ஞாயிறு, 18 டிசம்பர், 2016

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள் பல மருத்துவ தவறுகள் நிகழ்ந்துள்ளன .. ஒவ்வொன்றாக வெளி வருகிறது ,

இன்னமும் முழுமையாக வெளிப்படாத ஜெ.வின் உடல்நல பாதிப்பும் மரணமும் பலவித  விவாதங்களைக் கிளப்புகிறது.""ஜெ. செப்டம்பர் 22ஆம் தேதி  அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோது அவரது இதயத் துடிப்பு 40ஆக இருந்தது. நுரையீரலில் ஏற்பட்ட தொற்றினால் சுவாசிக்க சிரமப்பட்டார். அதனால் அவரது இதயம் பாதிக்கப்பட்டது. அவருக்கு பேஸ்மேக்கர் எனப்படும் இதயத்துடிப்பை வேகப்படுத்தும் கருவி பொருத்தப்பட்டது. சாதாரண மனிதர்களுக்கு நிமிடத்திற்கு 70 முறை துடிக்கும் இதயம், ஜெ.வுக்கு அதன் வேகத்தை இழந்து வந்தது. அப்பொழுது முதல் இதயத்துடிப்பு நிறுத்தம் ஏற்பட்டது. அதை மருத்துவர்கள் சமாளிக்க முயலும் போது அவரது இதயத்தையும் நுரையீரலையும் செயற்கை முறையில் இயங்கச் செய்யும் எந்திரமான ; என்கிற கருவியில் பொருத்தலாமா? என ஆலோசித்தனர். ஆனால் அதற்கான தேவையின்றி மருத் துவர்கள் குழு வெற்றிகரமாக ஜெ.வுக்கு ஏற்பட்ட முதல் இருதய நிறுத்தத்திலிருந்து காப்பாற்றியது'' என்கிறார்கள் அப்பல்லோ மருத்துவர்கள்.இதயம் தனது இயக்கத்தை நிறுத்தும் நேரமும் அதை இயங்க வைக்க மருத்துவர்கள் எடுத்துக்கொள்ளும் நேரமும் "கோல்டன் டைம்' என மருத்துவர்களால் குறிப்பிடப் படுகிறது.

""ஜெ.வுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி ஏற்பட்ட இதயத் துடிப்பு நிறுத்தம் போல, சிகிச்சை காலத்தில் 3 முறை நடந்தது. அந்த மூன்று முறையும் கோல்டன் டைமை வீணாக்காமல் சிகிச்சைஅளித்து நார்மலாக்கினோம்'' என கூறும் மருத்துவர்கள், டிச.4ஆம் தேதி என்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என தங்களது மெடிக்கல் ரிப்போர்ட்டுகளை நம்மிடம் காட்டினார்கள்.
4ஆம் தேதிக்கு முன்புள்ள 15 நாட்கள் ஜெ. இயன்றவரை இயற்கையாக சுவாசித்து வந்ததால் அவர் சிகிச்சை பெற்று வந்த அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எதிரேயுள்ள ஒரு தனி அறைக்கு மாற்றியதாகக் குறிப்பிடும் டாக்டர்கள், அந்த அறை அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எதிரே இருந்த அறை என்றாலும் ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு அறையான 2008 அப்படியே வைக்கப்பட்டதாக மறக்காமல் குறிப்பிடுகிறார்கள்.



4ஆம் தேதி இரவு 11 மணி நிலவரம் இதுதான். ஜெ.வுக்கு இதய நிறுத்தம் நின்றவுடன்  ஆஞ்சியோ சிகிச்சையளிக்கப்படவில்லை. மாறாக Stermotomy, Femoralvein to Aorta Cannulation ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடுகிறார்கள். Stermotomy என்று நாம் நக்கீரனில் ஏற்கனவே குறிப்பிட்டது மாதிரி ""கழுத்துப் பகுதியும், நெஞ்சும் தொண்டையோடு இணையும் பகுதியைத் திறந்து இதயத்துக்குள் புகுந்து அதை எந்திரங்கள் மூலம் மசாஜ் செய்து அந்த இதயத்தின் ரத்தக் குழாய்களை உடைத்து அந்தக் குழாய்களை ஊஈஙஞ எந்திரத்துடன் இணைக்கும் சிகிச்சையை மேற்கொண்டோம்'' என குறிப்பிடுகிறார்கள்.அதற்குப் பிறகு Hypo thermia   (ஹைபோ தெர்மியா) என்கிற நிலைக்கு ஜெ.வை கொண்டு செல்கிறார்கள். இது மரணத்தின்போது உடல் சில்லிட்டுப்போகும் நிலைக்கு கொண்டு செல்வதாகும். அப்பொழுதே கிட்டத்தட்ட ஜெ. இறந்துவிட்டார் என்றும், இன்னும் 24 மணி நேரத்திற்கு ஜெ.வை Hypo Thermia என்கிற குளிர்நிலையில் வைத்திருப்பார்கள் எனவும் சொல்கிறது அந்த மருத்துவப் பதிவு. ""5-ஆம் தேதி  மருத்துவக் குறிப்புகளை  டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ்  டாக்டர்கள்தான் எழுதுகிறார்கள். அவர்கள் ECMO எந்திரங்கள் மூலம் ஜெ.வுக்கு சிகிச்சை அளிப்பதைத் தொடர்கிறார்கள் அதற்கு அவர்கள் சொல்லும் ஒரே காரணம், "கழுத்துப் பகுதியில் உள்ள மூளைத்தண்டில் அசைவுகள் தெரிகிறது. அதன்மூலம் அவரது கண்கள் ஒரு பொம்மையின் கண்கள் போல திறந்து மூடுகிறது' என்பதுதான். எனவே  ECMO எந்திரம்தான் ஜெ.வை உயிரோடு வைத்திருக்கிறது. அதை நிறுத்தும் முடிவை முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் மத்திய அரசின் மருத்துவர்கள் அனுமதித்ததால் 5-ஆம் தேதி ஜெ.  மரணம் அறிவிக்கப்பட்டது'' என்கிறது அப்பல்லோ டாக்டர்களின் மருத்துவக் குறிப்புகள்.இந்த மருத்துவக் குறிப்புகளுடன் அப்பல்லோ டாக்டர்கள் 5ஆம் தேதி மாலை  தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட வாட்ஸ்-அப் தகவல்களில், ""நாங்கள் எங்களால் முயன்ற அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறோம். ஜெ.வின் மூளை செயலிழந்துவிட்டால் அவருக்கு அளிக்கப்படும் ECMO கருவி நிறுத்தப்படும். இந்த முடிவு பெரிய முடிவு. அதை சின்னம்மாவால்தான் எடுக்க முடியும்'' என அப்பல்லோ டீம் டாக்டர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

""இவையெல்லாம் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட மருத்துவக் குறிப்புகள். இந்த மருத்துவ ரிக்கார்டுகளையெல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கையோடு டெல்லிக்கு கொண்டுசென்றுவிட்டார்கள்'' எனச் சொல்கிறார்கள் கார்டன் வட்டாரத்தைச்  சேர்ந்தவர்கள்.அப்பல்லோ டாக்டர்களில் சிலரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியபோது, ஒரு விஷயத்தை தயங்கித் தயங்கிச் சொன்னார்கள். ""ஜெ. நன்றாக உடல் தேறிவருகிறார் என அவரை அவசர சிகிச்சைப் பிரிவிலேயே ஒரு தனி அறையை ஒதுக்கித் தந்தோம். அதன்பிறகு அவர் மீதான, மருத்துவ ரீதியான கவனிப்புகள் குறைந்தன."கார்டியாக் அரெஸ்ட்' ஏற்பட்டது பற்றி ஒரு நர்ஸ் சொல்லி டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். அதற்குள் நோயாளியை காப்பாற்ற உதவும் "கோல்டன் டைமி'ல் பத்து நிமிடங்கள் உருண்டோடிவிட்டன. மூக்குவழியாக உணவுக் குழாயும் தொண்டை வழியாக ட்ராக்கியோஸ்டமி எனப்படும் செயற்கை சுவாசக் குழாயும் இணைக்கப்பட்ட ஜெ.வால் தனக்கு ஏற்பட்ட இருதய பாதிப்பை வாய் வழியாக கத்திச் சொல்ல முடியாமல் தனியாக அவர் துடித்துக்கொண்டிருந்தார். பத்துநிமிடம் கழித்து அவரது அறைக்கு அருகே இருந்த அறை எண்  2008 என்கிற அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுசென்ற மருத்துவர்கள் அவரது உயிரைக் காக்கப் போராடினார்கள். அப்போது அவரை ECMO என்கிற எந்திரத்தில் இணைக்க முயற்சி செய்யும்போது  ஒரு சீனியர் டாக்டர் ஜெ.வின் ரத்தக்குழாய் ஒன்றை அவசரத்தில் சேதப்படுத்திவிட்டார். அதனால் ஏராளமான ரத்தம் வீணானது. அதை சமாளிக்க அப்பல்லோவின் ரத்த வங்கியிலிருந்து புதிய ரத்தம் கொண்டுவந்து ஜெ.வுக்கு ஏற்றப்பட்டது'' என கடைசி நேர கவனக்குறைவு சிகிச்சைகளை நமக்கு விளக்கினார்கள்.""இந்தத் தவறுகளால் ஜெ.வின் உடல்நிலை சரிசெய்ய முடியாத இடத்திற்குச் சென்றது, மூளையைத் தவிர அனைத்து உறுப்புகளும் செயலிழந்தன. 4ஆம் தேதியே இந்த நிலைக்கு வந்துவிட்ட ஜெ.வின் மரணத்தை 5ஆம் தேதி இரவு 11:30 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் சசிகலாவும் முடிவு செய்து அறிவித்தார்கள்'' என்கிறார்கள்.ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி நம்மிடம் பேசிய அப்பல்லோவின் உரிமையாளர் பிரதாப் சி.ரெட்டி, ""ஜெ.வுக்கு அப்பல்லோ சிறப்பான சிகிச்சை அளித்தது'' என்றார். ஜெ.வின் மரணம் மற்றும் சிகிச்சை பற்றிப் பேசிய ஜெ.வின் பெர்ஸனல் டாக்டர் சிவக்குமார், ""ஜெ.வுக்கு நல்ல உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது'' என்றார். மருத்துவத்தால் மரணத்தை வெல்ல முடியவில்லை. மர்மங்களாவது மெல்ல... மெல்ல தெளிவாகட்டும்.
-தாமோதரன் பிரகாஷ் நக்கீரன் 

கருத்துகள் இல்லை: