சனி, 22 நவம்பர், 2025

கரிகாலன் : எல்லாவித அநியாயங்களையும் வக்கிரத்தோடு அரங்கேற்றி வரும் திரு.ஷபீர் அகமது,

 Karikalan Kiru  : எல்லாவித அநியாயங்களையும் வக்கிரத்தோடு அரங்கேற்றி வரும் திரு.ஷபீர் அகமது, அவரை நோக்கி வரும் விமர்சனங்களையும் கேள்விகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் "மத ரீதியான தாக்குதல்" என்று 'victim' வேடம் போட்டு  தப்பிக்கப் பார்க்கிறார். வேறு வழி? துரோகம் செய்யும் அனைத்து கோடாரிக் காம்புகளும், தங்கள் குட்டு வெளிப்பட்டவுடன் கைகொள்ளும் அதே அரதப் பழசான வழியைத் தான் திரு.ஷபீரும் தேர்ந்தெடுத்துள்ளார்.
இவருக்கு ஆதரவாக 2 சங்கங்கள் அறிக்கை வெளியிட்டு,கோதாவில் குதித்துள்ளன.
1. தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் 
2. சென்னை பத்திரிகையாளர் சங்கம் 
இதில் தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் மற்றும் அதன் நிர்வாகிகளின் பின்னணியை பார்த்தாலே திரு.ஷபீரின் victim card தானாகவே டார் டாராக கிழிந்துவிடும். 


✓முதலில், இந்த யூனியன் Bharti Shramjivi Patrakar Sangh என்ற அகில இந்திய சங்கத்துடன் இணைக்கப்பட்டது.
இந்த Sangh-இன் இணைய முகப்பு பக்கத்தை இங்கே பகிர்கிறேன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். காவி உடை, ஓம குண்டம் என ஆச்சாரமாக இருக்கும். இந்த சங்கத்தைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். 
~இத்தகைய தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியனின் மாநில தலைவர் R. சந்திரிகா - Win TV முன்னாள் ஊடகவியலாளர் (இந்த டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் - பாஜகவின் தொங்குசதை என்பது உலகமறிந்த செய்தி. மேலும், மைலாப்பூரைச் சேர்ந்த ஒரிஜினல் இந்துக்களின் ரூ.600 கோடியை விழுங்கியவர்.)
~R. கதிரவன், மாநில பொதுச்செயலாளர் - Polimer News (விசிக தலைவர் திருமாவளவன் கார் இடிக்காதபோதே இடித்ததாக பொய்ச் செய்தி வெளியிட்டு, அண்ணாமலையின் சதிக்கு உதவியவர்)
~V.M சுப்பையா, மாநில இணை பொதுச்செயலாளர் - புதிய தலைமுறை (தமிழிசை சௌந்தரராஜன் பாஜக தலைவராக இருந்தபோது அவருக்கு அறிக்கைகள் - உரைகளை எழுதிக் கொடுத்தவர். TVK, BJP வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பக்கூடாது என்று குறுக்கே விழுந்து அவர்களுக்காக விழுப்புண்களை ஏற்றவர்.)
~FEFSI சிவா, மாநில இணை பொதுச்செயலாளர் - பாஜக கலை கலாச்சார பிரிவு மாநில தலைவராக உள்ளார்.
~C. மீனாட்சி சுந்தரம் - பாஜக நிர்வாகி
✓இரண்டாவதாக இருக்கும், சென்னை பத்திரிகையாளர் சங்கம் என்ற அமைப்பின் பொதுச்செயலாளர் சாட்சாத் திரு, ஷபீர் அகமது அவர்கள்தான். அவர் ஊதவே தேவையில்லை. 
ஆக, பத்திரிகையாளர் போர்வையில் உள்ள சங்கிகளின் பாதுகாப்பு வளையத்தில் பத்திரமாக இருக்கும் திரு. ஷபீர் அகமது, திரு. முருகேசன் ஆகியோருக்காக 'பத்திரிகையாளர் மீதான தாக்குதல்', 'தனிமனித தாக்குதல்', 'மதரீதியிலான தாக்குதல்' என்று யாரும் கம்பு சுத்த வர வேண்டாம்.
✓ஊடக வேலூர் இப்ராஹிம்களை - முருகேசன்களை - சுப்பையாக்களை தமிழ்நாடு மக்கள் புறந்தள்ளுவார்கள் என்பது உறுதி!
இணைந்திருங்கள்.. x பதிவுகள் தொடரும்!

கருத்துகள் இல்லை: