புதன், 19 நவம்பர், 2025

பொன்ராஜ் : பாஜகவை வீழ்ந்த தெருவில் இறங்கி போராடவேண்டும்!

 Rebel Ravi : பாஜக + தேர்தல் ஆணைய கூட்டணியை வீழ்த்த பொன்ராஜ் அவர்கள் கடந்த ஆறுமாதமாக ஊடகங்களில் தொடர்ந்து வலியுறுத்தும் தீர்வு இதுதான்…!
ராகுல்காந்தி அவர்கள் வாக்கு திருட்டை வெளிப்படுத்துவதால் மட்டும் பாஜகவை வீழ்த்த முடியாது…!
ராகுல் காந்தியும் பல மாநில கட்சிகளின் தலைவர்கள் தனிதனியாக போராடுவதாலும் பாஜகவை வீழ்த்த முடியாது…!
உச்ச நீதிமன்றத்தில் வாக்கு திருட்டு மற்றும் S.I.R. உள்ளிட்டவற்றை எடுத்து சென்றாலும் அது கிடப்பில் போடப்படும். அதனாலும் பாஜகவை வீழ்த்த முடியாது…! 
தேர்தல் ஆணையர் பாஜக நிர்வாகியாக செயல்படுவதால் பாஜகவை வீழ்த்த முடியாது…! 


பாஜகவை எதிர்க்கும் மாநில கட்சிகளையும் அதன் தலைவர்களையும் CBI, ED, IT, ஊழல் வழக்கு, சொத்து குவிப்பு வழக்கில் மிரட்டுவதால் பாஜகவை வீழ்த்த முடியாது…!
அதிமுக, சிவசேனா, பாமக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல கட்சிகளை பாஜக உடைப்பதால் பாஜகவை வீழ்த்த முடியாது…!
சரத்குமார் போன்ற சில கட்சிகளை கலைத்து பாஜகவில் இணைப்பதாலும் விஜய், சீமான், ஓவைசி, பிரசாந்த் கிஷோர் போன்ற பல மாநிலங்களில் பாஜக தன் B டீம்களை இறக்குவதால் ஓட்டுக்கள் பிளவு படுவதால் பாஜகவை வீழ்த்த முடியாது…! 
வாக்குத்திருட்டு, தகுதியான வாக்குகள் நீக்கம், போலி வாக்குகள் சேர்ப்பு, அப்பா பெயர் ABCD, வீட்டு முகவரி ஜீரோ, போலி புகைப்படம், ஒரு வீட்டில் 500 ஓட்டுகள், EVM மிஷினை ஹேக் செய்வது, EVM மிஷினை ஹேட்சிங் செய்வது சிம்பள் லோடிங் முறையில் முறைகேடு, வாக்குப் பதிவு 2% - 7% வரை கூடுவது, 2 - 7 கட்ட வாக்கு பதிவு, 4 - 10 நாட்கள் கழித்து ரிசல்ட், EVM மிஷன் பாதுகாப்பு அறையில் மின்வெட்டு, சிசிடிவி செயல் இழப்பு போன்றவைகள் இருக்கும் வரை, இதை உச்சநீதிமன்றம் தடுக்காத வரை பாஜகவை வெல்லவே முடியாது…!
பாஜகவை வெல்ல ஒரே வழி…!
ராகுல் காந்தி மற்றும் பல மாநில கட்சி தலைவர்கள் மக்களை திரட்டி தெருவிற்கு வந்து இந்தியா முழுவதும் 10 நாட்கள் போராட வேண்டும். இந்தியா ஸ்தம்பிக்க வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகள் செயலிழக்கும். அப்பதான் உலகம் உற்று நோக்கும். சுப்ரீம் கோர்ட் தலையிடும். தேர்தல் ஆணையம் டிஸ்மிஸ் செய்யப்படும். புதிய தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டு தேர்தல்கள் பழைய வாக்கு சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும்…! 
அல்லது EVM மிஷினில் என்றால் அதில் லேசர் பிரிண்ட் இணைக்கப்பட்டு நாம் ஓட்டு போட்ட சின்னத்தினை உறுதிப்படுத்தும் அந்த லேசர் பிரிண்ட் சிலிப்ப்பை பேலட் பாக்சில் நாம் போட்டு அதை எண்ண வேண்டும். அதுதான் நேர்மையான தேர்தல். அப்பொழுது தான் பாஜக முகமூடி கிழிந்து தோற்று ஓடும் நிலை வரும்…! 
இல்லாவிட்டால்...
இதே நிலை தொடர்ந்தால், இதே S.I.R நிலை தொடர்ந்தால்…
பாஜக ஆளாத மாநிலங்களில் அங்கு உள்ள பாஜக ஆதரவு ஆளுநர்கள் துணை கொண்டு...
அடுத்து நடைபெறவுள்ள தமிழ் நாடு, கேரளா, பாண்டிச்சேரி, மே.வங்காளம் போன்ற தேர்தல்களிலும் பாஜக + தேர்தல் ஆணைய கூட்டணியே வெல்லும் என்று விஞ்ஞானி பொன்ராஜ் அவர்கள் எல்லா மீடியாக்களிலும் ஊடகங்களிலும் கடந்த ஆறு மாதமாக அபாய எச்சரிக்கை சங்கை ஊதி கொண்டு தான் இருக்கின்றார்கள்…! 
இனியாவது அரசியல் கட்சிகள் விழிக்குமா...? 
வரும் நாட்களில் இதற்கு விடை கிடைக்குமா…?
அலல்து புரட்சி வெடிக்குமா...?? பொறுத்திருந்து பார்ப்போம்...
பதிவு 14.11.25

கருத்துகள் இல்லை: