திங்கள், 25 ஆகஸ்ட், 2025

President ரணில் விக்கிரசிங்க - சட்டத்தின் கடமையும் துரோகிஸ்தானியர்களின் விருப்பமும்

May be an image of 2 people
Former President Ranil Wickremesinghe is suffering from dehydration and  could face risks of heart, kidney, or other complications if not properly  treated, Deputy Director of the Colombo National Hospital Dr. Rukshan  Bellana

 ராதா மனோகர் : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதை சட்டம் தன்கடமையை செய்யும் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்றெல்லாம் கூறிக்கூறி 
மகிழ்ச்சி அடைகிறார்கள்  துரோகிஸ்தானியர்கள்,
இவர்கள்  சட்டத்தின் மாண்பு பற்றி பேசுவது காலத்தின் கோலம்தான்.
வாழ்வில் தப்பி தவறியும் சட்டத்தை மதித்து வாழ்ந்தே அறியாத கூட்டம் இது.
இன்று சட்டத்தின் மாண்பு பற்றி பேசுகிறது!
தங்கள் தோல்வியை ரணில் ஒரு நரி என்று ஒப்புதல் வாக்குமூலமாகவே கூறுபவர்கள் அல்லவா இவர்கள்.
தங்களை சமாதான ஒப்பந்தம் மூலம் சட்டத்தின் துணை கொண்டே தோற்கடித்தவர் அல்லவா அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா.
அந்த ஒப்பந்தத்தின் பொறியை உணராது கைச்சாத்திட்டவர்கள் இவர்கள் 
சகோதர படுகொலைகளை இலங்கை முழுவதும் நடத்தலாம் என்ற ஒற்றை நோக்கத்தில் மகிழ்ந்த அறிவாளிகள் இவர்கள்.
உண்மையை அறிந்தபோது தங்கள்  தோல்வியை ஒப்புக்கொண்டால் தங்களின் முட்டாள்தனம் அம்பலமாகி விடுமே என்று உண்மையை மறைந்து, . 
 ரணில் ஒரு நரி ரணில் ஒரு நரி என்று இன்று வரை அங்கலாய்ப்பவர்கள் இவர்கள்! 


இதே கும்பல் கலைஞர் கைதை கொண்டாடியது ஞாபகம் வருகிறது . 
இப்போது கூறும் அதே சட்டத்தின் முன்பு சமம்  என்று  துக்ளக் சோ போன்றவைகள் மட்டும் கூறவில்லை. 
இந்த கும்பலும்தான்  கூவியது    

மீள் பதிவு :  கலைஞர் கைதின் போது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன்  தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு திடுக்கிட்டேன்  
அதன் பின்பு அதை பற்றி திரு.சோ. ராமசாமி தொலைக்காட்சியில் கூறிய வார்த்தைகள்தான் ஆக கொடுமையானவை 
ஜெயலலிதா ஒரு சைக்கோ கேஸ் பேராசையும் அகம்பாவமும் அளவு கணக்கில்லாமல் அப்போது அவரிடம் குடிகொண்டிருந்தது..
ஆனால் சோ ராமசாமி ஒரு வழக்கறிஞர் பத்திரிகை ஆசிரியர் ஒரு நடிகர் கதைவசன கர்த்தா இன்னும் என்னன்னவோ தகுதிகள் எல்லாம் உடையவர்.
இந்த பாதகத்தை பற்றி சர்வ சாதாரணமாக,   சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று விட்டு கலைஞர் கைதை நியாயப்படுத்தி ஏதோதோ கூறினார். 
எல்லா சட்டங்களையும் தூக்கி வீசிவிட்டு தனது எல்லை மீறிய அகங்காரத்திற்கு தீனி போட்ட சம்பம் இது  இதை எப்படி சோ ராமசாமி போன்றவர்களால் நியாய படுத்த முடிந்தது?
பதில் மிகவும் எளிதானது 
பார்ப்பனர்களின் .. அதாவது பார்ப்பனீயத்தின் முதல் குறியாக அன்று கலைஞர்தான் இருந்தார் 
கலைஞரை அப்புறப்படுத்தி விட்டால் திமுகவை அகற்றி விடலாம் என்று பார்ப்பனீயம் கருதுவதால்தான் இந்த வன்மம் 
அவர்களின் ஆயிரமாண்டு கனவுகளை எல்லாம் வெறும் கனவுகளாக்கியே வரலாறு கண்டது திமுக.
இந்த சம்பவத்தில் சோ போன்றவர்கள் மட்டுமல்ல இன்னும் பல  சக்திகள் ஆனந்த கூத்தாடின என்பதை மறக்க கூடாது 
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் 
மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய காலம் இது என்பது தெரிகிறது 
திமுகவின் இன்றைய எழுச்சி அவர்களுக்கு சகிக்க முடியாத ஒரு கோபத்தை அளித்து கொண்டிருக்கிறது 
இதை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை 
இனி சும்மா இருக்க மாட்டார்கள்   
திமுக தலைவர்கள் கவனமாக இருக்கவேண்டிய காலக்கட்டம் இது 
எதாவது உருவத்தில் சதி முயற்சியில் ஈடுபடுவார்கள்.


கருத்துகள் இல்லை: