திங்கள், 26 செப்டம்பர், 2011

Vijay பூனைக்குட்டி வெளியே வராமலா போய்விடும்?

விருப்ப மனுக்களை விஜயின் தந்தை எஸ்.ஏ.சி.யிடம் கொடுத்திருக்கிறார்கள் ரசிகக் கண்மணிகள்.

அரசியல் பிரவேசம்’ குறித்து அடிக்கடி தன் ரசிகர்களுக்கு ஆட்டம் காட்டும் நடிகர் விஜய், நேரடியாகக் களத்தில் இறங்காமல், உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர்களைக் களம் இறக்க முடிவு செய்தி ருக்கிறாராம்.
அதற்கான அச்சாரம், சில தினங்களுக்கு முன்பு சென்னை வடபழனி
ஜே.எஸ். திருமண மண்டபத்தில் நடந்த விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. அந்தக் கூட்டத் தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடுவதற்கான விருப்ப மனுக்களை விஜயின் தந்தை எஸ்.ஏ.சி.யிடம் கொடுத்திருக்கிறார்கள் ரசிகக் கண்மணிகள்.
மாநில செயற்குழுவில் கலந்துகொண்ட விஜய் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகியிடம் பேசினோம். “அனை த்து மாவட்ட நிர்வாகிகளும் சேர்ந்து முடிவெடுத்து எஸ்.ஏ.சி.யிடம் தேதி கேட்டு அதன்படிதான் மாநில செயற்குழு நடந்தது. மாநிலம் முழுக்க உள்ள மாவட்ட, நகர, ஒன்றிய இயக்க நிர்வாகிகள் என ஐநூறு பேர் கலந்துகிட்டோம். மாநிலத் தலைவர் புஸ்ஸீ ஆனந்தும், விஜயின் அப்பா எஸ்.ஏ.சி.யும் கலந்துகிட் டாங்க. எல்லாரும் சேர்ந்து எஸ்.ஏ.சி.கிட்ட ‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் கண்டிப்பா மக்கள் இயக்கத்தைக் களம் இறக்கணும்’னு கேட்டோம். அதுக்கு அவர், ‘நான் உங்க ஆசைக்கு என்னைக்கும் குறுக்க நின்னதி ல்லை. மதுரையில் நடந்த ‘வேலாயுதம்’ பட கேஸட் வெளியீட்டு விழாவில் கூட, ‘நான் ரெடி. அவர் மனசு வைக்கணும்’னு விஜயைப் பார்த்துச் சொன்னேன்.

ஆனா, வர்ற உள்ளாட்சித் தேர்தலில் உங்களை ஏமாற்றக் கூடாதுன்னு விஜய் எப்பவோ முடிவெடுத்துட் டார். விஜயகாந்த் கட்சி ஆரம்பிச்சப்ப, முதன்முதலா மதுரையிலதான் மாநாடு போட்டு, தனது அரசியல் வரவை உலகத்திற்கு அறிவித்தார். அதனாலதான், அரசியல் சென்டிமெண்டா மதுரையில, ‘வேலாயுதம்’ பாடல் வெளியீட்டு விழாவை நடத்துனோம். அந்த ஐடியாவைச் சொன்னதே விஜய்தான். அதனால், இந் தமுறை உங்களை ஏமாற்றப் போறதில்லை’னு பேசினார்.

அதோடு, ‘வர்ற எலக்ஷனில் சீட் கேட்கிறவங்க எல்லாம் விருப்ப மனு கொடுக்கலாம். ஆனா, கேட்கிறதுக்கு முன்பு ஒரு கண்டிஷன். எலக்ஷன்ல நிக்க நினைக்கிறவங்க ஓரளவு படிச்சவரா, நாட்டு நடப்புகளை அறிஞ்சவரா இருக்கணும்’னு சொன்னார். கூடவே, நாம விரும்பியோ விரும்பாமலோ தி.மு.க.வைப் பகைச்சுகிட்டு, அ.தி.மு.க.வை ஆதரித்தோம். இந்தத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியிலேயே இருப்போம். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, நமது மக்கள் இயக்கத்தை கட்சியா மாற்றி, மாநாடு போட்டு, நம்மை நிரூபிக்காததால், அ.தி.மு.க. தலைமை இரண்டு சீட் கொடுத்தும், நாம் நிற்க வேண்டாம் என்று முடிவெடு த்தோம். இப்போதும், விஜய் அடுத்தடுத்து ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், அரசியல்ரீதியாக தெளிவான முடிவு எடுக்க முடியாத சூழ்நிலை. இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் என்பது மற்ற தேர்தல்களைப் போலில்லை. மக்களோடு நேரடியாகப் பழக வாய்ப்புள்ள பதவிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். அதனால், அ.தி.மு.க. ஆதரவோடு இதைச் சந்திப்போம்’னு சொன்னார்.

அதைத் தொடர்ந்து, சீட் கேட்பவர்களின் விருப்ப மனுக்களைப் பெற்றார் எஸ்.ஏ.சி. மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்பில் உள்ளவர்கள், தங்களது மாவட்டங்களில் உள்ள உறுப்பினர்களின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்களைக் கொடுத்தனர். அதில் எல்லாம் ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு கவுன்சிலர், ஒன் றியக் கவுன்சிலர் பதவிகளுக்கான மனுக்கள்தான் அதிகம் இருந்தன. விஜய் மக்கள் இயக்கத்தின் தர்மபுரி மாவட்டத் தலைவர் சிவா மட்டும் தர்மபுரி நகராட்சியைக் கேட்டு விருப்ப மனு கொடுத்தார். செயற்குழு முடிந்த அன்றே அ.தி.மு.க. தலைமையை எஸ்.ஏ.சி. சந்திக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் கூ ட்டணிப் பேச்சுவார்த் தைக்கான பொறுப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்க்கச் சொல்லிவிட் டார் முதல்வர். இன்னும் இரண்டொரு நாட்களில் எஸ்.ஏ.சி. ஓ.பி.எஸ்.ஐச் சந்தித்துப் பேசுவார்.

தேர்தலுக்கு ஆயத்தமாக, மாவட்டம் முதல், ஊராட்சி வார்டு வரையிலான மக்களின் அடிப்படைப் பிரச்னைகளை லிஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கார் எஸ்.ஏ.சி. மக்களிடம் நம்பிக்கை பெறுவதற்காக நிர்வாகிகளின் சொந்தச் செலவில் சின்னச் சின்ன நலத் திட்டங்களைச் செய்யச் சொல்லி இருக்கிறார். அதோடு, இதுவரை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருந்த மன்றக் கொடியை எங்களது வாகனங்களில் பயன்படுத்தும்படி சொல்லிவிட்டார். நாங்க விறுவிறுன்னு வேலையை ஆரம்பிச்சுட்டோம்’’ என்றார்.

மற்றொரு நிர்வாகியோ, “செயற்குழுவிற்கு வருவதற்கு முன்பே எஸ்.ஏ.சி. எங்களிடம், ‘அ.தி.மு.க. கூட் டணியில் அதிக கட்சிகள் இருப்பதால், நாம் அதிக இடங்களைக் கேட்க முடியாது’னு சொன்னார். அதனால்தான், மாநகராட்சி மேயர், பேரூராட்சி சேர்மன் பதவிகளுக்கு யாரும் விருப்ப மனு கொடுக்கவி ல்லை. மாறாக, ஒன்றிய, வார்டு, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு சீட் கேட்டு அதிக அளவில் மனு கொடுத்திருக்காங்க. இருந்தாலும், கௌரவத்திற்காக, ஒரே ஒரு நகராட்சியாக தர்மபுரியைக் கேட்டு அந்த மாவட்டத் தலைவர் சிவா விருப்ப மனு கொடுத்திருக்கிறார். இன்னும் சில தினங்களில், எஸ்.ஏ.சி., ஓ.பி.எஸ்.ஐ. சந்தித்து எங்கள் இடங்களைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி இருக்கிறார். உள்ளாட்சி எலக்ஷனில் நிற்பது முடிவாகிவிட்டால், விஜயே நேரடியாக நாங்கள் தேர்தலைச் சந்திக்கப் போவதை அறிவிப்பார். அதைத் தொடர்ந்து விஜய் கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமும் இருக்கும்’’ என் றார்.

இதுபற்றி, நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசினோம். “சென்னையில் நடந்த செயற்குழுவில் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்ப மனுக்கள் கொடுத்தி ருக்கிறார்கள். அதை விஜயின் பார்வைக்குக் கொடுத்திருக்கிறேன். அவரின் ஒப்புதலுக்குப் பிறகுதான் மற்ற விஷயங்களைப் பேச முடியும். இப்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும்’’ என்றார் நழுவலாக!

தேர்தல் வரட்டும். பூனைக்குட்டி வெளியே வராமலா போய்விடும்?
thanks kumudam

கருத்துகள் இல்லை: