வியாழன், 20 நவம்பர், 2025

மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் உச்ச நீதிமன்றம்?

 Vasu Sumathi  :  "சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை என்றாலும், ஆளுநர்களுக்கும் ஜனாதிபதிக்கும் ஒப்புதல் வழங்க காலக்கெடுவை நிர்ணயித்த இருவர் அடங்கிய அமர்வின் ஏப்ரல் 8 தீர்ப்பில் உள்ள உத்தரவுகள் செல்லாது.  அவை அரசியலமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது." -  ஐவர் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு. 
இதற்கு முன் கொஞ்சம் நியாயமாக தீர்ப்பு வழங்கிய உநீம.. இப்போது பல்டியடித்து, மீண்டும் அரசுக்கு சாதகமாகவே உப்பு சப்பில்லாத ஒரு முடிவை சொல்லியிருக்கிறது. முழு ஆணையும் வந்த பிறகு விரிவாக அலசலாம். ஆனால் இது ஆரோக்கியமான தீர்ப்பாக இல்லை. 
"ஆளுநரிடம் 3 அரசியலமைப்பு சார்ந்த வாய்ப்புகள் உள்ளன - ஒப்புதல், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்தி வைத்தல், சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புதல். 
ஆளுநர் இந்த மூன்று வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் தன் விருப்புரிமையைப் பயன்படுத்துகிறார். 
ஜனாதிபதி தன் பணியைச் செய்வது குறித்து கருத்து சொல்லுவது நியாயமானதல்ல. நீதிமன்றம் அதன் தகுதிகளுக்குள் நுழைய முடியாது. ஆனால் நீண்ட, விளக்கப்படாத அல்லது காலவரையற்ற தாமதம் ஏற்பட்டால், நீதிமன்றம் தன் வரையரைக்குள் தங்கள் விருப்பத்தை வழங்க முடியும். இது ஜனாதிபதிக்கும் பொருந்தும்.
நீதிமன்ற மறுஆய்வுக்கு முழுமையான தடை உள்ளது. ஆனால், நீண்ட கால செயலற்ற நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றம் தலையிடலாம். (இது ஒரு) அரசியலமைப்பு அலுவலகம்.
ஆளுநர் அல்லது ஜனாதிபதிக்கு நீதித்துறை ரீதியாக காலக்கெடுவை நிர்ணயிப்பது பொருத்தமானதல்ல. 
ஒவ்வொரு முறையும் ஆளுநர் ஜனாதிபதிக்கு இட ஒதுக்கீட்டு மசோதா மசோதா 143 இன் கீழ் குடியரசுத் தலைவர் ஆலோசனை பெறக்கூடாது. 
மசோதாவாக இருக்கும் நிலையில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் முடிவுகள் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது அல்ல.
ஆளுநர் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களை பிரிவு 142 ஐப் பயன்படுத்தி மாற்ற முடியாது. கருதப்பட்ட ஒப்புதல் (deemed assent) என்ற கேள்வியே இல்லை. ஆளுநரின் ஒப்புதலை நீதிமன்றத்தால் மாற்ற முடியாது. 
ஆனால் ஆளுநர்கள் சூப்பர் முதலமைச்சர்களாக செயல்பட முடியாது,  ஒரு மாநிலத்திற்குள் இரண்டு நிர்வாகிகள் இருக்க முடியாது. "
- தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யாகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ் சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு.

கருத்துகள் இல்லை: