ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

september 11 இன்று 10 ஆவது ஆண்டு முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு!

அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்டு இன்றுடன் பத்து வருடங்கள் : முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு!

அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்டு இன்று 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் பல முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அல்-கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய் வுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பாதுகாப்பு அணியை வலியு றுத்தியுள்ளார். மேற்படி தாக்குதலின் போது, மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்-கொய்தா தலைவராக உள்ள, அய் மான் அல் ஜவாகிரி, இந்த நாசவேலையைச் செய்யத் திட்டமிட் டுள்ளதாகவும் தெரிகிறது. மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மூன்று பேர், வெடிகுண்டு நிரப்பப்பட்ட லொறி அல்லது காரை வொஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் மோதி, பெரிய சேதத்தை விளைவிக்க திட்டமிட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து, இந்த நகரத்து மக்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி புலனாய்வுத் துறையினரும், பொலிசாரும் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி ஒபாமாவும் பாதுகாப்பை இருமடங்கு அதிகரிக்கும்படி, சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவு றுத்தியுள்ளார். அமெரிக்கா பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை பின்நிற்காது மேற்கொள்ள வேண்டுமென ஒபாமா, தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது கூறியுள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்-கொய்தா இயக்கத்தினால் குறிப்பிடத்தக்க, உறுதிப்படுத்தப்படாத அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக் கப்பட்டதை அடுத்து நியூயோர்க் மற்றும் வொஷிங்டனில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் பென்சில்வேனியா ஆகிய பகுதிகளுக்கு பராக் ஒபாமா இன்றைய தினம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மேற்படி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் முகமாக ஆயிரக்கணக்கான மக்கள் நியூயோர்க் நகரில் இன்றைய தினம் ஒன்றிணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: