டெல்லி: முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் சுக்ராமின் தண்டனையை தாற்காலிகமாக நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருக்கு ஜாமீனும் வழங்கியுள்ளது.
1996ம் ஆண்டில் தனியார் கேபிள் நிறுவனத்திடம் ரூ.3 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தொலைத் தொடர்புத்துறையில் ஒப்பந்தம் அளித்த வழக்கில் சுக்ராம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
இந் நிலையில் தனது வயதைக் கருத்தில் கொண்டு (86 வயது) கருணை காட்டுமாறு நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்தார். இதை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை. அவருக்கு 5 வருட சிறை தண்டனையும் அபராதமும் வழங்கி உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் கடந்த 3 வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் வழங்க கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை இன்று தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
மேலும் அவருக்கு ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக கடந்த 19ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுக்ராமை ஒரு சீக்கிய வாலிபர் தாக்கியதும் குறிப்பிடத்தக்கது. இவரே தான் பின்னர் அமைச்சர் சரத் பவாரையும் தாக்கி கைது செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக