ஞாயிறு, 16 நவம்பர், 2025

டெக்னாலஜி.. SIR ஐ எதிர்கொள்ள திமுக எடுத்த அஸ்திரம்.. பாஜக திகைப்பு!

 Maha Laxmi  : தமிழ்நாட்டின் பல்வேறு வார்டுகளிலும் நடைபெறும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் நிலையில் திமுக இதில் டெக்னாலஜியை பயன்படுத்தி வாக்காளர்களை ஆய்வு செய்து வருகிறது. 
இதற்காக திமுக சிறப்பு தொழில்நுட்பம் சார்ந்த ஒரு முறையான அமைப்பை அமல்படுத்தியுள்ளது. 
இதற்காக, வாக்காளர் தகவல்களைத் தொகுத்து பூத் வாரியாகப் பிரிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலியை கட்சி பயன்படுத்துகிறது.
இந்த செயலி, பெயர் மற்றும் குரல் உள்ளீடு மூலம் வாக்காளர் பதிவுகளை விரைவாகத் தேடும் வசதியைக் கொண்டுள்ளது.
இதன் மூலம், கட்சித் தொண்டர்கள் வாக்காளர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு, வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யத் தேவையான வழிமுறைகளை எளிதாக வழங்க முடிகிறது.
அதாவது ஒரு ஏரியாவில் BLO அதிகாரி வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்..


அவருடன் திமுக நிர்வாகி ஒருவரும் வருவார். அவரிடம் இந்த செயலி இருக்கும்.
அதில் வாக்காளர் லிஸ்ட் எல்லாம் இருக்கும். அதில் பெயரை வாய்ஸ் சர்ச் அல்லது சாதாரண சர்ச் செய்தால் அந்த வாக்காளர் விவரம் வெளியாகும். அந்த வார்டில் உள்ள வாக்காளர் லிஸ்டை உறுதி செய்து, வாக்காளர்களை அடையாளம் கண்டு, அவர்களை SIR செய்ய வைத்து, அவர்களின் வாக்கு பறிபோகாமல் காக்கப்படும்.
தீவிரமாக களமிறங்கும் திமுக.
இந்த பணியின் ஒரு பகுதியாக, திமுக குழுக்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) வாக்காளர்களைக் கண்டறியவும், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விண்ணப்பப் படிவங்களை நிரப்பவும் உதவுகின்றன.
பல வார்டுகளில், கட்சித் தொண்டர்கள் வீட்டு அளவிலான விவரங்களை சரிபார்த்த பிறகு நூற்றுக்கணக்கான படிவங்களை நிரப்பி சமர்ப்பித்துள்ளனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு படிவங்களை வழங்குவது, residents சரியாக நிரப்ப உதவுவது, ஒரு நகலுக்கு ஒப்புதல் பெறுவது, மற்றும் இரண்டாவது நகலை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பது என இந்தச் செயல்முறை மிகவும் முறையாகப் பின்பற்றப்படுகிறது.
திமுக-வின் இந்த அணுகுமுறை, அக்கட்சியின் விரிவான பூத் நிலை பலம் மற்றும் டிஜிட்டல் தயார்நிலையை பிரதிபலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர். 
தேர்தல் விதிமுறைகளின்படி, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவுவதும், வாக்காளர்களை வழிநடத்துவதும் அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் (BLA) ஒரு வழக்கமான பொறுப்பாகும்.
SIR திமுக தீவிர மூவ், திமுகவினர் பூத் வாரியாக வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் செல்கின்றனர்.
திமுக பூத் ஏஜெண்டுகள், நிர்வாகிகள் BLO அதிகாரிகளுடன் பயணம் செய்து வாக்காளர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்கின்றனர். 
ஒருவர் விடாமல் மக்களை சந்தித்து.. எப்படி பார்ம் நிரப்ப வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் என்பதை தீவிரமாக விளக்கி வருகின்றனர்
1 கோடி வாக்குகள் கூட நீக்கப்படலாம்.. என்ற அச்சம் ஆளும் தரப்பிடம் நிலவுகிறது.
இதனால் திமுக நிர்வாகிகள் மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளனர். பல மாவட்டங்களிலிருந்தும் வரும் தகவல்கள், திமுக பிரதிநிதிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்பில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டுகின்றன. 
திமுக நிர்வாகிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் வீடு வீடாக சென்று பணிகளை செய்கின்றனர்.
அதோடு மக்களுக்கு விண்ணப்பத்தை நிரப்புவதில் உதவி செய்கின்றனர்.
இதை எதிர்பார்க்காத பாஜக தரப்பையே ஒரு கட்டத்தில் அப்செட்டில் ஆழ்த்தி உள்ளதாம். 
பீகாரில் இப்படி நடக்கவில்லை. இப்போது SIR நடக்கும் மேற்கு வங்கத்தில்கூட இப்படி நடக்கவில்லை. ஆனால் திமுக மொத்தமாக களமிறங்கிவிட்டது.
ஒரு பக்கம் வழக்கும் போட்டுவிட்டு இந்த பணிகளை தீவிரமாகவும் இன்னொரு பக்கம் செய்கிறார்கள்.
2 BLO அதிகாரிகள் போனால் கூடவே 4 திமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவ நிற்கிறார்கள்.
ஆனால் பாஜக, அதிமுக நிர்வாகிகளைத்தான் காணவே இல்லை. 
திமுக இந்த பணிகளை மொத்தமாக கண்ட்ரோல் எடுத்துவிட்டது என்று பாஜக தலைகள் பலர் புலம்ப தொடங்கி விட்டார்களாம்.
தமிழ்நாடு தலைகுனியாது 
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடுவெல்லும்
வாட்ஸ் அப் பகிர்வு

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தமிழன் என்று ஓர் இனம் உண்டு அவனுக்கு தனி பெரும் சிறப்பு உண்டு ,👌💐