புதன், 1 அக்டோபர், 2025

பெரியார் அம்பேத்கரின் சாயலை எங்கும் காணமுடியாத கும்பல்!

May be an illustration of 1 person and text

Loganayaki Lona :  கரூர் துயர சம்பவத்துக்கு பின் கடந்த சிலநாட்களில் தமிழ்நாட்டில்  அறமென்பதே புரியாத  ,எதற்கும் கட்டுப்படாத புதுவித இளைஞர்களை,பெண்களைக் கண்டு அதிர்ச்சியாக உள்ளது.பரிதாபமாக உள்ளது
*பள்ளிச்சிறுவர்கள் மஞ்சள் சிவப்பு துண்டுகளை கழுத்தில் தலையில் கட்டிக்கொண்டு விஜய்ய சி.எம் ஆக்குவோம் என்கின்றனர்.
*இளைஞர்கள் விஜய் வாகனத்தினிடையே சாலை விதிக்கு புறம்பாக போய் அவர் முன்பாகவே விபத்தில் , ரசிக போதையில் சரிந்து விழுகின்றனர் 
*இஸ்லாமிய பெண் ஒருவர்  ஸ்டாலின்களை ஒழித்து விடுவார் எங்க தளபதி என்கிறார்.
அவர்க்கு முதல்ல ஒரிஜினல் ஸ்டாலினை  தெரியவில்லை .ஸ்டாலின்கள் ஒழிந்தால் பாசிசத்திடம் சிக்கப்போவதில் முதல்வரிசையில் இந்திய இஸ்லாமிய மக்கள் உள்ளனர் எனும் பேராபத்தும் தெரியவில்லை.
*5 நிமிசத்துல செருப்பு எறிஞ்சு 5 பேர் மேல  விழுந்தது ஒரு கேடு கெட்ட நிலை ,அதை தளபதின்னா அப்டித்தான்னு சொல்லும் இளைஞன்.
*பெண்கள் விஜய்யின்  தரிசனம் கிடைத்தது என்கின்றனர்.
*நெருக்கடியான கூட்டத்தில் குத்து நடனமாடும் பெண்கள் அந்தகுழுவில் abuse செய்யப்பட்டு ,திரும்ப அதே போல் நடனமாட வரும் காட்சியில் நான் அதிர்ச்சியில் உறையும் போதே இன்னொரு பெண் விஜய்ணா பார்த்தா போதும் .women safety தருவார் என்கிறார்.


*திமுக ,அதிமுக மாற்றி மாற்றி வந்து என்ன செய்தனர்? கெட்டவார்த்தைகளை பொது மைக்கில் சகஜமாக பேசும் புது மாற்றம் வேண்டும் என்கின்றனர் 
*அரசியல் கோரிக்கை ஏதும் இல்லை.அண்ணன பார்த்தா போதும் என்கின்றனர்.
*விஜய்யை 21 வருடம் காதலிப்பதாக சொல்லும் பெண்..
*வீட்டுக்காரரை விட விஜய் தான் பிடிக்கும் எனும் பெண்..ஹ்ஹீ..ஹ்ஹீ..ஹ்ஹீ எனும் பல வித பெண்கள் 
*சிறு பெண் குழந்தைகளை ஏன் இந்த கூட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள் என்றால்  அருகில் இருக்கும்கூட்டத்தை நம்பி கொண்டு வந்ததாக பதில் சொல்கிறார்.
*ஒரு தடவை ஆட்சியை  கொடுத்து பாருங்க என சொல்லும் எலைட் ரசிகைகளின் போதையுணர்வின் உச்சத்தை பார்த்த அதிர்ச்சி இன்னும் நமக்கு  தெளியவில்லை.
*திமுகவா நீங்க என நம்மைப்பார்த்து  கமெண்ட்ஸில்  நக்கல் செய்கின்றனர் .
*ஏன் பள்ளிக் குழந்தைகளின் பிணத்தை பார்த்து பள்ளிகல்வித்துறை அமைச்சர்  அழவேண்டும் என்கின்றனர்.
*ஏன் கரூர் பகுதி அமைச்சர் மருத்துவமனைக்கு சென்றார் .சதி என்கின்றனர்.
*ஏன் ஆம்புலன்ஸ் வந்தது என பதறுகின்றனர்.பெரிய ஆம்புலன்ஸ் ஏன் வந்தது என்கின்றனர்?25000 பேர் கூடிய இடத்தில் அசம்பாவிதமெனில் மினி ஆம்புலன்ஸ் கேட்டால் என்ன செய்வதோ,!
*ஆதாரமில்லாமல் ஸ்ப்ரே அடித்தனர் ,கத்தியில் கீறினர் என இஷ்டத்துக்கு கலவரம் தூண்டும் தலைமைகள் போல் பேசினர்.
*ஏன் இத்தனை பிணங்கள் விழ வைத்தனர் என தன் கட்சி நிர்வாகிகளை  சுயபரிசோதனை செய்ய வக்கில்லாமல் ஏன் போஸ்ட்மார்ட்டம் இரவு செய்தனர் என்கின்றனர்?
*இத்தனை ப்ரச்சனையிலும் இந்த நிம்மிமாமிக்கு கூட்டத்துல பாதிக்கப்பட்ட ஒரு  பொண்ணு சிக்கிருப்பதும்,அவரின் கைக்கூலித்தன உளறல்களும்  கரூரில் பெரும் கொடுமை
*பெரியார்,அம்பேத்கரின் சாயலைக்கூட எங்கும் காணமுடியாத உங்களிடமிருந்து முதலில் அவர்களை மீட்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: