சனி, 1 அக்டோபர், 2022

சவுக்கு சங்கரின் தாயார் முதல்வருக்கு கடிதம் : என் மகன் சிறையில் உண்ணாவிரதம்.. காப்பாற்றுங்கள்

tamil.oneindia.com  -  Shyamsundar :  சென்னை: சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனது மகன் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் கடந்த 2008-ம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்டதாகவும், போன் உரையாடல்களை கசியவிட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால் இவரை மொத்தமாக பணியில் இருந்து நீக்காத நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அவருக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு அரசு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

ஓசி டிக்கெட் மூதாட்டி மீது வழக்கில்லை : காவல்துறை விளக்கம்!

மின்னம்பலம் : ஓசி டிக்கெட் வேண்டாம் என்று சண்டையிட்ட மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று  கோவை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
மகளிர் இலவசப் பயணத் திட்டம் தொடர்பாக பேசிய உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி `ஓசி’ என்று கூறிய நிலையில்,
கோவை அரசுப் பேருந்தில் பயணித்த குரும்பாளையத்தைச் சேர்ந்த துளசியம்மாள் என்கிற மூதாட்டி, நடத்துனரிடம் ஓசி டிக்கெட் வேண்டாம் காசு வாங்கிக்கொள் என்று கூறிய வீடியோ வைரலானது.
இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ, அ.தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் மூதாட்டியை அழைத்துச் சென்று நடத்துனரிடம் பிரச்னை செய்ய வைத்து வீடியோ எடுத்து பதிவிட்டதாக திமுக புகார் அளித்தது.

தமிழ் நடிகர்களின் சம்பளம்-.......

தமிழ் நடிகர்கள் நடித்து வரும் திரைப்படங்களின் பட்டியல்..! - touringtalkies

Kanagasingam Thavalogi NI  :  படித்ததில் பிடித்தது
தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்திற்கு 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக் கொள்வோம்.
 மாதம் 70ஆயிரம் ருபாய் சம்பளம் வாங்கும் ஒரு IT ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
 மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
 மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
 திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து 5 கோடி வரை.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு

tamilmurasu.com: புது­டெல்லி: காங்­கி­ரஸ் தலை­வர் தேர்­த­லில் ஜார்­க்கண்ட் மாநில தலைவர் கே என் திரி­பாதி, காங்கி ரஸ் மூத்த தலை­வ­ரும் திருவ­னந்­த­பு­ரம் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான சசி தரூர் ஆகி­யோர் வேட்­பு­மனுத் தாக்­கல் செய்­த­னர்.
அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே நேற்று வேட்பு­மனுத் தாக்­கல் செய்ததாக
அறி­விக்­கப்­பட்­டது.
அவ­ருக்கு ஆத­ர­வாக தான் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என்று மத்­திய பிர­தேச மாநில முன்­னாள் முதல்வர் திக்­வி­ஜய்­சிங் அறி­வித்­தார். வேட்­பு­ம­னுக்­க­ளைத் திரும்­பப்­ பெற வரும் 8ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வரும் 17ஆம் தேதி வாக்­குப்­ப­திவு நடக்­கும்.
காங்­கி­ரஸ் கட்­சி­யின் நிர்­வா­கி­கள் 9,000 பேர் வாக்­கு­ரிமை பெற்று  உள்ள­னர்.

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டமும் தமிழக பெண் உரிமை மற்றும் மனித உரிமை போலிகளும்

 

ஸ்டீபான் ஸ்மித்   : ஈரானில் பெண்களுக்கு எதிராக  அரச பயங்கரவாதம் கொடூரமாக தலைவிரித்து ஆடுகிறது
இது பற்றி  தமிழ் மனித உரிமை பேச்சாளர்கள் மற்றும்  பெண் உரிமை பேச்சாளர்கள் கடும் மௌனவிரதம் கடைப்பிடிக்கிறார்கள்.
இந்த விடயத்தில் குரல் கொடுக்க உங்களை  எது தடுக்கிறது?
உங்களின் மௌனம் காவி சங்கிகளின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை மறவாதீர்கள்.
பச்சை சங்கிகளுக்கு ஸலாம் போடுவதுதான் உங்கள் விருப்பம் என்றால் நீங்கள் இந்த கணமே செல்லாக்காசாகி விட்டீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்
பெரியார் அம்பேத்கர் சேகுவேரா லெனின் என்றெல்லாம் நீட்டி  ஜோக் அடிக்காதீர்கள் .
அவர்களை விட்டுவிடுங்கள்    
ஈரானில் ஒவ்வொரு நாளும் எத்தனை  பெண் உரிமையாளர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது சரியாக தெரியவில்லை
இந்த  ஹடிஸ் நஜாஃபி என்பவர் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்
இவர் ஹிஜாப் எதிர்ப்பு நடவடிக்கைகளை பொதுவெளியில் மேற்கொண்டார்   இவரை ஈரானின் கொலைகார காவலர்கள் சுட்டு கொன்றுவிட்டார்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

பொன்னியின் செல்வர்கள் - அதிகாரம், சூழ்ச்சி, போர்வெறி, நாடுகளைக் கைப்பற்றல் ஏழைகளின் நிலங்களை பறித்து பார்ப்பனர்களுக்கு ...

 தோழர் புலியூர்  :  பொன்னியின் செல்வன்.
1) இராஜராஜ சோழனின் ஏகாதிபத்திய போர் வெறி.
2) வடக்கிலிருந்து அழைத்து வரப்பட்ட பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்கலம், பிரம்ம தேயம், மஹாதானபுரம், அகரம், அக்ரஹாரம் என உழுகுடிகளிடமிருந்து பிடுங்கி தானமாக ஆயிரக்கணக்கான வேலி நிலங்களைத் தானமாகக் கொடுத்தது.
3) உழுகுடிகளின் மீது 400க்கும் மேற்பட்ட வரிகளை விதித்து, அவர்களைத் துன்புறுத்தி அவைகளை வசூலித்தது.
4) தானமாகக் கொடுக்கப்பட்ட பிராமணர்களின் நிலங்களுக்கு வரி இல்லை என அறிவித்தது.
5) உழுகுடிகள் வரி கொடுக்கத் தாமதமானால், கலம் உடைத்தல் என அவர்களின் உணவுக் கலயங்கள் உள்ளிட்டவைகளை உடைத்து நொறுக்கத் தனிப் படையணியே உருவாக்கியது.
6) உதிரியாகக் கிடந்த மதத்தை மாபெரும் கோயில் கட்டி அதன் வழியே நிறுவனமாக்கியது.
7) கோயிலின் ஸ்ரீ பண்டாரமே கருவூலம் என உழுகுடிகளின் விளைச்சலில் ஒரு பங்கை வம்படியாகப் பறித்துச் சேர்த்தது.
 ஐந்நூறுக்கும் மேற்பட்ட பிராமணர்களின் கையில் கோயில் பொறுப்பை ஒப்படைத்தது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை

மாலைமலர் :சென்னை, அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச் சினையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பலத்தை காட்ட களம் இறங்கினார்கள்.
இதில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது. கடந்த ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செய லாளராக தேர்வு செய்யப் பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவா ளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து முன்னாள் முதல்-அமைச் சர் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச் சந்திரன் கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது என்று தீா்ப்பளித்தாா்.
தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனி சாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

RSS ஊர்வலத்திற்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் உத்தரவு சரியானது - உயர்நீதிமன்ற உத்தரவில் சொல்லியிருப்பது என்ன?

கலைஞர் செய்திகள் : அக்டோபர் 2 தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து அரசு அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தவுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதி வழங்கவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும், இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனவும், நீதித்துறையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் வாதிட்டார்.

முடிவை கைவிட்ட திக்விஜய் சிங்... இருமுனை போட்டியில் காங்கிரஸ் தலைவர் தேர்தல்

 நக்கீரன் : அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான அறிவிப்பாணையை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு தலைவர் வெளியிட்டிருந்தார். அதன்படி, போட்டி இருக்கும் பட்சத்தில் வரும் அக்டோபர் 17- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வரும் அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் திக்விஜய் சிங் போட்டியிடுவதாகவும் இதற்காக நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் நேற்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இந்த முடிவை திக்விஜய் சிங் கைவிட்டுள்ளதாகவும், மல்லிகார்ஜூன கார்கேவுக்கு திக்விஜய் சிங் ஆதரவளிக்கும் முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில உச்ச கட்ட குழப்பம் - என்.திரிபாதி வேட்புமனு தாக்கல்

மாலை மலர்  :  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பிற்பகல் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை அவர் வழங்கினார். அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அன்றே எம்ஜியார் : தமிழ்நாட்டுக்கு ஆர் எஸ் எஸ் தேவையில்லை

May be an image of 1 person and standing

Ithayakkani S Vijayan  :  "எம்.ஜி.ஆரை" மிரட்டிய ஆர்.எஸ்.எஸ்.
டெல்லியில்  ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர்.கூறியது இது.
பத்திரிக்கையாளர் கேள்வி.
ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா?
எம்.ஜி.ஆர் பதில்.
டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் "இந்து மஞ்ச்" என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள் என் முன்னால் நின்று கொண்டு,தமிழ் நாட்டில் 5 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்.
எம்.ஜி.ஆர் ஒழிக என்று கோசம் போட்டார்கள்.
அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ் என்றால் அது இந்த நாட்டுக்கும்,தமிழ் நாட்டுப் பண்புக்கும் ஒத்துவராது.என்னைத் தடை செய்யும் அளவிற்கு மட்டமாக நடந்து கொண்டார்கள்.இந்து மதத்தை இப்படியெல்லாம் காப்பாற்றிவிடமுடியாது.
தமிழ்நாட்டில் இவ்வளவு கீழ்தரமான அனுபவம் எனக்கு இதுவரை நடந்ததில்லை.இதைப் பார்த்த பிறகு அந்த அமைப்பின் மீது எனக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது"என்றார் எம்.ஜி.ஆர்.

அமெரிக்க மாகாணத்தை நிலைகுலைய வைத்தது, ‘இயான்’ புயல் – 22 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின

.dailythanthi.com/  : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நிலைகுலைய வைத்துள்ளது.
22 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. வாஷிங்டன், அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாகக்கருதப்படுகிற ‘இயான்’ புயல், அந்த நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கியது.
நேற்று முன்தினம் பிற்பகலில் இந்தப் புயல், 4-ம் வகை புயலாக கேயோ கோஸ்டா அருகே பெரும் மழையைக் கொண்டு வந்தது.
பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது. இது தீவிரத்தின் உயர்ந்த நிலை என்று சொல்லப்படுகிறது.
இது புளோரிடா மாகாணத்தைத் தாக்கிய பின்னர் மெதுவாக வலுவிழந்து 2-வது வகை புயலாக தரமிறக்கப்பட்டதாக தேசிய புயல் மையம் தெரிவித்தது.

காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!

 minnambalam.com - Selvam  :  காங்கிரஸ்: அடுத்த தலைவர் திக் விஜய் சிங்? கெலாட் ஒதுங்கிய பின்னணி!
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகியுமான திக்விஜய்சிங் இன்று (செப்டம்பர் 29)காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் வேட்புமனு  படிவங்களைப்   பெற்றுச் சென்றுள்ளார்.
காந்தி குடும்பம் அல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அண்ணாவின் வேலைக்காரி தந்த விழிப்புணர்வை மடைமாற்ற கல்கி புனைந்த பொன்னியின் செல்வன்

Ovia Rajamoni : பொன்னியின் செல்வன்…..
ஒரு மாதமாக எழுத நினைத்து ஒரு வழியாக நாளை படம் வெளிவருகின்ற நிலையில் இன்றாவது எழுதி விடுவோம் என்று இந்த பதிவை எழுதுகிறேன். 
பொன்னியின் செல்வன் நாவலை முழுமையாக நமக்கு எதிரணியில் நிறுத்தும் அணியினர் ஒரு புறம்.  கல்கியின் கற்பனை வரலாறாகுமா என்கின்ற கேள்வி ஒரு புறம்.  

கல்கியின் “பொன்னியின் செல்வன்” குறித்து …… | வி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்
இது பற்றி அலட்டிக் கொள்ளாமல் கல்கியின் கதாபாத்திரத்துக்கான நடிக நடிகையர் தேர்வு பற்றிய அலசல் ஒருபுறம் அப்புறம் இசை ….
அந்த இசைக் கலைஞர்கள் சார்ந்த அரசியல் என்று கடந்த ஒரு மாதமாக சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன.  
அறிஞர் அண்ணா அவர்களின் வேலைக்காரி நாடகம் மாபெரும் வெற்றியடைந்து திராவிட இயக்க செல்வாக்கு பெருகிய வேளையில் மக்களை திசை திருப்ப கல்கியின் நாவல்கள் பங்காற்றின என்கிறார் மருத்துவர் காந்தராஜ்.

வியாழன், 29 செப்டம்பர், 2022

நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்சநீதிமன்றம்!

puthiyathalaimurai.com  -karthick :  தேவையில்லாத வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாக கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சிலருக்கு ஓய்வூதியம் (Pension) வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆத்.ஷா, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பாரம்பரிய திமுக ஆதரவாளர்களின் அதிருப்தி? சமூக வலையில் விவாதப்பொருளாகிறது?

 Somasundaram  :  திராவிட முன்னேற்றக் கழகத்தில் 33 ஆண்டுகளுக்கு முன் இணைந்தவர்களில் பலர் எந்த ஒரு பதவியிலும் இல்லாமல், ஏன் பலர் அண்ணா அறிவாலயத்தை நேரில் பார்க்காத என்னற்ற தொண்டர்களை பெற்றிருக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்..
ஆனால்
இன்று யாரெல்லாம் வருகிறார்கள். நாங்கள் அப்படியே இருக்கிறோம் என்று சென்னை மயிலாப்பூர் பகுதி கழக முன்னாள் செயலாளர் பேசியது என் கண்களில் இருந்து சில கண்ணீர் துளிகள் என்னையும் அறியாமல் என் கால் விரல்களில் விழுந்தது. அவர் பேசியதை கழகம், மற்றும் தமிழ்நாட்டின் நலன் கருதி எதிர்கால திமுகவினரின் நன்மைகளையும் கருத்தில்கொண்டு முகநூலில் அவரது பேசியதை பதிவு செய்யவில்லை.
தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்களே!!
கழகத்தின் கடைக்கோடி தொண்டர்களின் அத்தியவாசிய தேவைகள் என்ன என்பதை தெரிந்து அதை நிறைவேற்றுங்கள் என்பதை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்...
அப்படி செய்தால் மட்டுமே, அதிலிருந்துதான் உண்மையான திராவிட மாடல் ஆட்சி உருவாகும், இல்லையெனில் அது வெறும் பேசும் பொருளாக மட்டுமே இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்...

முதல்வர் ஸ்டாலின் ஒரு அப்பாவி.. சீமான், திருமாவளவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. ஹெச்.ராஜா!

tamil.oneindia.com -  Yogeshwaran Moorthi  : சிவகங்கை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அப்பாவி என்றும், அவருக்கு சீமான் மற்றும் திருமாவளவன் ஆகியோர் தான் கொம்பி சீவிவிடுவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள கற்பகவிநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
அதன் பிறகு, தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கேக் வெட்டினார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுப்பு விவகாரம்... தமிழக காவல்துறை மறுசீராய்வு மனு

நக்கீரன்  :ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுப்பு  விவகாரம்... தமிழக காவல்துறை மறுசீராய்வு மனு
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது. காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி பேரணி நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நடிகை வாணிஸ்ரீ செய்தியாளர் சந்திப்பு 20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

மாலைமலர் : சென்னை: மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது.
இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே ரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் 6.8.2022 அன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-பி ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

நாடார் வகுப்பு மக்களும் பாஜகவும்

  Sugumaran Ramasamy   : பாஜகவை தூக்கி சுமக்கும் வகுப்பினருள் நாடார் வகுப்பு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது.  
ஆனால் சனாதனத்தை தூக்கி பிடிக்கும் பாஜக எப்போதுமே அய்யர் மற்றும் அய்யங்கார் வகுப்புக்கு மட்டும் முன்னுரிமை முக்கியத்துவம் தருவதை நாம் அனைவரும் அறிந்ததே.
நாடார்கள்   தங்கள் வீட்டு நல்ல கெட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏன் மந்திரம் ஓதிட  பார்ப்பனர்களை அழைப்பதில்லை தெரியுமா?
வீட்டுப் பெரியவர்கள் அல்லது சமூகத்தில் மதிப்புமிக்க மனிதர்கள் தான் தாலி எடுத்து கொடுப்பார்கள். இன்று ஆங்காங்கே பார்ப்பனர்கள் மூலம் திருமணம் நடந்தாலும் வெகுவாக வைதீக முறைப்படி நடப்பதில்லை.
ஏன்? அந்த காலத்தில்!!
நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.
திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.

திமுக துணை பொதுச்செயலாளர் திருமதி .சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் விலகல் .. அமைச்சர் முத்துசாமி மீது கேள்விக்கணை

VikatanTv  :  2021 சட்டமன்றத் தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் வெறும் 281 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றபோதே, தலைமை அவரிடம் என்னவென்று விசாரித்திருக்க வேண்டும்.

புதன், 28 செப்டம்பர், 2022

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று ஒரு நாள் தமிழகம் கூடலூர் வருகை

 ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இன்று ஒரு  நாள் தமிழகம் கூடலூர் வருகை
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின்  ஒரு பகுதியாக செப்டம்பர் 29 ஆம் தேதி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகிறார்.
கூடலூர் ஆமைகுளம் அருகே ராகுல் காந்தி 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். பின்னர் மாலை கூடலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரிய திருமா! உச்ச நீதிமன்றத்திற்கு போகச்சொன்ன உயர்நீதிமன்றம்

தினமலர் : ஆர்எஸ்எஸ், திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், உயர்நீதிமன்றம்,
சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது. உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகம் முழுதும், 50 இடங்களில், அக்., 2ம் தேதி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், பல்வேறு நிபந்தனைகளை விதித்து, செப்டம்பர் 28க்குள் அனுமதி வழங்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

பிஎப்ஐ மீதான தடையை வரவேற்கிறேன்.. அஜ்மீர் தர்கா தலைவர் கருத்து.. 2 ஆண்டுக்கு முன்பே சொன்னேன்.

tamil.oneindia.com  - Nantha Kumar R  :  திருவனந்தபுரம்: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. 2 ஆண்டுக்கு முன்பே தடை செய்ய கூறினேன். இப்போது தடை செய்துள்ளனர் எனக்கூறி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தடை பற்றி அஜ்மீர் தர்ஹாவின் தலைவர் ஜெயினுல் அபிதீன் அலி கான் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 22ம் தேதி திடீரென்று என்ஐஏ, அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட மொத்தம் 15 மாநிலங்களில் 90க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனையானது பிஎப்ஐ எனும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

உலகம் முழுவதும் சட்டவிரோத காவல் நிலையங்களை திறந்த சீனா...China Private Army Around the World?

மாலை மலர்  :  உலகம் முழுவதும் சட்டவிரோத காவல் நிலையங்களை திறந்த சீனா... தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தகவல்
உலக வல்லரசாக உருவெடுக்கும் முயற்சியாக, கனடா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் ஏராளமான சட்டவிரோத காவல் நிலையங்களை சீனா திறந்துள்ளது. இது மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் ஊடக தகவல்களை மேற்கோள் காட்டி, புலனாய்வு இதழான ரிபோர்டிகா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கனடா முழுவதும் பொது பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து முறையற்ற காவல் சேவை நிலையங்களை சீனா திறந்திருப்பதாகவும், இதில் 3 போலீஸ் நிலையங்கள் கிரேட்டர் டொரோன்டோவில் மட்டும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.