சென்னை: ""அ.தி.மு.க., எங்கள் இயல்பான கூட்டணிக் கட்சி,'' என, பா.ஜ.,வின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான அத்வானி கூறினார். அவரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் நேற்று சென்னை வந்தனர். அத்வானி, தனியார் விமானம் மூலம் டில்லியிலிருந்து நேற்று மதியம் 2.00 மணிக்கு வந்தார். மோடி, தனி விமானம் மூலம் ஆமதாபாத்திலிருந்து 2.45க்கு வந்தார். அவரை, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். சமீபத்தில் காலமான, அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் நம்பியார் வீட்டுக்குச் சென்ற இருவரும், அவரது உறவினர்களிடம் ஆறுதல் கூறினர். அங்கிருந்து கிளம்பி, "துக்ளக்' ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அத்வானி பேசியதாவது: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருக்கும் நிலையில், சோவுடைய நிகழ்ச்சியில் அத்வானியும், மோடியும் கலந்து கொண்டால், கிசுகிசுக்களுக்குப் பஞ்சமிருக்காது.
பார்லிமென்டில் பா.ஜ., பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது. மத்திய அரசின் தவறான செயல்பாடுகளைக் கண்டிக்கும் பிரச்னைகளில், அ.தி.மு.க., எங்களுக்கு எந்தக் குறைவுமற்ற, முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்த இடத்தில் நான், ஒன்றை தெளிவுபடுத்திட விரும்புகிறேன். அ.தி.மு.க.,வும், நாங்களும் இயல்பான கூட்டணியாக இருக்கிறோம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மத்திய, மாநில அரசுகளின் உறவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில், பா.ஜ.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் பொதுவான கொள்கைகள் நிறைய இருக்கின்றன. மற்றபடி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை, இப்போதே அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இவ்வாறு அத்வானி பேசினார்.
நரேந்திர மோடி பேசியதாவது: காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை, மத்திய அரசு, பழி வாங்கும் போக்கில் நடத்துகிறது. மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆண்டால், அவர்களை சகல வித்தைகளையும் கையாண்டு பழி வாங்குகிறது. சமீபகாலமாக, தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி, அவர்களை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. அதற்கு முக்கிய சாட்சியமாக நான் திகழ்கிறேன். சி.பி.ஐ., வருமான வரித்துறை, நீதித்துறை என, தங்களின் கட்டுப்பாட்டில் எத்தனை துறைகள், முகமைகள் இருக்கின்றனவோ, அத்தனையையும் பயன்படுத்தி தொந்தரவு கொடுத்துப் பார்க்கிறது. வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் குறட்டை விட்டுக் கொண்டிருக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள், நாட்டுக்கே பேராபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறியிருக்கின்றன. பயங்கரவாதத் தடுப்பு, வளர்ச்சிப் பாதை, பொருளாதார முன்னேற்றம் என, அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்த அரசாக, மத்திய அரசு திகழ்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.
"துக்ளக்' ஆசிரியர் சோ பேசுகையில், ""எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்குப் பின், புதிய மத்திய அரசை அமைப்பதில், அ.தி.மு.க.,வின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். திறமையான அரசை வழங்கும் தகுதி, பா.ஜ.,வுக்கு மட்டுமே இருக்கிறது. ஒருவேளை, அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போய், மதச்சார்பற்ற கட்சிகள் என்ற பெயரில் தடை கிளம்புமானால், ஜெயலலிதாவை பிரதமராக்க பா.ஜ., ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார். நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன், இந்து முன்னணி ராம.கோபாலன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாலசந்தர், எழுத்தாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை முடித்துவிட்டு, விமானம் மூலம் அத்வானி டில்லிக்கும், மோடி ஆமதாபாத்துக்கும் சென்றனர். முன்னதாக, இருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும், நடிகர் ரஜினிகாந்தையும் சந்தித்துப் பேசுவர் என செய்திகள் வெளியாகின. ஆனால், அத்தகைய சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக