![]() |
Vasu Sumathi : இதை Times of India அரசியல் பிரிவு ஆசிரியர் திரு. அருண் ராம் அவர்கள் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று எழுதியது. சுருக்கமாக அதன் சாராம்சம் தமிழில்...
அருண் ராம்: "ஒருமுறை, விஜய் என்னை பேட்டிக்கு அழைத்தபோது, நான் அவரை எங்கள் அலுவலகத்திற்கு அழைத்தேன்.
எனக்கு அவரது நெருங்கிய வட்டத்திலிருந்த ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. "அவர் உங்கள் பணியிடத்திற்கு வந்தால்,
போலீஸ் தடியடி வரை போகும், அதெல்லாம் தேவையா" என்று கேட்டார்.
அப்போது அவரிடம் பேசியதில், விஜய் அணியினர் பின்வரும் கருத்தை எனக்கு ஆணி அடித்தார் போல் பதிவு செய்தார்கள்.
விஜய்யின் பின்னால் உள்ள கூட்டம் "ரசிகர்கள்" அல்ல.
அது ஒரு கட்டுப்பாடற்ற கும்பல்.
ஆனாலும், பல மணி நேரம் கூட்டத்தை திரட்டுவதன் மூலமும், கேலரிக்காக விளையாடுவதன் மூலமும், கும்பல் வெறியை (mob frenzy) அரசியல் மூலதனமாக கருதுவதன் மூலமும் விஜய் அதை தெரிந்தேதான் செயல்படுத்துகிறார்..
ஒரு திரைப்பட நட்சத்திரத்திற்கு இது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கலாம்,
பெருமை சேர்க்கும் விஷயமாக கூட இருக்கலாம்.
ஆனால் விஜய் ஒரு அரசியல்வாதியாக மாற விரும்பினால், அவர் வேன் மீதும், உயர் மேடைகளில் இருந்தும் விலகி, மக்களுடன் கலக்க விருப்பமும் உறுதியையும் காட்ட வேண்டும்."
விஜய்க்கு மற்ற எந்த நடிகருக்கும் இல்லாத அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் ஒரு சிறிய சமாளிக்கக்கூடிய சோக நிகழ்ச்சி நடந்தவுடன், தனது ரசிகர்களுடன் நிற்க தைரியமோ, நம்பிக்கையோ அல்லது அடிப்படை மனிதாபிமானமோ இல்லாமல், ஓடிவிட்டார்.
--------
கரூரில் நாம் பார்த்த அனைத்தையும் அந்த கட்டுரை எச்சரித்தது:
---------
1. மேடை முதிர்ச்சியின்மை மற்றும் பார்வையாளர்களுக்காக செயல்படுதல்: வெறியைத் மட்டுமே தூண்டும், தலைமை பண்புகளை அல்ல.
2. அரசியல் ஒழுக்கத்தை கேலி செய்வது: அரசியலை ஒரு காமெடி நாடகம் போல் சித்தரித்தல்.
3. சித்தாந்தம், ஒழுக்கம் அல்லது ஆழம் இல்லாமல் தன்னை எம்.ஜி.ஆருடன் தவராக ஒப்பீடு செய்தல்.
4.தொண்டர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் பவுன்சர்களை சார்ந்திருப்பது, : பொறுப்பை துறந்து காட்சியை மட்டுமே நம்புதல்.
5. கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம், ஒழுக்கமான அரசியல் தளம் அல்ல: கும்பல்கள், ஒரு இயக்கம் ஆகாது.
6. உயர் மேடைகள், கேரவன் மேடைகளில் மக்களிடமிருந்து விலகியிருத்தல்: உண்மையான அன்பிற்கு பதில் நாடக அரங்கேற்றம்.
7. சினிமாவிலிருந்து அரசியலுக்கு செல்வதில் தோல்வி: பொறுப்பில்லாத, கடமை உணர்ச்சி இல்லாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பியிருப்பது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக