திங்கள், 22 நவம்பர், 2010

யாழ்ப்பாண தேசவழமைச் சட்டம்”: தவறான கருத்து, தப்பெண்ணம், மற்றும் அவநம்பிக்கை

கலாநிதி.ராஜசிங்கம்ரேந்திரன்: தேசவழமை என்பது ஸ்ரீலங்காவின் யாழ்ப்பாண மாகாணத்தில் (இப்போது வடமாகாணம்) வசிப்பவர்களுக்காக  அவர்களின் மரபு வழக்கத்தையும் சட்டத்தையும் தொகுத்து உருவாக்கிய ஒரு சட்டத்தொகுப்பு. தேசவழமை இலங்கையின் வடபகுதியில் பல நூற்றாண்டுகளாக போர்த்துக்கோயரின் வருகைக்கு முன்னதாகவே நடப்பிலிருக்கும் ஒரு மரபு.
தேசவழமை ஸ்ரீலங்காவில் அதிகாரத்தில் உள்ள அனைத்துச் சட்டங்களாலும் அங்கீகரிக்கப்;பட்டு யாழ்ப்பாண மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு பொருந்தக்கூடியதாக உள்ளது. அது ஸ்ரீலங்காவின் சட்ட முறைகளில் அங்கீகரிக்கப் பட்டுள்ள கிட்;டத்தட்ட ஐந்து மாநகர சட்டங்களில் பிரதானமான றோமன் - டச்சுசட்டம், தேசவழமை (யாழ்ப்பாணம்) முஸ்லிம்களின் சட்டமும் பயன்பாடும், முக்குவர் சட்டம ;(மட்டக்களப்பு), மற்றும் கண்டியன் சட்டம் என்பனவற்றில் ஒன்றாகும். அதன் அங்கீகாரமானது யாழ்ப்பாண மக்களின் பழக்க வழக்கங்கள் தீவிலுள்ள ஏனைய மக்களை விட முற்றிலும் வேறானதும் வித்தியாசமுமானது என்பதைக் காட்டுகிறது.
இதே அங்கீகாரம் ஏனைய மக்களான மட்டக்களப்பு, கண்டி, மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கும் அவர்கள் தீவின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களின் மரபுகளுக்கும் பொருத்தமான சட்டங்களுக்கும் உள்ளது. யாழப்பாண மக்களுக்கு பொருத்தமான தேசவழமை தப்பெண்ணம் ஏற்படுத்துவதாகவும் யாழ்ப்பாணத் தமிழர்களால் வழிநடத்தப்படும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு இந்தச் சூழ்நிலையில் மிகவும் தீங்கு விளைவிப்பதாகவும் உள்ளது.இந்த மரபுவழிச் சட்டங்கள் உருவாக்கப் பட்டிருப்பது, ஸ்ரீலங்காவின் மற்ற மக்கள் யாழ்ப்பாணத்தில் சொத்துக்களை வைத்திருப்பதைத் தடுப்பதற்காகவே என்றும் முன்னாள் தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் பிறப்பிடம் போன்றதான ‘பந்துஸ்தானை’ப் போன்றதான ஒன்றை உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டப் படுகிறது.
 
இந்தச் சட்டங்கள் ஹேகலினால் அழகாக சுருக்கிக் கூறப்பட்டுள்ள “ ஒரு அரசானது அதன் சட்டங்களாலும் ஒழுங்கு முறைகளாலும் அதன் அங்கத்தவர்களுக்கான உரிமையை உருவாக்குகிறது. அதன் இயற்கை வளங்களான மலைகள், காற்று. நீர் எனபன அவர்களின் நாட்டின், அவர்களின் முனனோர்களின் நாட்டின் வெளிப்படையான சொத்துக்கள், அந்த நாட்டின் சரித்திரம் மற்றும் அவர்களின் ஆவணங்கள். அவர்களின் முன்னோர்கள் உருவாக்கியது அவர்களுக்கு சொந்தமானதுடன் அவர்களின் நினைவுகளில் வாழ்வதற்கானது, அவர்களின் ஆஸ்தி எல்லாம் அவர்களிடம் உள்ள இவைகள்தான் அது அவர்களின் இருப்பினை, அவர்களின் வாழ்க்கையை உருவாக்குகிறது.”( ஜீ.டபிள்யு.எச். ஹேகல் அவரது மெய்யியல் சரித்திரம் என்ற கட்டுரையில்;) என்கிற பதத்தினால் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
நான் 1962ல் ஒரு இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், இலங்கைச் சட்டக் கல்லூரிப் பேராசியருமான ரி.சிறி ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட “தேசவழமை” என்கிற எனது வாசகசாலையில் உள்ள புத்தகத்தை பிரத்தியேகமாகக் குறிப்பிடுகிறேன். என்னிடமுள்ள புத்தகம் 1972ல் வெளியிடப்பட்ட நான்காவது பதிப்பு. சிறி ராமநாதன் இநதப் புத்தகத்தில் தனது வார்த்தைகளால் தொகுத்திருப்பது “ இந்தப் புத்தகம் மாணவர்களின் பயன்பாட்டிற்காகவும் தேசவழமையைப் பற்றிய அறிவைப் பெற விரும்புபவர்களுக்காகவும்” என்று. கீழே வருபவை இப்போதைய காலத்துக்கு பொருத்தமான சுருக்கமான குறிப்புகள் சிறி ராமநாதனின் புத்தகத்திலிருந்து பெறப்பட்டதன் சாரம்.
 தேசவழமை என்பதன் கருத்து நாட்டின் வழக்கம். முன்பு இது ஒல்லாந்தரால் (டச்) 1708ல் யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு பொருத்தமான வழமைச் சட்டமாக தொகுத்து முரசறைவிக்கப் பட்டிருந்தது. இந்தச் சட்டங்களின் பிறப்பைத் தேடுவது மிகவும் கடினமானது. சிறி ராமநாதனின் கூற்றுப்படி” தேசவழமையின் தொகுப்பு மெதித்ரேனிய மற்றும் பாரசீக சட்டங்களைப் போன்று வழக்கத்தில் பல மாறுதல்களும் சட்டத்தில் பல நீக்கங்களும் ஏற்பட்டிருக்கும் போது குறைந்தது ஆவணங்களிலாவது மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது உள்ளது. உலகம் வெகுவாக மாறிவிட்டது. யாழ்ப்பாணமும் மாற்றமடைந்து விட்டது. பண்டைய வழக்கங்கள் எல்லாம் இப்போது புழக்கத்தில் இல்லாமல் மறைந்து விட்டன. அடிமைச் சாசனம் கூட 1844ம் ஆண்டின்; 20ம் இலக்க. சட்டப்படி நீக்கப்பட்டு விட்டது. ஆனால் தேசவழமை சட்டம் இன்னமும் அடிமைத்தனத்துக்கு சட்;ட நிறைவேற்றத்தை அளிக்கிறது. தேசவழமை சட்டத்தின் நல்ல பகுதிகளை அது வழக்கிலில்லாமல் பயனற்றதானாலும் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். 
 
சிறி ராமநாதனின் கூற்றுப்படி இந்துக் கூட்டுக் குடும்ப முறை தேசவழமையில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது, பிரதானமாக “பெற்றார் உயிர் வாழும்காலம் வரையில் மகன் எந்த வகையிலும் எதையும் கோர முடியாது, அது மட்டுமல்லாது அவர்களது பிரமாச்சாரிய காலத்தின் முழுக்காலம் வரையில் சம்பாதித்ததையோ, பெற்றதையோ அவர்களின் பெற்றோர் உயிர் வாழும்வரை அவர்கள் வாழும் பொதுவான வீட்டிற்கு கொடுக்க வேண்டிய பாத்தியதை உள்ளவர்களாகிறார்கள் அவர்கள் மணமுடித்து பெற்றாரின் வீடு விட்டுப் போனாலும் கூட. இதற்கு விதிவிலக்காக அமைவது அவர்களின் மனைவிமார்; அணிந்திருக்கும் தங்க வெள்ளி நகைகள் அது அப்பெண்கள் தேடியதோ அல்லது அவர்களின் பெற்றோர்  கொடுத்ததோ அவை கூட்டுக் குடும்பத்தைச் சேராது.” அவர் குறிப்பிட்டிருப்பது தமிழர்கள் இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியான கொரமண்டல் கரையோரப் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்களான படியால் அப்பகுதித் தமிழர்களின் பழக்கங்கள் தேசவழமையில் இடம்பிடித்துள்ளது என்று.  
 
இவர் மேலும் கூறியிருப்பது (செல்லப்பா எதிர் கணபதி வழக்கில் 17வது புதிய சட்டம் பக்கம் 295ல் 1900ஆண்டுகளின் முற்பகுதி என ஊகிக்கப்படும் வழக்கில் ) நீதிபதி பெரேரா சொல்லியிருப்பது “இது குரூரமானதும் பழமையானதுமான தொகுப்பு, இது மற்றோர் சட்ட சேகரிப்புகளை குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லான “டெனிசன்” எனும் சொற்பதத்துக்கு நன்கு பொருந்துவதோடு தனிப்பட்ட ஓரு நிலையில் பண்படுத்தப் படாததுமாகிறது. நான் மேலும் கூடச்சேர்ப்பது நிம்மதியான ஒருஉணர்வோடு முழுவதான நடப்பாக்கலைப் பற்றி கூhந்து கவனித்தால் தவறாக ஒழங்கு படுத்தப்பட்டு தவறாக விளக்கப்படும இச் சட்டக்கோர்வைகளின் சட்டவாக்கத்தில் சமீபத்தில் பலது இரத்துச்செய்யப்பட்டு பல நவீன வரிகள் சோக்கப்பட்டும் உள்ளன” தேசவழமைச் சட்டங்கள் இன்றிருக்கும் நிலையிலிருந்து நவீன நீதிமன்றச் சட்டங்களுக்குப் பொருந்தக் கூடிய விதத்தில் சீரமைப்புச் செய்யப்பட வேண்டும். 
 
1665ல் யாழ்;ப்பாணப் பட்டினத்தின் தளபதி குறிப்பிட்டிருப்பது “இவ்விடத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் தெளிவானதும் நியாயமானதுமான  வழக்கப்படி ஆட்சிபுரியப் படுகிறார்கள், இவை இல்லாவிட்டால் எங்கள் சட்டப்படிதான் நடத்தப்படுவார்கள்”. தேசவழமைச் சட்டம் மௌனமான இடத்தில் உரோமன் - டச் சட்டம் பயன்படுத்தப் படும். தேசவழமை இரணடு வகைகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. 
 
 சொந்தமான சட்டங்கள் பயன்படுத்தப்படும் யாழ்ப்பாண மாகாணத்தில் உள்ள மலபார் குடியிருப்பாளர்களுக்கானது. 
 
 வடமாகாணத்துக்குச் செந்தமான சகல நிலப்பரப்புக்கும் பயன்படுத்தப் படும் சட்டங்கள்
 
 சட்டமியற்றும் சபையினரது சட்டங்களின்படி “யாழ்ப்பாண மாகாணத்து தேசவழமையோ அல்லது மலபார்  குடியிருப்பாளாகளின் வழக்கங்களோ 1706ல் ஆளுனர் சிமோன்ஸின் ஆணைப்படி சேகரிக்கப் பட்டு முழுப் பலத்தோடு கவனிக்கப் படும்” என்றிருக்கிறது  .
 
தேசவழமைப்படி தீர்மானிக்கப் படும் கேள்விகளுக்கும் இச்சட்டவாக்கம் குறிப்பிடுவது எல்லாக் கேள்விகளுக்கும் இம் மாகாணத்தில் வதியும் மலபார் குடியிருப்பாளாகளுக்கோ அல்லது மலபார் குடியிருப்பாளர்கள் பிரதிவாதி ஆக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இடையிலான கேள்விகள் குறிப்பிட்ட வழக்கத்தின் படியே முடிவு செய்யப்படும். 
 
 
 யாழ்ப்பாண மாகாணத்தில் உள்ள மலபார் குடியிருப்பாளர்கள் என்கிற பதத்தின் கருத்து தேசவழமையால் ஆட்சிப்படுபவர்கள் மலபார்களாக இருக்க வேண்டும் என்றாகிறது. அவர் அல்லது அவள் கட்டாயம் குறிப்பிட்ட சூழலில் பிரதானமாக யாழ்ப்பாண மாகாணத்தில் குடியிருப்பவர்களாக இருக்க வேண்டும். மலபார் எனக் குறிப்பிடுவது இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள திருவாங்கூர் சமஸ்தானத்தை.
கேள்வி என்னவென்றால் தேசவழமை பிரயோகிக்கப் படுவது யாழ்ப்பாண மாகாணத்தில் குடியிருக்கும் மலபாரிலிருந்து வந்தவர்களுக்கா அல்லது யாழ்ப்பாணத்தை குடியிருப்பாகக் கொண்ட எல்லாத் தமிழர்களுக்குமா? என்பதுதான்.
கிளாஸ் இசாக் எழுதிய தேசவழமைச் சட்டத்தின் முகவுரை இதற்கான பதிலைத் தருகிறது.” இலங்கைத் தீவின் யாழ்ப்பாண மாகாணத்தில் வாழும் மலபார் மற்றும் தமிழ் குடியிருப்பாளர்களின்  இடையே உள்ள சிவில் வழக்குகளில் எவ்வாறு முடிவெடுப்பது என்பதை நிலைநாட்டும் பழக்கங்களுக்காக மற்றும் நிறுவனங்களுக்காக ஒரு விளக்க உரை” அவர் மலபார் என்கிற வார்த்தைகளுக்கு சமமான பதமாக தமிழர் என்பதைப் பயன்படுத்தியுள்ளார் 
 
 மலபார் என்பதன் கருத்து தமிழ் என்று பல வழக்கு முடிவுகளில் நிறுவப்பட்டுள்ளதா என்பது மற்றொரு கேள்வி. நீதிபதி இன்னிஸ் என்பவரும் இதை அவதானித்துள்ளார் “தேசவழமை என்பது ஒரு சாதிக்கோ மதத்துக்கோ மட்டுமுரிய வழமையல்ல, அது தீவிலுள்ள எல்லா ஆட்களினதும் அந்த சாதிக்கும் மதத்துக்கும் பொதுவானது, அவை ஒரு பகுதியினரது வழக்கமாக ஒரு குறிப்பிட்ட மாகாணத்தின் குடியிருப்பாளர்களான இலங்கைத் தமிழர்களுக்கும் மட்டும் பிரயோகிக்கப் படுகிறது 
 
இந்த நடைமுறை வழக்கு முடிவுகளில் காட்டுவது, தேசவழமை பிரயோகிக்கப் படுவது வடமாகாணத்தில் குடியிருப்பவர்களிடத்தில் மட்டுமே, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் குடியிருக்கும் தமிழர்களிடத்தில் இல்லை. தேசவழமையால் ஆட்சிப் படும் ஒருவர் வெளிநாடொன்றில் மரணமடைந்து அவர் ஸ்ரீலங்காவில் அசையாச் சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தால், அரசுகளுக்கிடையே வெற்றிபெறும் சட்டம் தேசவழமையே ஆகும். அந்த அசையாச் சொத்துக்கள் ஸ்ரீலங்காவிற்கு வெளியே இருந்தால் அரசுகளுக்கிடையே வெற்றிபெறும் சட்டம் ஆங்கிலேயச் சட்டம் அல்லது உரோமன் - டச் சட்டம். 
 
சொத்துக்களை தேசவழமைப்படி பங்கிடுவதில் பல விதிகள் ஆட்சி புரிகின்றன, முதுசம், உரிமை, சீதனம், தானம், தேடியதேட்டம் எனப் பலவகை. 
 
 ஒரு சொத்து ஒரு நபருக்கு பரம்பரையாக அவருடையதோ அல்லது அவளுடையதோ பெற்றோர்களினதோ, அல்லது  ஏறு வரிசைப்படியான மூதாதையர்களின் மரணத்தினால் கிட்டுமாயின் அது முதுசம் எனப்படும். 
 
பெற்றோர் அல்லாத வேறு உறவினர்களாலோ அல்லது ஏறு வரிசைப்படியான மூதாதையர்களின் மரணத்தினாலோ ஒருவருக்கு கிடைக்கப் பெறும் சொத்து உரிமை எனப்படும். 
 
தேடிய தேட்டம் என்பது ஒரு சொத்தை ஒரு வாழ்க்கைத் துணையினால் திருமணத்தின்போது பெறுமதியான கவனிப்பின் ஆதாயமாகப் பெறுவது. அவ்வாறான கவனிப்பு அந்தத் வாழ்க்கைத்துணையின் வேறு ஒரு ஆதனத்தின் பகுதியினால் உருவாக்கப்படுவதாகவோ பிரதிநிதித்துவப் படுத்தவதாகவோ இருக்கக் கூடாது. அது மேலும் சேர்த்திருப்பது வாழ்க்கைத்துணையின் வேறு ஒரு ஆதனத்தின் மூலம் பெறப்படும் வருமானங்கள் திருமண பந்தம் காரணமாக சேர்க்கப்படும் ஆதாய கவனிப்புகள் பற்றி. 
 
•சீதனம் என்பது திருமண முறைகளின் தொடர்ச்சியால் ஏற்றுக்கொள்ளும் சொத்து. இது பண்டைய மலபார் குடியேற்றக்காரர்கள் மிச்சமாக விட்டுச் சென்ற மருமக்கட்டாயச் சட்டம் இலங்கைக்கு அறிமுகப் படுத்தியது.gdgdgddgd தேசவழமைச் சட்டம் குறிப்பிடுவது “மனைவியால் கொண்டு வரப்படும் சொத்து சீதனம் எனத் தமிழ் மொழியிலும் அல்லது எங்கள் மொழியில் டௌரி எனவும் அழைக்கப் படுகிறது. சீதனம் எந்த நேரத்திலும் திருமணத்துக்கு முன்பாக வழங்கப்படலாம். அது திருமணம் நிச்சயிக்கப் பட்டிராத காலத்திலும் அல்லது திருமணத்துக்கு பின்பும் கூட வழங்கப் படலாம். தேசவழமையின்படி வழங்கப்பட்ட சீதனத்துக்கும் ஒரு ஆவணத்தின்படி வழங்கப் பட்ட சீதனத்துக்கும் வித்தியாசம் உள்ளது. ஆவணத்தின்படி கருதப்படும் சீதனம் ஆங்கிலச் சட்டத்திலுள்ள அதே கருத்தின்படி வழங்கப் படவேண்டும். சீதனம் பிரதிப்பயன் உள்ளபடி திருமணத்தின் முழுநிறைவோடு வழங்கப் படவேண்டும்.
 
தேடிய தேட்டம் கொண்டிருப்பது தம்பதிகளின் வௌ;வேறு சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருமானத்தையும் மற்றும் எல்லாச் சொத்துக்களும் தம்பதிகளில் யாராவது ஒருவரினால் மட்டுமே திருமணத்தின் கடும் முயற்சியினால் ஏற்றுக் கொள்ளப்படுவது. 
 
எப்படியாயினும் வேறு சொத்துக்கள் ஒரு வாழ்க்கைத் துணையினால் திருமணத்தின்போது பெறுமதியான கருதலின் ஆதாயமாகப் பெறப்படும் சொத்தைத் தவிர்ந்தவை அவ்வாறான கருதல் அந்தத் வாழ்க்கைத்துணையின் வேறு ஒரு சொத்தின்; பகுதியினால் உருவாக்கப்படுவதாகவோ பிரதிநிதித்துவப் படுத்தவதாகவோ இருக்கக் கூடாது. அத்துடன் வாழ்க்கைத்துணையின் வேறு ஒரு ஆதனத்தின் மூலம் பெறப்படும் வருமானங்கள் திருமண பந்தம் காரணமாக சேர்க்கப்படும் ஆதாயங்கள் தேடிய தேட்டங்களாகக் கருதப்படும். தேடியதேட்டம் ஒரு புதிய சம்பாத்தியமாக இருப்பதுடன் பெறுமதியான பரிசாகவும் திருமணம் காரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பாத்தியமாகவும் இருக்க வேண்டும். 
 
தேசவழமையின்படி தேடியதேட்டம் வரையறுக்கப் பட்டிருப்பது திருமணத்தின்போது ஆதாயமாக  கணவனாலோ அல்லது மனைவியாலோ பெறப்படும் சொத்திலிருந்து பெறப்படும் வருமானங்களையும் உள்ளடக்கியதாக. ஆகையினால் சீதன சொத்துக்களிலிருந்து பெறப்படும் வாடகை மற்றும் இதர வருமானங்களை கணவனின் கடன்களுக்காக கைப்பற்ற முடியும். இருந்தபோதிலும் சீதன சொத்துக்கு அந்த கடப்பாடு கிடையாது. சீதனம் கணவனால் திருமணத்தின்போது குறைவாக்கப் பட்டால், கணவனால் சம்பாதிக்கப் பட்ட சொத்துக்களிலிருந்து அதை ஈடு செய்யப் படவேண்டும். மனைவி மரணமடைந்தால் சொத்துக்கள் பிரிக்கப்படும். மனைவி சீதனச் சொத்தை ஊதாரித்தனமாக அழித்திருந்தால்  அந்தக் குறைவு கணவனால் சம்பாதிக்கப் பட்ட சொத்தின் பாதியினால் நிரப்பப் படத்தேவையில்லை. கணவனதோ மனைவியினதோ சொத்துக்கள் குறிப்பிடத்தக்க அளவில் திருத்தியமைக்கப் பட்டிருந்தால் கணவனதோ அல்லது மனைவியினதோ வாரிசுகள், அவருடையதோ அல்லது அவளுடையதோ மரணத்தின் பின் அதற்குச் செலவானதை திருப்பிக் கேட்க முடியாது. மனைவியுடன் சேராமல் தேடியதேட்டத்தை விற்க கணவனுக்கு அதிகாரம் உண்டு. திருமணத்தின் ஆதாயமாக சம்பாதித்த சொத்தை விற்கும் அதிகாரம் நன்கு அங்கீகரிக்கப் பட்டுள்ளது. 
 
எ ப்படியாயினும் மனைவியின் மரணத்தின் பின் கணவனுக்கு உடமை மாற்றும் அதிகாரம் கிடையாது.மரணமோ, விவாகரத்தோ.மணமுறிவோ ஏற்பட்டால் கணவனால் சம்பாதித்த சொத்துக்களில் அரைப்பகுதிக்கு மேல் விற்க முடியாது. கணவனும் மனைவியும்  மனைவிக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களை விற்பனை செய்தால், மனைவி கடப்பாடு உடையவராக இருந்தால்; ஆணைக்கான அறிவித்தலும் தற்காப்பு உரித்தும் தனியாக மனைவிக்கு வழங்கப் பட வேண்டும் அவ்வாறான விடயத்தில் கணவனுக்கு வழங்கப்பட்ட அறிவித்தல் மனைவிக்கும் சேர்த்து வழங்கப் பட்டதாகப் பொருள் கொள்ள முடியாது. திருமணத்தால் சம்பாதிக்கப் பட்ட தேடியதேட்டத்தை அடைவு வைக்கும் அதிகாரம் கணவனுக்கு உள்ளது, அதற்கு எதிரான நடவடிக்கைகள் மனைவியைச் சேர்க்காமல் கணவனோடு மட்டுமே மேற்கொள்ளமுடியும். 
 
அடைவு வைக்கப்பட்டது தேடியதேட்டமாகவிருந்து எதிர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சமயத்தில் மனைவி மரணமடைந்திருந்தால் மனைவி பகுதியினரின் வாரிசுகளை அவளின் அரைப் பங்கு சொத்துக்காக நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது அவசியம்.மனைவி கணவனுக்கு முன் இறந்தால் தேடியதேட்டத்தின் அவளது பங்கு அந்தத் திருமணத்தால் உண்டான அவளின் வாரிசான பிள்ளைகளை அவளின் கணவனைத் தவிர்த்து போயடையும். தேச வழமைச் சட்டப் பிரிவுகள் தெளிவாகச் சொல்வது பரிசுகள் மதிக்கப் படுவது தம்பதிகளில் யாருக்கு வழங்கப்பட்டதோ அவரின் தனியான சொத்துக்களாகத்தான். ஆனால் எதாவது வருமானம் வழங்கப்பட்ட சன்மானம் மூலம் கிடைக்குமாயின் அது தம்பதிகள் இருவருக்கும் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்களாக மதிக்கப்படும். தந்தை வழி உறவினரால் சன்மானம் வழங்கப்பட்டிருந்தால் அவ்வாறு வழங்கப்பட்டது தந்தை வழிச் சொத்தாகவும், தாய்வழி உறவினரால் வழங்கப் பட்டிருந்தால் தாய்வழிச் சொத்தாகவும் மதிக்கப்படும். 
 
யாழ்ப்பாண திருமண வாழ்க்கை உரிமைகள் மற்றும் மரபு வாரிசுரிமைச் சட்டம் பிரயோகிக்கப் படுவது தேசவழமைக்கு உரித்தான தமிழர்களுக்கு மட்டுமே. தேசவழமைக்கு உரித்தான பெண் ஒருவர் அதற்கு உரித்தில்லாத ஒருவரைத் திருமணம் செய்தால், திருமணம் மூலமாக அவள் தேசவழமைக்கு உரிமையற்றவளாகிறாள். எப்படியாயினும் தேசவழமை பிரயோகமாகாத பெண் தேசவழமைக்கு உரித்தான ஆண் ஒருவரைத் திருமணம் செய்தால், திருமணம் மூலமாக அவள் தேசவழமைக்கு உரித்தாகிறாள். 
 
 மேலும் தேசவழமைப்படி ஒரு பிள்ளை தாயின் மரணம் மூலம் ஒரு சொத்தை உரித்தாகப் பெற்றால் அப்பிள்ளையின் மரணத்தின் பின் அதற்கு சகோதர சகோதரிகள் இலலாதிருந்து அதன் தந்தை மட்டும் உயிரோடிருந்தால் அந்தச் சொத்துக்கள் தாயின் அடுத்த வாரிசையே சென்றடையும் தந்தைக்கல்ல. 
 
ஒரு திருமணமான பெண்ணுக்கு தேசவழமை ஆட்சிப்படி விவாக பந்தத்தால் உண்டாகும் அதிகாரம் கணவனுக்கே உண்டு. திருமண அதிகாரம் காரணமாக மனைவியின் அசையாச் சொத்துக்களை உரிமை மாற்றம் செய்யவோ அல்லது அடைவு வைப்பதற்கோ  தனது சம்மதத்தை தெரிவிக்க வேண்டிய உரிமை கணவனுக்கு உள்ளது. மனைவிக்கு சீதனமாக பணம் வழங்கப்பட்டிருந்து அவள் அதைக்கொண்டு அசையாச் சொத்துக்களை வாங்கியிருந்தால்  அச் சொத்து தம்பதிகளின் தேடியதேட்டமாகக் கருதப்படும். 
 
ஒரு பெண்ணுக்கு அவளின் திருமணத்தின் போது சொந்தமாகவிருந்த எல்லா அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களும் அல்லது அவள் சம்பாதித்ததோ அல்லது வாரிசாகப் பெற்றோ சன்மானமாகவோ அல்லது மாற்றீடாகவோ பெற்று இருந்தால் அதன்பின் அது அவளது தனிப்பட்ட சொத்தாக கருதப்படும்,மேலும் கணவனது கடன்களுக்கோ தொடர்புகளுக்கோ சில குறிப்பிட்ட சூழ்நிலைகளைத் தவிர கடப்பாடற்றதாகிறது. இதே போல கணவனது எல்லா அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களும் அவரது தனிப்பட்ட சொத்துக்களாகிறது. சிங்களவர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ வெளியாட்களுக்கு சொத்துக்களை விற்பதற்கு தேசவழமையில் எந்தத் தடையும் விதிக்கப் பட்டிருக்கவில்லை. ப்படியாயினும் சொத்துக்களை விற்பனைப் பரிமாற்றம் செய்வதில் சில முக்கிய நடைமுறைகள் மேலே குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் தொகுக்கப் பட்டுள்ளன. தேசவழமை ஆட்சியுள்ளவர்களது காணிகளைப் பொறுத்த மட்டில் உரித்து உரிமைப் பரிசோதனையை வெகு கவனத்துடன் ஆராய வேண்டும். சிறி ராமநாதன் பரிந்துரைப்பது ஒரு யாழ்ப்பாணத் தமிழரின் ஒரு ஒப்பாவணத்தை நிறைவேற்றும் முன்னர்; முக்கியமாய் ஆராய்ந்து கண்டறிய வேண்டியது:
    1.அந்த நபர் அந்த ஒப்பாவணம் நிறைவேற்றும் காலத்தில் திருமணம் செய்துள்ளாரா.
    2.அவனோ அல்லது அவளோ தேசவழமை உரித்துள்ள ஒருவரைத் திருமணம் செய்துள்ளனரா.
    3.நிறைவேற்றும் காலத்தில் மற்றைய வாழ்க்கைத்துணை உயிரோடு உள்ளாரா.
    4.அந்தச் சொத்து முதுசம் அல்லது தேடியதேட்டம் வகையைச் சார்ந்ததா.
    5.உரிமை மாற்றம் செய்யும் சமயத்தில் ஒரு வாழ்க்கைத்துணை காலமாகியிருந்தால் உயிர் வாழ்பவர் யார்.
தம்பதிகளுக்கு தேடிய தேட்டத்தின் ஒரு அரைப் பகுதியை மட்டுமே வெளியேற்றும் அதிகாரம் உள்ளது. இந்த முன்கருதல் நடவடிக்கைகள் வடமாகாணத்தில் சொத்துக்களை அடைய விரும்பும் எந்த நபருக்கும் அவர் தமிழரோ, சிங்களவரோ,முஸ்லிமோ அல்லது வேறு எவராயிருப்பினும் பொருந்தும்.
நிலையான ஆதனங்கள் - காணிகள் யாழ்ப்பாணத்தில் மிக அதிக விலைமதிப்பு உள்ளவை, வழக்கங்கள் சொல்வது அவைகள் குடும்பத்துக்குள் பல்வேறு கருவிகளால் பரிமாறப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணம் இன்னமும் கிராமத்தையே மையமாகக் கொண்ட சமூக அமைப்பைக் கொண்டது. யாழ்ப்பாணத்து ஆணோ அல்லது பெண்ணோ இன்னமும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வது தங்கள் பிறப்பிடக் கிராமத்தையும் விவாக பந்தத்தையும் சொல்லித்தான். கிராமத்தின் சுற்றாடலும் மிகவும் முக்கியமானது.
ஏனெனில் அது அவரது வம்சப் பரம்பரை, தொடர்புகள்,மற்றும் சாதி போன்ற விபரங்களை அறிய உதவுகிறது. தேசவழமை வழக்கம் வெளிப்படுத்துவது, உள்நோக்கிய பார்வையைக் கொண்ட சமூகத்தை மேலும் அவர்கள் நவீன காலத்துக்கு உசிதமானவற்றை இழந்து கொண்டிருக்கிறார்கள். போரின் முடிவுக்குப் பின்னர் பிரிவு மற்றும் திரளான புலப்பெயர்வு (உள்ளகத்திலும் வெளியகத்திலுமான இரண்டாலும்) மற்றும் மரணங்கள் என்பன அதில் தொடர்பு பட்டிருக்கின்றன. இந்த வழமைகளின் பின்னணியில்; மேலதிக காலத்தை விரிவு படுத்தி “பந்துஸ்தானை”  உருவாக்குவது போன்ற கெடுதியான எந்த உள்நோக்கமும் கிடையாது.
 
சட்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழர்கள், அவர்கள் ஸ்ரீலங்காவில் சட்டத் தொழில் புரிந்தபோது தேசவழமையை கையாண்டிருந்தால் இந்த விடயங்களை இன்னும் நன்றாகத் தெளிவு படுத்தி நம் உடனொத்த தேசத்தவர்களான சிங்களவர் மனங்களில் வேர் விட்டிருக்கும் தவறான கருத்து, தப்பெண்ணம், மற்றும் அவநம்பிக்கை ஆகியவற்றை களைய முயல்வார்கள் என நான் நம்முகிறேன்.
தமிழில் எஸ்.குமார்

கருத்துகள் இல்லை: