திங்கள், 20 நவம்பர், 2023

வடகலை-தென்கலை என மோதிக் கொள்ளும் இவர்கள் யார்?

 Surya Xavier   : வடகலை-தென்கலை என மோதிக் கொள்ளும் எச்சகலைகள் யார்?
சிறு குறிப்பு.
ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை வெளியில் இருந்து பார்க்கும் போது  ஒரே சாதி போல் தோன்றும்.ஆனால் அதனுள் பல உள் அடுக்குகள் இருக்கும். ஒரு சாதி என்பதன் உள் அர்த்தம் யாதெனில் திருமண உள்வட்டமே. ஒன்றாக சாதிப்பெயர் இருந்தாலும் ஒன்றோடு ஒன்று திருமண உறவு வைக்காது.இதற்கு ஏராள உதாரணம் உண்டு.
பார்ப்பனர்களிலும் பலவகை உண்டு. அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1.வைஷ்ணவர்கள்
2.அர்ச்சகர்கள்
3.ஸ்மார்த்தர்கள்
விஷ்ணுவைக் கடவுளாகக் கொண்டதால் வைஷ்ணவர் என அழைக்கப்படுகிறார்கள்.திருநீறு பூசமாட்டார்கள்.நெற்றியில் U அல்லது Y வடிவ திருமண் மட்டுமே அணிவார்கள். திருமண்ணில் பாதம் இருந்தால் தென்கலை மரபினர்.பாதம் இல்லாவிட்டால் வடகலை மரபினர். வடகலை,தென்கலை என்பது வடமொழி மற்றும் தென்மொழி சார்ந்ததே.
தென்கலை என்பது இராமானுஜரை பின்பற்றுவோரே.வட மொழியை புறக்கணித்து தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தென்கலை மரபினரே. நம்மாழ்வார் பாடல்களை திராவிட வேதம் எனப் பெயரிட்டவர்கள் தென்கலை மரபினரே. வடகலை மரபினர் தமிழை ஏற்பதில்லை. வடகலை,தென்கலைக்குள் திருமண உறவுகள் பெரும்பாலும் இல்லை.
ராஜாஜி வடகலை வைணவர்.
அவரின் அரசியல் எதிரி பரவஸ்து ராஜகோபாலாச்சாரி தென்கலை வைணவர்.
ஜெயலலிதா வடகலை வைணவர்.
கமலஹாசன் தென்கலை வைணவர்.
வடகலையார் ஆழ்வார்களை மதிப்பதில்லை.
தென்கலையார் ஆழ்வார்களுக்கு மிகுந்த மதிப்பளிப்பர்.
அர்ச்சகர்கள் எனப்படுவோர் சைவ-வைணவக் கோவில்களில் கருவறையில் பூஜை செய்பவர்கள். உருவ வழிபாட்டில் நாட்டம் உடையவர்கள்.வேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. கோவில்களில் வடமொழியை முன்னிறுத்துவோர் இவர்களே.
வைணவக் கோவில் அர்ச்சகரான ஐயங்கார் தமிழ் வைணவ நூல்களில் ஆர்வம் உடையவராக இருப்பார்.
சைவக் கோவில் அர்ச்சகரான பட்டர் அல்லது சிவாச்சாரியார் தமிழில் உள்ள சைவ நூலை ஒரு போதும் மதிப்பதில்லை. அதனால் தான் சைவ திருமுறையை தமிழில் பாடுவதற்கு என்றே ஓதுவார் என்ற ஒருவர் தனியாக இருப்பார்.
சைவக்கோவில் அர்ச்சகரான சிவாச்சாரியாரும், வைணவக் கோவில் அர்ச்சகரான ஐயங்காரும் தங்களுக்குள் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை.
உருவ வழிபாட்டை ஏற்காத,
தீண்டாமையை எல்லா நிலையிலும் கடைபிடிக்கிற, பார்ப்பனர் என்ற தன்னுனர்வு நிரம்பப் பெற்ற,கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக  ஏற்காத,
வடமொழியை மட்டுமே ஏற்கிற, மாயாவாதம் எனும் கோட்பாடு கொண்டவர்கள் ஸ்மார்த்தர். சங்கராச்சாரிகள் அனைவரும் ஸ்மார்த்தர்களே. ஸ்ருதி என்பதே ஸ்மார்த்தர் என்பது. ஸ்ருதி என்றால் சொல்லப்படுதல் என்று பொருள்.
இந்து என்று பேசி தங்கள் இருப்பை உறுதிப்படுத்தவே சைவ-வைணவத்தின் திருப்பாவை-திருவெம்பாவை மாநாடுகள் நடத்துவார்கள்.அர்ச்சகர் அல்லாத ஐயர்கள் இவர்களே. இவர்களில் மூன்று பிரிவு உண்டு. கனபாடிகள், ச்ரௌதிகள், க்ரம வித்தகர்கள்.
இது வேதத்தை கற்ற அளவீடு சார்ந்தது. க்ரம வித்தகர்கள் வேதத்தை குறைவாக கற்றவர்கள். இவர்கள் பிழைப்பதற்காக அரசர்கள் வழங்கிய ஊருக்குத்தான் கிராமம் எனப்பெயர்.
இவையெல்லாம் கிபி 7 ம் நூற்றாண்டின் பக்தி இயக்கத்திற்கு பின்பு உருவானவையே.அதற்கு முன்பு  கோவில் என்ற நிறுவனம் உருவாகவில்லை. மன்னர்கள் அருகில் இருந்து வேதங்கள், மந்திரங்கள்,வேள்விகள் என்றே காலத்தைக் கழித்தனர். மன்னர்களை மந்திரத்தால் அடக்கி ஆண்டவர்கள்.
பார்ப்பு என்பது தொழில் சார்ந்தது
நேமம் பார்ப்பான்,நியமம் பார்ப்பான்,நிமித்திகம் பார்ப்பான் என்பதே. அதாவது கடந்த-நிகழ்-எதிர்காலத்தை கணிப்பவன் என்று பொருள்.
எப்போதும் அதிகாரம் என்ற இடத்தில் தங்களை நிலைநிறுத்தும்  இவர்களே பார்ப்பனர் என்று அறியப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: