செவ்வாய், 23 நவம்பர், 2010

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மாத இறுதியில் இலங்கை வருகை!

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய இருக்கிறார்.பாகிஸ்தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதற்கு பிறகு ஆசிப் அலி சர்தாரி முதன் முறையாக இப்போது இலங்கை பயணத்தை மேற்கொள்கிறார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று பொறுப்பேற்றபோது அவருக்கு முதன்முதலாக வாழ்த்து தெரிவித்தவர் ஆசிப் அலி சர்தாரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது ஜனாதிபதியை நேரில் சந்தித்து பேசுவதற்காக இம்மாத இறுதியில் சர்தாரி கொழும்பு வரவுள்ளார். அவருடன் பாகிஸ்தான் இராணுவ அமைச்சர் அஹமது முக்தார் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாமெஹ்மூது குரோஷி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரும் இலங்கைவரவுள்ளனர்.
ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசும்போது, இராணுவம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஜர்தாரி பேச்சுவார்த்தை நடத்துவார். இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் குறித்தும் இவர்கள் பேச்சு நடத்துவர்.
இலங்கைக்கு இராணுவ தளவாடங்களை வழங்கும் சீனாவுக்கு அடுத்தபடியான நாடு பாகிஸ்தான். இலங்கை இராணுவ வீரர்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் பயிற்சியும் அளித்து வருகிறது.

கருத்துகள் இல்லை: