திங்கள், 22 நவம்பர், 2010

ராஜபக்ஷாவிற்கு எதிராக ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கம்.


அண்மையில் இனியொரு இணையதளத்தில் ராஜபக்ஷாவின் பட்டாபிஷேகம் என்கிற தலைப்பில் ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கத்தின் கட்டுரை ஒன்றை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்ஷ அரசை புகழந்து கொண்டிருந்த தோழர் அழகலிங்கம் திடீரென்று அந்தர் பல்டியடித்து ராஜபக்ஷ அரசை வசைபாடுவதற்கு என்ன காரணம் என மண்டையைப்போட்டு உடைத்தபோது இரு காரணங்கள் முக்கியமாக தெரிய வந்தன. முதலாவது டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ஸ மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி இரணடாவது வரதராஜப்பெருமாளின் ஐரோப்பிய விஜயம் இதுபோதாதா தோழர் அழகலிங்கத்திற்கு. ஈமெயில் பிரச்சாரத்தில் இரவு பகலாக இறங்கியுள்ளார். முதலில் ரிபிசியில் பிரபகாரனை அமரர் என அழைக்கவேண்டும் என சொன்ன வரதராஜப்பெருமாளை ஒரு பிடிபிடித்தார். இந்த ஈமெயில் கட்டுரையை பல இணையத்தளங்கள் பிரசுரித்தன. ரீ வடையும் பிரசுரித்திருந்தது. அடடா நமது ஈமெயில் கட்டுரைக்கு வரவேற்பு கிடைத்து விட்டது என அடுத்ததாக வெளிவந்த ராஜபக்ஷ பட்டாபிஷேகம் என்கிற ஈமெயில் கட்டுரையை இனியொரு இணையதளம் தூக்கிப்போட்டது. முதல்பாகம் வந்தது இணர்டாவது பாகத்தைக் காணோம்.
ராஜபக்ஷா முதல் கொண்டு கே.பி. டி.பி.எஸ், ரட்ணஜீவன் கூல் வரை பிடிபிடித்த தோழர் அழகலிங்கம் ராஜபக்ஷாவின் அமைச்சரவையில் உள்ள டக்ளஸ் பற்றி மூச்சக்காட்டவில்லை. ஈ.பிடி.பியின் சர்வதேச ஆலோசகரான தோழர் அழகலிங்கம் அதை எப்படி செய்ய முடியும். ஈ.பி.டி.பியின் ஆலோசகர் தான் சார்ந்துள்ள கட்சிக்கு ஆப்பு வைப்பாரா என்ன?. தோழர் அழகலிங்கம் இப்படி அடிக்கடி சோடாப்போத்தலை திறந்தால் வெளியாகும் காஸ் மாதிரி வந்துவிட்டு பின் உறங்கி விடுவார். அவர் எந்த நேரத்தில் எந்த நிலைப்பாடு எடுப்பார் என்பது அவருக்கே தெரியாது.
 ராஜபக்ஸ அரசு பிழையென்றால் அவர் முதலில் அந்த அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை விடவேண்டும். அந்தத் துணிவு அவரிடம் இருக்கிறதா இல்லையே! புலியை தோற்கடித்தது ராஜபக்ஷ அரசுதான். அது பலபேருடைய பங்களிப்பில் நடைபெற்ற விடயம். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அழகலிங்கம் ஈ.பி.டி.பியினர் எல்லாம் இலங்கை தூதுவரலாயத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது பலருக்கு தெரிந்த விடயம். கடந்த சில நாட்களாக ஈ.பி.டிபிக்கும் அரசுக்கும் இடையில் பனிப்போர் நிலவுகிறது. ரங்காவை உயர்த்திப்பிடிப்பதும் டக்ளஸ் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்படுவதும் கசிந்து வரும் செய்திகள். இது போதாதற்கு வரதராஜப்பெருமாள் வேறு யாழ்ப்பாணத்தில் வந்து நிற்கிறார். கணக்குப்போட்டு பார்த்தால் ஈ.பி.டி.பிக்கு ஒரு சோதனைக்காலம் இது. அதனால்தான் ஈ.பி.டி.பியின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கம் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார்.
ராஜபக்ஷாவிற்கு எதிரான தோழர் அழகலிங்கத்தின் போர் ரஸ்யப்போராட்டத்துடன் இணைத்து பேசப்படும். ரஷ்யப்புரட்சி ரொட்ஸ்கிசம் எல்லாம் ராஜபட்சாவிற்கு எதிரான யுத்தத்தில் தோழர் அழகலிங்கத்தால் ஈடுபடுத்தப்படும் நல்லவேளை இதெல்லாத்தையும் பிரசுரிக்க இணையத்தளம் இல்லாமல் ஈமெயில் கட்டுரையுடன் நின்றுபோனது.
இல்லாவிட்டால் நாடு தாங்காதடா சாமி

கருத்துகள் இல்லை: