ராதா மனோகர் : 1942 இல் கேரளாவில் திரு பாலகிருஷ்ண மேனன் என்ற இளைஞர் காங்கிரசின் குயிட் இந்தியா Quit India இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டார் . அந்த இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்
இவரை கைது செய்யும் நோக்கோடு போலீஸ் தேடிய பொழுது தப்பி ஓடி அன்றய இந்தியாவின் வடமேற்கு எல்லையில் உள்ள அபோத்தாபாத் (இன்றைய பாகிஸ்தான்) Abbottabad என்ற சிற்றூரில் ஒழிந்திருந்தார்.
பிற்காலத்தில் இந்த ஊரில் வைத்துதான் ஒசாமா பின் லாடனை அமெரிக்கா போட்டு தள்ளியது.
இந்த கிராமத்தில் இரண்டு வருடங்கள் ஒழித்திருந்த பின்பு போலீஸார் தன்னை மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட வேறு சில இளைஞர்களோடு பஞ்சாபுக்கு வந்தார்.
ஆனால் அங்கு இவரும் இவரது நண்பர்களும் போலீசிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சில மாதங்களில் சிறையில் பாலகிருஷ்ணா மேனனுக்கு கடுமையான தொற்று நோய் ஏற்பட்டது.
அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு கூட இருந்த இளைஞர்கள் ரகசியமாக இவரை தூக்கி கொண்டுபோய் .ஏதோவொரு தெருவோரம் போட்டு விட்டு ஓடிவிட்டனர்
இவரது நல் வாய்ப்பாக அவ்வழியே வந்த ஒரு கிறிஸ்தவர் இவரின் நிலையை பார்த்து இரங்கி இவரை தன்வீட்டிற்கு கொண்டு போய் வைத்தியரை அழைத்து உரிய சிகிச்சை அளித்து பின்பு மருத்துவ மனையில் சேர்த்து இவரை காப்பாற்றினார்.
unhygienic conditions in prison and caught Typhus .
பின்பு குணமாகியதும் ஜவஹர்லால் நேருவினால் தொடங்கப்பட்ட நஷனல் ஹெரால்ட் National Herald பத்திரிகையின் ஆசிரியர் கே .ராமராவ் K.Rama rao அவர்கள் இவருக்கு எழுத்து பணியை வழங்கினார்.
அதில் சோஷலிச கருத்துக்களை பரப்பும் கட்டுரைகளையும் பல் துறை சார்ந்த விடயங்களையும் எழுதினர்.
1947 இல் ரிஷிகேஷ் இல் உள்ள சிவானந்தா ஆஸ்ரமத்திற்கு வருகை தந்தார்
அங்கு அவருக்கு ஆத்மீகத்தில் கவர்ச்சி உண்டானது . சுவாமி சிவானந்தாவின் திவ்விய ஜீவன சங்கத்தின் எழுத்து பணிகளையும் சிரத்தையோடு மேற்கொண்டார்.
1949 இல் சுவாமி சிவானந்தாவினால் சந்நியாச தீட்சை பெற்று பாலகிருஷ்ணா மேனன் என்ற பெயரை மாற்றி சுவாமி சின்மையானந்தா என்று பெயர் சூட்டி கொண்டார்.
8 August 1953, இல் தனது இந்துத்வ பிரசாரங்களை முன்னெடுத்து செல்வதற்கு சின்மய மிஷன் என்ற இயக்கத்தை தொடங்கினார் Chinmaya Mission
உலகம் முழுதும் பறந்து பறந்து இந்துத்வா பிரசாரத்தை மேற்கொண்டார்
அமெரிக்க ஐரோப்பா என்று செல்லுமிடமெல்லாம் தனது இந்துத்வா கடையை வெற்றிகரமாக திறந்தார்.
ராஷ்ட்ரிய சுயம் சேவக் Rashtriya Suya Sevak அமைப்பின் கொள்கைகளை முற்று முழுதாக பிரசாரம் செய்வதில் எல்லோரையும் விட அதிக முனைப்போடு இவர்தான் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1963 இல் கன்னியாகுமாரி பாறை மீது விவேகானந்தரின் சிலையை நிறுவியது இவர்தான்.
இதற்காக 10000 திரட்டி இந்த வேலையை செய்தார்
தமிழ்நாட்டிற்கு எந்த தொடர்பும் இல்லாத ஒரு வங்காள சந்நியாசிக்கு தமிழ்நாட்டின் தென்கோடியில் ஏன் சிலை?
முதலமைச்சர் காமராஜரின் காலத்தில் அதற்குரிய அனுமதியை பெற்றார்
இந்த்துவா அடையாளத்தை திணிக்கும் முயற்சிதான் இது .
இதே ஆண்டில் ஆர் எஸ் எஸ் RSS இன் அடுத்த கட்ட உலக இந்து மயமாக்கலுக்கு உரிய நிறுவனமாக விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பை திரு ஆப்தே உடன் சேர்ந்து உருவாக்கினார்
வி எச் பியின் VHP முதல் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டார்.
1992 அயோத்தியில் பாப்பிரி மஸ்ஜித் இடிக்க பட்டதை நியாயப்படுத்தி உலகம் முழுதும் பறந்து பறந்து பிரசாரங்களை மேற்கொண்டார்
(இவரது வெளிநாட்டு பயணங்களின் போது இவரோடு ஒரு பெண் உதவியாளரும் கூடவே பயணம் செய்வார்)
அந்த மசூதியை இடித்து தள்ளியதில் எந்த தவறும் இல்லை .
அது உண்மையில் மக்கள் வழிபடும் இடமும் அல்ல என்று பச்சையாக மதவெறி பிரசாரத்தை மேற்கொண்டார்
அது மட்டுமல்ல மதுராவிலும் கிருஷ்ணின் பூர்வீக வீடு இருப்பதாகவும் அங்குள்ள மசூதியையும் இடிக்கவேண்டும் என்றும் பிரசாரம் செய்தார்
ஆத்மீக போர்வையில் முழுக்க முழுக்க ஆர் எஸ் எஸ் இன் தூணாகவே இவர் தனது அரசியலை முன்னெடுத்தார்
இவருக்கு 1969 இல் இதய கோளாறு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது .
பின்பு ஒன்றுக்கு மேற்பட்ட தடைவைகள் இதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 26 July 1993 இல் உடல் நிலை மோசமானது
உயிர் காக்கும் கருவிகளின் உதவியில் இருந்து ஐந்து நாட்களின் பின்பு விடுதலை பெற்றார்.
He died five days later at 5:45 pm on 3 August 1993, aged 77..
இலங்கையில் இவரின் சின்மயா மிஷன் சார்பில் ஆர் எஸ் எஸ் RSS இன் கைங்கரியங்கள் பல நடந்து கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இவரின் சின்மயா மிஷன் தயாரிப்பில் இருந்து ஒரு இளம் காவி களம் இறக்கப்பட்டிருக்கிறார் .
அவர் இப்போது வட இந்திய பாணியில் காவி போர்த்திய தமிழ் தேசியம் ஸ்பீக்குகிறார்,
மலையகத்தில் ஆஞ்சனேயர் தங்கி இருந்த இடம் என்ற ஒன்றை கண்டு பிடித்தது இந்த பாலகிருஷ்ணா மேனன் என்கின்ற சின்மயானந்தாவேதான்.
இப்போது ரம்போட என்ற இடத்தில ஆஞ்சனேயர் வந்திருந்தார் ..
சீதா தேவியை தொடர்பு கொண்டார் என்றெல்லாம் எக்கச்சக்கமான அம்புலி மாமா கதைகள் உலா வருகிறது
இவற்றை எல்லாம் கட்டி விட்ட மேதாவி இந்த பாலகிருஷ்ன மேனன்தான்.
பிற்சேர்க்கை : பாலகிருஷ்ணா மேனன் (சின்மயானந்தா) நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்தவர்
ஜெ கிருஷ்ணமூர்த்தி யூ ஜி கிருஷ்ணமூர்த்தி ஓஷோ போன்றவர்களின் கருத்துக்கள் புயல் வேகத்தில் மக்களிடையே பரவ தொடங்கிய காலத்தில் அந்த கருத்துக்களை கொஞ்சம் உள்வாங்கி அப்படியே அவற்றை இந்துத்வா கருத்துக்களாக உருமாற்றி பிரசாரம் செய்வதில் இவர் வல்லவர்
இவர் மட்டுமல்ல ஈஷா ஜாக்கி வாசுதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரம்மகுமாரிகள் மகரிஷி மகேஷ் யோகி குரு மகராஜ் . கல்கி சுவாமி . முதல் தொடங்கி இன்றைய கேடி நித்தியானந்தா வரையும் இந்த அரைத்த மாவைதான் அரைக்கிறார்கள்
கொஞ்சம் நூல் வாசனை உள்ளவர்கள் ஏற்கனவே இவற்றை அறிந்திருப்பார்கள்
அதனால் ஏமாற மாட்டார்கள்
ஆனால் அவற்றை எல்லாம் அறியாதவர்கள் இந்த மோசடி சாமியார்களிடம் ஏமாறுவது தவிர்க்க முடியாது.
தற்போது ஒருவர் சினமயானந்தாவின் நல்ல பேச்சுக்களை எல்லாம் தொடர்ந்து பதிவிட்டு சின்மயானந்தாவின் அறிவு ஆற்றல் பற்றி எல்லாம் புரூப் கொடுத்து கொண்டிருக்கிறார்
சின்மயானந்தா மட்டுமல்ல எல்லா ஆத்மீக பேர்வழிகளுக்கு காப்பி பேஸ்ட் அறிவாளிகள்தான்
அதில் எனக்கு துளி கூட சந்தேகம் இல்லை
இவர்களோடு மல்லுக்கட்ட எனக்கு நேரம் இல்லை
அதன் காரணமாகதான் இந்த விளக்கத்தை கூற வேண்டி உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக