நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு,
மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில் உடல்நலக்குறைவால் தேர்தல் பரப்புரை பணிகளில் இருந்து விலகுவதாக பாஜக தேசிய தலைவருக்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் குஷ்பு கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் தனது முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெறுவதை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அதே சமயம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன். என்னை பாஜகவிற்காக அர்ப்பணித்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக