இன்று பகவான் சத்யா சாய் பாபா அவர்கள் மறைந்து விட்டார்கள். இது யாராலும் எதிர்பார்க்காத ஒன்றுதான். அவர் தொண்ணூற்றாறு வயது வரையில் வாழப்போவாதாக அறிவித்திருந்தார்.
1981 இல் நான் பெங்களூரில் உள்ள ஒயிட் பீல்டிட்கு விஜயம் செய்திருந்தேன். அப்பொழுது அது ஏறக்குறைய ஒரு வெட்ட வெளி காடாகத்தான் இருந்தது. புட்டபர்த்தி அதைவிட காடாக இருந்ததாக கேள்விப்பட்டேன்.
அந்த சுற்றாடலுக்கு சற்றும் பொருத்தமற்ற காட்சியாக அழகான பள்ளி சீருடைகளுடன் செல்லும் சத்யா சாய் கல்லூரிகளின் மாணவர்கள் இருந்தார்கள்.
அந்த இனிய காட்சி வரப்போகும் ஆண்டுகளில் அப்பிரதேசம் எட்டப்போகும் உயரத்திற்கு பச்சை விளக்கு காட்டிற்று. மீதி வரலாறு உலகமே அறிந்த ஒன்று.
அவர் கடவுளா என்பது கேள்வியே அல்ல . அந்த சாதனைகள் அளப்பெரியன.இதுவரை யாரும் செய்த அளவில் அவர் செய்த தொண்டினால் அந்த மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கிறது. பாபாவை தூற்றியவர்களைக் கூட அவரின் மறைவு அதிர வைத்திருக்கிறது.
சாய் பாபா மட்டுமே இந்த உன்னதத்தை எட்டி உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக