வியாழன், 23 ஆகஸ்ட், 2012

Chennai IIT பற்றி அவாள் ஏடே கூறுகிறது அசல் அக்கிரகார ஆதிக்க நிறுவனம்


 சென்னை IIT என் பது அசல் அக்கிரகார ஆதிக்க நிறுவனமாக நடைபெற்று வருவது பற்றி விடுதலை பலமுறை எழுதி வந்திருக் கிறது. அந்த நிறுவனம் பற்றி அக் கிரகார ஏடான தினமணியே என்ன கூறுகிறது படியுங்கள் சென்னை கிண்டியில் உள்ள இந்திய தொழில்நுட் பக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் அவமதிக் கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுவது அந்த நிறு வனம் சட்டத்திற்கு அப்பாற் பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) என்றதும், அது சர்வதேச தரத்தில் தலை சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருவதோடு மட்டு மல்லாமல், அங்கிருந்து சிறந்த விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் உருவா கின்றனர் என்பதும்தான் அனைவரின் நினைவுக்கு வரும். ஆனால் அண்மைகால மாக அங்கு நடைபெறும் சம் பவங்கள் அந்த தோற்றத்தை வலுவிழக்கச் செய்து வரு கிறது.
மாணவர்கள் தற்கொலை:

சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 8 மாதங்களில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்கள் பல்வேறு காரணங் களுக்காக தற்கொலை செய் திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் குடும்பச் சூழ்நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தான் அவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகின்றது.
பல்வேறு வழிகளில் பேரா சிரியர்களின் நெருக்கடி, படிப் புச் சுமை உள்ளிட்ட காரணங் களாலேயே இதுபோன்ற தற் கொலைகள் நடைபெறுகின் றன என மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் கூறப் படுகின்றது.
இந்த நிலையில், நாட்டின் உயரிய கல்வி நிறுவனத்தில் இதுபோன்ற தொடர்ந்து நடைபெற்று வரும் மர்ம தற்கொலைகளுக்கான கார ணம் மற்றும் அதை தடுப்ப தற்கான நடவடிக்கைகள் குறித்து செய்தி சேகரிக்க பத் திரிகையாளர்கள் அனுமதிக் கப்படாதது, அந்த கல்வி நிறுவனம் குறித்து சமூக ஆர் வலர்களிடம் சந்தேகத்தை மேலும் வலுப்பெறச் செய்து உள்ளது.
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்:
பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக அவமதிக்கப் படுவதும், தாக்கப்படுவதும் ஐ.ஐ.டி. பற்றிய நல்லெண் ணத்தை மாற்றி வருகிறது. ஐ.ஐ.டி.யில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு தனியார் தொலைக் காட்சி கேமராமேன் தாக் கப்பட்டுள்ளார்.
இதேபோல 2011-லும் தனியார் தொலைக் காட்சி கேமராமேன் தாக் கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தகராறு செய் ததற்காக தாக்கப்படவில்லை, அவர்களது பணியைச் செய்யும் போது தாக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஏப்ரல் மாதம் மாண வர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர் பாக செய்தி சேகரிக்கச் சென்ற பெண் செய்தியாளர் ஒருவர், ஐ.ஐ.டி. பாதுகாவலரால் அவ மதிக்கப்பட்டார். இப்போது அதற்கும் ஒருபடி மேலே சென்று செவ்வாய்க்கிழமை அங்கு தற்கொலை செய்து கொண்ட மாணவியை புகைப்படம் எடுக்கச் சென்ற "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' புகைப்பட கலைஞர் ஆல்பின் மாத்யூவை, ஐ.ஐ.டி. பேராசிரி யர் ஒருவரே ரத்த காயம் ஏற்படும் வரை தாக்கியுள் ளார்.
பத்திரிகையாளர்கள் தாக் கப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும், ஒவ் வொரு இடத்திலும் சமூக விரோதிகளாலும், ரௌடி களாலும், அரசியல்வாதி களாலும் பத்திரிகையாளர் கள் இதுவரை தாக்கப்பட்ட னர். ஆனால் முதல்முறையாக நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக அறியப்படும் ஐ.ஐ.டி.யில் பேராசிரியரால் புகைப்படக் கலைஞர் தாக் கப்பட்டுள்ளார். அதுவும் புகைப்பட கலைஞர் தனது பணியைச் செய்யச் சென்ற போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஐ.ஐ.டி. வளாகத்தில் நடை பெறும் குற்றச் சம்பவங்களை மட்டுமன்றி, அங்கு நடை பெறும் கருத்தரங்கு உள்ளிட்ட நல்ல நிகழ்ச்சிகளுக்கு செய்தி சேகரிக்கச் செல்லும் பத் திரிகையாளர்களையும், புகைப்பட கலைஞர்களையும் பல்வேறு நெருக்கடிக்கு உட் படுத்தியும், அவமதிக்கும் வகையில் ஐ.ஐ.டி. நிர்வாகம் செயல்படுவது, அந்த நிறு வனம் தாங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்பதைப் போன்ற தோற் றத்தை ஏற்படுத்துகிறது.
சட்டத்திற்கு அப்பாற் பட்டவர்களா? அதேபோல மாணவர்களுக்கு நல்ல ஒழுக் கத்தையும், அறிவையும் புகட்ட வேண்டிய ஒரு ஆசிரியர், இப்படி அநாகரீகமாகவும், ரௌடி போலவும் நடந்து கொள்வது அந்த அமைப்பின் ஒட்டுமொத்த கௌரவத்தை யும் குறைக்கிறது.
அதோடு மட்டுமின்றி இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி தொடர்ச்சியாக நடைபெற்று வந்தபோதிலும், ஐ.ஐ.டி. தன்னுடைய அணுகு முறையை சிறிதும் மாற்றிக் கொள்ளாமல் செயல்படுவது அந்த அமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒவ்வொரு முறையும் பத் திரிக்கையாளர்கள் அவமதிக் கப்பட்டு தாக்கப்படும்போது ஐ.ஐ.டி. நிர்வாகம், அந்தத் தவறை உணர்ந்து அது போன்ற தவறு அடுத்து நடை பெறாமல் இருப்பதற்குரிய நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால்தான் மீண்டும், மீண்டும் இதுபோன்ற சம்ப வங்கள் அங்கு நடைபெறு கின்றன

கருத்துகள் இல்லை: