செவ்வாய், 23 நவம்பர், 2010

செல்வம் அடைக்கலநாதன்(TNA M.P) மீது வழக்கு தாக்கல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பா.உ செல்வம் அடைக்கலநாதன் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கான முஸ்தீபுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புலிகள் உயிரோட்டத்துடன் இருந்த காலத்தில் ரெலோவின் வவுனியா “சண் TV” காரியாலயத்தில் இருந்து மைக்கிரோ ரக பிஸ்ரலுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலில் அந்த கை தூப்பாக்கி செல்வம் அடைக்கலாநாதன் அவர்களால் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து செல்வம் அடைக்கலநாதனை கைது செய்து விசாரணை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க முனைந்தபோது அவர் நாட்டிற்கு வெளியே சென்று வசித்து வந்தார். ஜனாதிபதி தேர்தலுடன் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி மீண்டும் இலங்கைக்குள் வந்த செல்வம் அடைக்கலநாதன் அமைதியாக இருந்து வந்தார்.
இவ் நிலையில், மீண்டும், அடைக்கலநாதனை அரச பக்கம் இணைத்து கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரும், அரசுடன் இணைந்து மந்திரி பதவியை பெறவேண்டும் என்ற கொள்கையில் உள்ளமையால் இந்த வழக்கு தாக்கல் கூட அதன் முஸ்தீபு நடவடிக்கையாக இருக்கலாம் என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
செல்வம் அடைக்கலநாதன் மீது இவ்வாறான அழுத்தத்தை கொடுப்பதுபோல் பாசங்கு செய்து அவரை அரசபக்கம் இணைத்து கொள்வதற்கான நடவடிக்கையாக இது இருக்கலாம் என்றும் ஆகவே இது குறித்து கருத்து எதுவும் தற்போது கூற முடியாது என்று பெயர் குறிப்பிட விரும்பாத மற்றுமொரு தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: