Vasu Sumathi : பிகாரில் முதலில் தேர்தல் ஆணையம்
65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது.
அதில் 20 லட்சம் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
அதில் பலர் இன்று உயிருடன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
இந்த SIRன் பின்னால் உள்ள மிகப்பெரிய சதி, நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினராம்.
இது கழித்தல்.. கூட்டலை பார்ப்போம்.
இப்போது பத்திரிகையாளர்கள் வரைவு பட்டியலை சல்லடை போட்டு பார்த்ததில் ஏகப்பட்ட போலி வாக்காளர்கள் seர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
மூன்றே தொகுதிகளில் மட்டும் 80,000 போலி வாக்காளர்களை பொய் முகவரிகளில் திணித்திருக்கிறார்கள் என்றால் பீகார் முழுவதும்... கற்பனை செய்து பாருங்கள்.
இதெல்லாம் பீகார் தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு செய்தது. இப்போது மாட்டிக்கொண்டார்கள். இதை தென் மாநிலங்களில் செய்ய முடியாததால் இங்கு பெரிய அளவில் அவர்களால் ஊடுருவ முடியவில்லை. இருந்தாலும்..
தமிழ்நாட்டில் சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக திடீரென்று எப்படி 14% வாக்குகளை பெற்றனர். அப்போதே சந்தேகம் எழுந்தது. அப்படியென்றால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் இவர்கள் இந்த திட்டத்தை வெள்ளோட்டம் விட்டிருப்பார்க்களோ?
இப்போது பீகார் சம்பவம் இவர்கள் முகமூடியை கிழித்து எறிந்துவிட்டது. இனி களத்தில் இறங்குவோம்.
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் பெயர் வக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
திமுக மற்றும் இந்தியா கூட்டணி தோழர்கள் நாளை முதல் அவரவர் வார்டுகளில் பட்டியல் சரிபார்ப்பை தொடங்க வேண்டும். கிணறு வெட்டினால்தான் தெரியும்,
வருவது தண்ணீரா இல்லை பூதமா என்று.
ஒரு மனிதன் நமக்காக, இந்த நாட்டிற்காக, அநீதியை எதிர்த்து இரவு பகலாய் போராடுகிறார். தோள் கொடுப்போம் தோழர்களே 🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக