ஞாயிறு, 21 நவம்பர், 2010

தயாநிதி மாறன் கண்டனம் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு பிரச்சனையை திசை திருப்புவதாக

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு எழுதிய
கடித சர்ச்சை: தயாநிதிமாறன் விளக்கம்



2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தான் எழுதிய கடிதத்தில்  ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு பிரச்சனையை திசை திருப்புவதாக சில  ஊடகங்கள் மீது  மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதிமாறன்,  ‘’நான் தொலை தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக கடந்த 2006ம் ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து தற்போதைய பிரச்சனையோடு  தொடர்பு படுத்தி சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவது தவறானது.
எலிப்புற்றை மலையாக்க ஊடகங்கள் முயலுகின்றன.  பிரதமருக்கு எழுதிய அந்த கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வெளியிட்டு சர்சையாக்க முயற்சி நடந்துகொண்டிருக்கின்றது.

ஊடகங்களே இந்த பிரச்சனையின் தீர்ப்பை சொல்ல முனைவது வருத்தத்துக்குறியது.

பிரதமர் மன்மோகன்சிங் மிகவும் துணிவான, நேர்மையான தலைவர்.  தொலை தொடர்பு துறை அமைச்சர் என்ற முறையில் சில வரையறைகளை அறிந்துகொள்வதற்காக மட்டுமே பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

 பாதுகாப்பு அமைச்சகத்தின் வசம் இருந்த அலைக்கற்றையை தொலைத் தொடர்புத்துறை வசம் கொண்டு வர முயற்சித்தது  நான் தான்.  அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக பிரதமர் கட்டாயப்படுத்தப்பட்டார் என்ற செய்தி முற்றிலும் தவறானது.

தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக நான் இருந்தது வரையில் ஒரு சிறு சர்ச்சையும் இல்லை’’என்று தெரிவித்தார்.
அவர் மேலும்,  ‘’ திமுக -காங்கிரஸ் கூட்டணி  வலுவாக உள்ளது.  அதை சிதைக்கும் முயற்சி பலனளிக்காது’’என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: