ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

மாணவனை அடித்து உதைத்து மின்சாரம் பாய்ச்சி ராகிங் செய்த சீனியர்ஸ் - : ஆந்திர அரசுக் கல்லூரியில் ஜூனியர்

 மாலை மலர்   : ஆந்திர மாநிலத்தில் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவன் சீனியர்களால் குரூரமான முறையில் ராகிங் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஆந்திராவின் பலநாடு மாவட்டத்தில் உள்ள தச்சபள்ளி அரசு ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், சீனியர் மாணவர்களால் தாக்கப்பட்டு, மின்சார அதிர்ச்சி அளிக்கப்பட்டு ராகிங் செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் என்றும், அவர்கள் இந்த ராகிங் சம்பவத்தை வீடியோ எடுத்து, ஜூனியர் மாணவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.



கல்லூரியில் மாணவராக அல்லாத ஒரு வெளி நபரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு மாணவர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    ఏపీలో దారుణ ఘటన ..ఇంటర్ ఫస్ట్ ఇయర్ విద్యార్థిని దారుణంగా కొట్టి, కరెంట్ షాక్ పెట్టి ర్యాగింగ్ చేసిన ఐదుగురు సెకండ్ ఇయర్ విద్యార్థులుపల్నాడు జిల్లా దాచేపల్లి ప్రభుత్వ జూనియర్ కాలేజీలో ర్యాగింగ్బీసీ హాస్టల్ లోకి తీసుకెళ్లి కొట్టి ,కరెంట్ షాక్ పెట్టి చంపుతామని బెదిరింపులు pic.twitter.com/qO4YHzKxBf
    — Vizag - The City Of Destiny (@Justice_4Vizag) August 9, 2025


கருத்துகள் இல்லை: