மகனை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாலையில் வீசிய தந்தை?
சென்னை : மருமகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த தொழில் அதிபர், சொந்த மகனையே கொலை செய்து, சடலத்தை சாலையில் வீசியதாக போலீசில் பரபரப்பு புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை வியாசர்பாடி எம்கேபி நகர் 15வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (55). தனியார் காஸ் கம்பெனி உரிமையாளர். இவரது மகன் சீனிவாசன் (30). இவருக்கும் வேலூரை சேர்ந்த தாட்சாயிணிக்கும் (28), 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி திருமணம் நடந்தது.இவர்களுக்கு குழந்தை இல்லை. சீனிவாசன், தனது மனைவி மற்றும் தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். மகன் வீட்டில் இல்லாத நேரத்தில் மருமகளிடம் தகாத முறையில், ஏழுமலை நடக்க முயற்சித்தார்.சீனிவாசனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்த ஏழுமலை, அதற்கான வேலைகளை தொடங்கினார். இதையறிந்த தாட்சாயிணி, எம்.கே.பி.நகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தாட்சாயிணிக்கு போன் செய்த சீனிவாசன், “என்னை கொலை செய்வதற்கு அப்பா முயற்சி செய்கிறார். நீ வந்து என்னை அழைத்துக் கொண்டு போ’’ என்று கூறியிருக்கிறார். பின்னர், அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்தும் தாட்சாயிணி போலீசாருக்கு தெரிவித்தார். இதற்கிடையே, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே, நேற்று காலை சீனிவாசன் சடலமாக கிடந்தார். எம்கேபி நகர் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கடந்த 9ம் தேதி தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, உருட்டுக் கட்டையால் சீனிவாசன் தலையில் ஏழுமலை அடித்துள்ளார். இதில் காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விடவே, சடலத்தை சாலையோரம் வீசிவிட்டு, ஏழுமலை தலைமறைவானது தெரிய வந்தது. இதற்கிடையே, சீனிவாசன் இறந்த செய்தி அறிந்த தாட்சாயிணி, கணவனின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மாமியாரை அடித்து துரத்தி விட்டு தனியாக இருந்த மாமனாரை, எங்களுடன் வசிக்க கணவர் அனுமதித்தார். ஆனால் அவர், நாங்கள் இரவில் தூங்குவதை எட்டிப் பார்ப்பார். மேலும், எனக்கு பல வகையிலும் செக்ஸ் டார்ச்சர் தந்தார். அவரது தொல்லை தாங்காமல்தான், கணவருடன் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டேன். இதுகுறித்து போலீசில் புகார் செய்தேன்.
போலீசார் உரிய நேரத்தில் மாமனார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், என் கணவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது’’ என்றார்.
இந்த நிலையில் சீனிவாசனின் பிரேத பரிசோதனையில் மார டைப்பில் மரணமடைந்தது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித் துள்ளனர். ஆனாலும் சீனிவாசனின் மரணம் குறித்தும், மருமகளின் குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக