புதன், 6 மார்ச், 2013

Rahul: காங்கிரஸ்காரங்களுக்கு பதவி ஆசை இல்லையாம்.

புதுடில்லி: ""பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். இது, தவறான கேள்வி. பிரதமர் பதவி மீது, எனக்கு விருப்பம் இல்லை. உடனடியாக திருமணம் செய்வதிலும், எனக்கு ஆர்வம் இல்லை. திருமணம் செய்தால், குழந்தைகள் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும்,'' என, காங்., துணை தலைவர் ராகுல், பரபரப்பு தகவலை தெரிவித்தார்.லோக்சபா தேர்தலுக்கான, காங்., ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராகவும், கட்சியின் துணைத்தலைவராகவும், ராகுல், 42, சமீபத்தில் நியமிக்கப்பட்டார். "லோக்சபா தேர்தலில், காங்., பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்' என்றும், கூறி வந்தனர்.இந்நிலையில், காங்., எம்.பி.,க்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது, ராகுல் கூறியதாவது: கட்சியின் அனைத்து விவகாரங்களையும், மேலிடம் தான் முடிவு செய்யும் என்ற மனப்பான்மை, கட்சியினரிடம் உள்ளது. காங்., மேலிட கலாசாரம், 1970களில், இந்திரா காலத்திலிருந்தே உள்ளது. அவரைப் பற்றி, எனக்கு நன்கு தெரியும். அவர், பல்வேறு தரப்பினரின் தாக்குதலுக்கு ஆளானார். இதனால், கட்சி மேலிடத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். அவர் நிலையில் நான் இருந்தாலும், அப்படித் தான் செய்திருப்பேன். என்னை பொறுத்தவரை, கட்சி மேலிடம் என்ற அணுகுமுறைக்கு, முதலில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கட்சிக்காக, பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு, அதிகாரம் கொடுக்க வேண்டும். கட்சியின் அடிமட்டத்திலும், இடையிலும் உள்ள நிர்வாகிகளின் நலனுக்காக, குரல் கொடுக்க விரும்புகிறேன். நம் நாட்டில் உள்ள கட்சிகளை பொறுத்தவரை, பகுஜன் சமாஜ் கட்சிக்கு, ஒரு தலைவரும், சமாஜ்வாதிக்கு இரண்டு தலைவர்களும் உள்ளனர். பா.ஜ.,வுக்கு, ஐந்திலிருந்து ஆறு தலைவர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு, 15லிருந்து, 20 தலைவர்கள் உள்ளனர். என் விருப்பமெல்லாம், அனைத்து கட்சியிலும் உள்ள, எம்.பி.,க்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும், அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பதே.  
ரொம்ப நல்ல முடிவு , திருமணம் செய்தால் அடுத்து உனக்கு ஒருவன் பிறப்பான் , அவன்தான் அடுத்த பிரதமர் என்று எல்லோரும் அவன் பின்னால் போவதற்கு , நீங்கள் இப்படியே இருக்கலாம் , அடுத்த தலைமுறையாவது உங்கள் குடும்ப தொந்தரவு இல்லாமல் இருக்கட்டுமே ப்ளீஸ்

பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா என, பலரும் என்னிடம் கேட்கின்றனர். பிரதமர் பதவி மீது, எனக்கு விருப்பம் இல்லை. உடனடியாக திருமணம் செய்யும் திட்டமும் இல்லை. திருமணம் முடித்தால், குழந்தைகள் நலனுக்காக செயல்பட வேண்டியிருக்கும். என் இடத்துக்கு, என் குழந்தைகள் வர வேண்டும் என, விரும்புவேன். கட்சியின் அடிமட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை, மாற்றம் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தான், என் குரு; பலனை எதிர்பார்க்காமல், கடமையை செய்யும் கொள்கையை, மகாத்மா காந்தி பின்பற்றினார். அதே கொள்கையைத் தான், நானும் பின்பற்றுகிறேன். மேற்கத்திய நாடுகளின் அரசியல், நம் நாட்டுக்கு ஒத்து வராது. நாடு முழுவதும், பல்வேறு கிராமங்களுக்கு சென்று, ஏராளமான மக்களை சந்தித்து பேசியுள்ளேன். அவர்களிடம் பேசியதிலிருந்து, மேற்கத்திய அரசியல், நமக்கு சரிவராது என்பதை, என்னால் உணர முடிந்தது. இவ்வாறு ராகுல் கூறினார். ராகுலின் இந்த கருத்து, பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. "காங்கிரசின் பிரதமர் வேட்பாளர்' என, அனைவரும், ராகுலை எதிர்பார்த்த நிலையில், பிரதமர் பதவி, திருமணம் போன்ற விஷயங்களில், அவர், தடாலடியான கருத்தை தெரிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் பெருமிதம்: ராகுல் பேசியது குறித்து, காங்., செய்தி தொடர்பாளர், ரஷீத் ஆல்வி கூறியதாவது: மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள், பதவியை பெறுவதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்வதை பார்த்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் தலைவர்கள், பதவிக்காக ஆசைப்படுவது இல்லை என்பதை, ராகுலின் பேச்சு, நிரூபித்துள்ளது. ராகுலும், சோனியாவும், பதவி அவர்களை தேடி வந்தாலும், அதற்காக ஆசைப்பட்டது இல்லை. பதவி வேண்டாம் என்பது, ராகுலின் தனிப்பட்ட விருப்பம். காங்கிரஸ் தொண்டர்களை பொறுத்தவரை, எதிர்காலத்தில், ராகுல், பிரதமர் பதவியில் அமர வேண்டும் என்று தான், விரும்புகின்றனர். விரைவில், காங்., தொண்டர்களின் விருப்பம் நிறைவேறும். அதற்காக, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது இல்லை, என்றார்.

கருத்துகள் இல்லை: