் உடனடியாக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில்
அந்த பெண்ணின் வீடு முற்றுகையிடப்படும் எனவும் தெரிவித்தனர்.
படங்கள்: அசோக்nakkheeran.in

கருத்துகள் இல்லை: