ராதா மனோகர் : இலங்கை ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இனவாத மதவாத சேற்றுக்குள் இருந்து மெதுவாக மேலெழுந்து வருகிறது!
இப்போது என்ன காரணம் கொண்டும் வெறுப்பு அரசியலை தூண்டி விடுவது சரியல்ல.
எல்லாவற்றிலும் மேலாக பௌத்தம் தமிழர்களின் மதமும்தான் சிங்கள மொழியும் தமிழர்களின் மொழிதான்.
அது பௌத்தத்தை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய மொழி,
பார்ப்பனர்கள் கடலை கடக்க கூடாது என்ற அந்த காலத்து வழக்கப்படி அவர்கள் இலங்கைக்கு வரவில்லை.
எனவே இலங்கையில் அவர்களால் ஆபத்து இல்லை.
இந்த காரணத்தால்தான் அது ஓரளவு மக்கள் பேசும் மொழியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது .
மேலும் தமிழ் மொழியை சைவர்கள் கைப்பற்றி தமிழும் சைவமும் ஒன்று என்ற ரீதியில் மன்னர்களின் ஆதரவோடு அதை நடைமுறைப்படுத்தினர்.
அதனால்தான் தமிழர்களின் திருக்குறளையே எந்த காலத்திலும் சைவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
கூறுமானவரை இருட்டடிப்பு செய்தார்கள்.
சிலப்பதிகாரம் போன்ற ஐம்பெரும் காப்பியங்கள் மக்களின் வாழ்வியலை பற்றி பேசியதால் அவற்றையும் இருட்டடிப்பு செய்தார்கள்.
அவை களப்பிரர்கள் காலத்தில்தான் வெளியே வந்தது என்பது மறக்க கூடாத ஒரு உண்மையாகும்.
இன்று தமிழர்களே அதிகம் கண்டு கொள்ளாமல் இருக்கும் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையும் சிங்கள மக்கள் இன்றும் பள்ளிக்கூட நாடங்களிலும் இடம்பெறும் அளவுக்கு அவை பிரபலமாக இருப்பது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல!
தமிழர்களின் ஐம்பெரும் காப்பியங்கள் பௌத்தத்தையும் சமணத்தையும் சார்ந்தவைதான்
சைவத்தை சார்ந்து எந்த பெரும் இலக்கியம் இல்லை.
பௌத்தம் நமது மதம்தான்
சிங்களமும் நமது மொழிதான்
அவர்களும் திராவிடர்கள்தான்!
Shabeer Mohamed :
திருகோணமலை சம்பவம் தொடர்பில் நீங்கள் அறியாத உண்மைகள் சில !!
உண்மையில் இந்தப் பிரச்சினைக்கான காரணம் ஞாயிறு பாடசாலைக்காக புதிதாக அடிக்கல் நாட்டிய சம்பவமோ அல்லது புத்தர் சிலை வைக்கப்பட்டதோ அல்ல. இவை அத்தனைக்கும் முக்கிய காரணம் ஒரு Coffee Shop !!
“ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை பிரதேசத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபானி லியனகே என்பவரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோர் நடத்துகின்ற இந்த கடைக்கு ‘Coffee Shop’ எதிராக பலமுறை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐ.தே.கட்சியின் குறித்த ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக காணப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு - ‘அப்போதைய ரணில் விக்ரமசிங்க அரசின் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த செந்தில் தொண்டமன் உடன் இணைந்து காணிகளை அபகரிப்பது’ என்பதாகும் - என ஊர் மக்கள் சிலர் குறிப்பிட்டார்கள்…”
எவ்வாறாயினும் குறித்த கடையை நடத்திச் செல்கின்ற L Thilak Perera என்பவரை நாங்கள் சந்தித்து அவருடன் கதைத்தோம். அப்போது இந்த விடயங்களை அவர் கூறினார்.
எமக்கு இந்த காணியை சிரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரை மூலம், குறித்த விகாரையின் நல தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு’ என்ற அடிப்படையில் குத்தகைக்கு தரப்பட்டது. உண்மையில் விகாரைக்கு வருமானங்கள் எதுவும் பெரிதாக இல்லை. ஆகவே இருக்கின்ற இந்த காணியில் இருந்து ஏதேனும் வருமானத்தை பெற்றுக் கொள்வதற்காகவே அவ்வாறு செய்தார்கள்.
அதன்பின்னர் 2025. 07. 18 கரையோர பாதுகாப்பு திணைக்களம் எமது கடையின் Permit இனை Cancel செய்கின்றார்கள். அதற்கான காரணமாக அவர்கள் கூறிய விடயம் ‘நாங்கள் எமக்கு வழங்கியிருந்த எல்லையை தாண்டி சென்று வியாபாரம் செய்தோம்’ என்பதாகும்.
மேலும் உடனடியாக இந்த இடத்தை விட்டு அகன்று செல்லுமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கிடையே குறித்த கடிதத்தை விகாரை தரப்பினர் மேல்முறையீடு செய்கின்றார்கள். ஆனாலும் அது நிராகரிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை இயக்குநர் (ஜெனரால்) தமக்கு காணப்படுகின்ற அதிகாரங்களை பயன்படுத்தி போலீசாருக்கு இந்த கடையை அகற்றுவதற்கு பணிக்கின்றார்.
பின்னர் கடந்த நான்காம் திகதி போலீசார் கரையோர பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து இந்த இடத்தில் உள்ள கடையினை அகற்ற வந்துள்ளார்கள். அப்போது விகாரையின் தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஏழு நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார்கள்.
பின்னர் விகாரை தரப்பினர் போலீஸ் நிலையத்திற்கு சென்று ஏற்கனவே கடை உரிமையாளர் Thilak Perera என்பவருக்கு எதிராக நகர சபை போட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. குறித்த வழக்குக்கான ஒரே சாட்சி இந்த கடையாகும். ஆகவே இந்த கடை இந்த இடத்தில் இருக்க வேண்டும் என, கூறியுள்ளார்கள்.
அதற்கு போலீசார்: "அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை."
விகாரை : "அப்போது எங்களுக்கு இன்னும் ஏழு நாட்கள் தாருங்கள். அதற்குள் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று ஏதேனும் செய்கின்றோம்."
போலீசார்: "சரி அதிகபட்சம் ஏழு வேளை நாட்கள் தருகின்றேன்."
சரியாக அவர்கள் வழங்கிய ஏழு நாள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகின்றது. அடுத்து வருகின்ற வேலையினால் இந்த திங்கட்கிழமை. ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக ஒரு புத்தர் சிலை அந்த இடத்திற்கு வருகின்றது.
- Shabeer Mohamed.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக