திங்கள், 25 ஆகஸ்ட், 2025

திமுக அரசின் Strengths, Weakness, Opportunities, Threats - விமலாதித்தன் மணி

No photo description available.

 Vimalaadhithan Mani :   ஒரு திராவிட சிந்தனையாளனாக, நடுநிலையான அரசியல் விமரிசகனாக திமுக அரசின் கடந்த நான்காண்டு செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து என்னுடைய கருத்துக்களை திமுக அரசின் Strengths, Weakness, Opportunities, Threats என்று வகைப்படுத்தி இருக்கிறேன். 
இது உலகளாவிய வியாபார உலகில் ஜாம்பவான்கள் தங்கள் வியாபார செயல்பாடுகளை சீர்திருத்தி மேலும் முன்னேற்றி லாபம் பார்க்க  கையாளும் SWOT(Strenths, Weakness, Opportunities, Threats) Analysis என்ற உபாயமாகும். 
Strengths
சமூக நீதியை போற்றும் ஆழமான பெரியாரிய மற்றும் திராவிட சித்தாந்தங்கள் அரசின் செயல்திட்டங்களுக்கு அடிப்படையாக இருப்பது.
தமிழகத்தின் நகரங்கள் முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை கட்சி ஆழமாக வேரூன்றி இருப்பது.
வலுவான வாக்கு வங்கி (45.7%)
வலுவான கட்சி உள்கட்டமைப்பு.
வலுவான பூத் கமிட்டி கட்டமைப்பு.
பெரியாரிய மற்றும் திராவிட சித்தாந்தங்களில் நல்ல புரிதல் உள்ளவர்கள் கட்சியின் பல்வேறு மட்டங்களிலும் விரவி கிடப்பது.
மக்களிடம் நல்லமுறையில் சென்று சேர்ந்து இருக்கும் அரசின் பல்வேறு நலத் திட்டங்கள்.


சமூகத்தின் அறிவார்ந்த சாதனையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களிடையே பெரும் வரவேற்பை அரசு பெற்று இருப்பது. 
கூட்டணி காட்சிகளை பிரியவிடாமல் அரவணைத்து செல்லும் முதல்வரின் Inclusive Politics அணுகுமுறை. 
பொது மக்களிடம் சென்று அடைந்து இருக்கும் முதல்வரின் மாட்சிமையான பிம்பம்.
மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் என்று சமூகத்தின் பல பிரிவினரிடமும் அரசு மேல் ஏற்பட்டு இருக்கும் அபரிமிதமான நம்பிக்கை மற்றும் மரியாதை. 
ஆளும் அரசாக இருப்பதால் கையில் இருக்கும் அதிகாரம் , ஆள் , அம்பு, செல்வாக்கு. 
அனுசரணையான கூட்டணி கட்சிகள்.
உலகளாவிய பிரசித்தி பெற்ற நிதி நிபுணர்கள், ஆலோசகர்களால் அரசு வழிநடத்தப்படுவது. 
திறமையான பல்வேறு அணிகள் .. குறிப்பாக அரசுக்கு எதிரான வழக்குகளை திறமையாக கையாண்டு வெற்றிகளை குவித்து வரும் வழக்கறிஞர் அணி. 
இளமையான துடிப்பான இளைஞரான துணை முதல்வர்.
கட்சியில் உறுப்பினராக இல்லாமலே கட்சிக்காக களமாடும் இணையதள  போராளிகள் (இல்லீகல் இணைய உபிக்கள்).
மக்களிடம் அரசை பற்றிய கருத்தோட்டத்தை தொடர்ந்து கண்காணித்து மக்களின் நம்பிக்கையை சம்பாதிக்க உதவும் சீர்த்திருத்தங்களை அடையாளம் காண அரசுக்கு உதவும் PEN போன்ற அமைப்புக்கள். 
அரசுக்கு துணை நிற்கும் மீடியா.
கேள்வியே கேட்க இயலாத அளவுக்கு புள்ளிவிவரங்கள், தரவுகளுடன் தர்க்கரீதியில்  களமாடும் கழகத்தின் இளம் பேச்சாளர்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் (மதிவதனி, செந்தில்வேல், கிருஷ்ணமூர்த்தி, இந்திரகுமார் தேரடி  போன்றவர்கள்)
Weakness
-----------------
துடிப்புடன் பணியாற்ற இயலாத முதியவர்கள் பலர் மந்திரிகளாக இருப்பது.
தொழில், நிதி மற்றும் ஐடி சேவை போன்ற ஒரு சில அமைச்சகங்களை தவிர மற்ற அமைச்சகங்கள் மிகபெரிய செயல் சார்ந்த சீர்த்திருத்தங்கள் எதையும் கடந்த நான்கு வருடங்களில் செய்யாதது.
சில மந்திரிகளின் பொதுவெளியிலான பொறுப்பற்ற பேச்சு மற்றும் செயல்பாடுகள்.
மந்திரிகள் எளிதில் பொதுமக்களால் அணுகமுடியாதவர்களாக இருப்பது.
துறை ரீதியான அறிவோ அனுபவமோ இல்லாத பலர் மந்திரிகளாக இருப்பது.
IAS,IPS அதிகாரிகளின் மீதான அதிகப்படியான சார்பு.
காவல் நிலைய மரணங்கள், தலித்துகள் மீதான தாக்குதல்கள், ஆணவ படுகொலைகள் போன்ற அவலங்கள் கடந்த அரசுகளின் ஆட்சியை போல இந்த ஆட்சியிலும் தொடர்வது.
முதல்வர் அவர்களின் முதுமை மற்றும் அது தொடர்பான இயல்பான உடல்நல கோளாறுகள்.
இளமையான துடிப்பான இளைஞரான துணை முதல்வரை அரசு மற்றும் கட்சி பணிகளில் முழுவீச்சில் இன்னும் களமிறக்காமல் இருப்பது.
கடந்த அரசின் ஊழல் மற்றும் கொலை குற்றங்களுக்கான தண்டனைகளை விசாரித்து இன்னும் நீதிமன்றம் மூலம் தண்டனை வாங்கி கொடுக்காமல் இருப்பது (இது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று).
நிறைவேற்ற இயலாத நீட் தேர்வு ரத்து போன்ற விஷயங்களை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்தது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் அரசின் மீதான அதிருப்தி.
காவல்துறை மற்றும் உளவுத்துறையின் சீர்த்திருத்தப்பட வேண்டிய செயல்பாடு.
வாரிசு அரசியல் செய்கிறது திமுக என்ற குற்றச்சாட்டுக்கு இடமளிக்கும் வகையில் கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலும் வாரிசுகளின் ஆக்கிரமிப்பு.  
திறமையான புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க படாமல் இருப்பது.
Opportunities
----------------------
அறிவார்ந்த இளைஞர்கள் நிறைய கட்சியில் சேர்வது.
மத்திய அரசுடன் கடைபிடிக்கும் இணக்கமான அணுகுமுறை.
தேசிய அளவிலான அரசியலில் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரும் மரியாதை, அங்கீகாரம்.
அரசுடன் கைகோர்க்க தயாராக இருக்கும் பல்வேறு அறிவுசார் நிபுணர்கள், ஆலோசகர்கள் 
Threats
-------------
இந்து தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து தமிழகத்தில் வலுப்பெறுவது.
வலுவிழந்த எதிர்க்கட்சியான அதிமுகவுடன் மிக வலுவான மத்தியில் ஆளும் பாஜக கைகோர்த்து இருப்பது.
அனுபவமும் திராவிட சித்தாந்த அறிவுமற்ற பல பிறகட்சியினரை (திமுகவுக்கு எதிர் சித்தாந்தங்களை கொண்ட பாஜகவினர் உட்பட ) தொடர்ந்து திமுகவில் இணைத்து பொறுப்புகளை கொடுப்பது.
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டு இருக்கும் அரசின் மீதான இயல்பான சலிப்பு மற்றும் அதிருப்தி  (Anti Incumbency).
திராவிட கருத்தியலுக்கு ஒவ்வாத கண்டத்துக்குரிய  பல சங்கித்தனமான வேலைகள் சில அமைச்சகங்களில் வெளிப்படையாக நடப்பது. எடுத்துக்காட்டு முருகன் மாநாடு, முருக கடவுளுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிலை அமைப்பு, பள்ளி கல்வித்துறையில் ஊடுருவி இருக்கும் சங்கிகள் போன்ற பாஜக மட்டுமே செய்யும் சங்கித்தனமான செயல்கள் . இவை நடுநிலையாளர்கள் மத்தியில் அரசின் மீதான நம்பகத்தன்மையை குலைக்கும்.
தேசிய அளவில் பேசுபொருளாக்கப்பட்ட சில அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை, பல அமைச்சர்கள் மீது தொடர்ந்து நடக்கும் அமலாக்கத்துறை ரெய்டுகள் மற்றும் விசாரணை.
மந்தகதியில் செயல்படும் ஐடி அணி.
புதிய அரசியல் வரவான விஜயின் பின் திரளும் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள்.
மேற்சொன்ன விஷயங்களில் Weakness மற்றும் Threats உடனடியாக தீர்க்கப்பட வேண்டியவை. தவறும் பட்சத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. 
இந்த பதிவு அரசின் கவனத்துக்கு செல்லும் பட்சத்தில் ஒரு திராவிட கழகத்தின் தீவிர அபிமானியாக நான் சொல்லி இருக்கும் அரசின் weakness மற்றும் அரசுக்கான threats போன்றவற்றை நிவர்த்தி செய்ய என்னுடைய அரசியல் அறிவின் அடிப்படையில் யோசனைகளை பகிர தயாராக இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: