திருவனந்தபுரம்: விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் 29 கர்ப்பிணிகளுக்கு பிரவச தேதிகளுக்கு முன்பாகவே டாக்டர்கள் சிசேரியன் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கேரளாவில் ஆழப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மகளிர் பிரிவில் 5 பெண் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இந்த மருத்துவமனைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த மீனவ குடும்பத்தினர் அதிகளவில் வருகின்றனர். இங்கு பிரவச அறுவை சிகி்ச்சை வசதியும் உள்ளது.
இந்த மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகளில் 30 பேருக்கு வரும் 24-ம் தேதி வரை பிரவச தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் 29 கர்ப்பிணிகளுக்கு அவசர அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது.
இதனால் மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாமல் அறுவை சிகி்ச்சை செய்யப்பட்ட பெண்களும், குழந்தைகளும் தரையில் படுக்க வைக்கப்பட்டது பற்றி அவர்களின் உறவினர்கள் மருத்துவ கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. நேற்று புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை. அத்துடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. வியாழக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
இதனால் டாக்டர்கள் விடுமுறையில் செல்வதற்காக 2 நாளில் அவசர அவசரமாக பிரவச தேதிக்கு முன்பாகவே கர்ப்பிணிகளுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். பின்னர் 5 டாக்டர்களில் 4 பேர் 21-ம் தேதி முதல் 4 நாட்களுக்கு விடுமுறையில் சென்று விட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த சுகாதார துறை இயக்குனருக்கு அமைச்சர் ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

English summary
5 doctors of a government hospital in Cherthala in Kerala performed cesarean operation for 29 pregnant women days before their delivery date. The doctors did so to take four days holiday. Minister Srimathi has ordered for a probe.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக