சனி, 25 நவம்பர், 2023

திருநாவுக்கரசரை (அப்பர்) கொலைசெய்த பார்ப்பனர்கள்! சனாதனலீக்ஸ்

May be an image of 10 people and temple

இம்சை அரசி தென்றல் :  : பலிக்கூடாது என்று வாதிட்ட அப்பரை கொலை செய்த பார்ப்பனர்கள் -
இன்றுவரை அப்பர் எழுதிய தேவாரம் பாடத் தடை -
63 நாயன்மார்களில் மிகவும் முக்கியமானவர் அப்பர் எனும் திருநாவுக்கரசர் ஆவார்.
அவர் தம் வாழ்வின் முற்பகுதியில், சமணத்தைப் பின்பற்றினார்.
பிறகு சைவத்திற்கு மாறி சிவதலங்கள் பலவற்றைத் தரிசித்து, யாத்திரையாக வரும்போது, திருஞான சம்பந்தரோடு தொடர்பு ஏற்பட்டது.
பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து பல சிவ தலங்களை தரிசித்தனர்.
வாம மார்க்கிகள் ஊர் ஊராக சென்று, சிறு தெய்வங்களை உருவாக்குவதையும், அவைகளுக்குப் பலியிடுவதையும், பிரச்சாரம் செய்து வந்தனர்.
இது பிராமணர்களுக்கு தனி, பிராமணர் அல்லதோர் தனி என்று பரப்பினர்.
இதில் திருஞானசம்பந்தர் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார்.
இதனால் அப்பருக்கும், திருஞான சமந்தருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்பர் ஒரு நாள் சம்பந்தரை பார்த்து கேட்கிறார்.


“என்றும் நாம் யாவருக்கு
மிடையோ மல்லோம்
இருநிலத்தில்எமக்
கெதிராய்எவருமில்லைசென்று நாம்
சிறு தெய்வம் சேரப்பெற்றோம்
சிவபெருமான் திருவடியே சேர்வோ மல்லோம்
ஒன்றினிலும் குறைவுடையோ
மல்லோம் அன்றே
உறுபிணியார் செறலொழிந்
திட்டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை
யணிந்த சென்னி
புண்ணியனை நண்ணிய
புண்ணியத் துளமே” (அப்பர் தேவாரம்)
என்ற பாட்டை பாடிவிட்டு சம்பந்தரோடு பதில் ஏதும் கூறாமல் கிளம்பிவிட்டார்.

இதனால் கோபமுற்ற சம்பந்தர் எப்படியாவது அப்பரை ஒழித்துகட்ட பிராமணர்களோடு சேர்த்து திட்டம் திட்டினார். இதற்கிடையில் அப்பர் சிறு தெய்வங்கள், யாகங்கள், பலியிடுதுதல் , நம்முடைய அறமல்ல. என்று கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். கடைசியாக ஒருநாள் திருநறுங்கொண்டை என்னும் ஒரு ஜைனக் கிராமத்தை அடைந்தார்.

அங்கு ஜைன ஆலயம் இருப்பதை கேள்வியுற்று அங்கு சென்றார்.அங்குள்ள ஜைனர்கள் அப்பரை முகமலர்ந்து வரவேற்று, நீர் எந்த மதத்தைப் பரவச் செய்யினும், கொல்லாமையை போதிப்பதால் உம்மிடம் எங்களுக்குள்ள அன்பு அளவிடாது என்று கூறினார்கள்.

இம்மொழியை கேட்ட அப்பர், தான் சம்பந்தரோடு சேர்ந்து சமணர்களுக்கு இழைத்த தீங்கெல்லாம் கண்முன் தோன்றப் பெற்று, மிகவும் வருந்தி “அந்தோ! தருமக் கொள்கை உடையவராகிய நமது உடன் பிறந்த சமணர்களை அழித்து, வஞ்சனை நிரந்த பார்ப்பனர் அறத்தை வளர்க்கச் சம்பந்தப் பார்ப்பனர் வலையில் வீழ்ந்தொமே!” என்று கண் கலங்கினார்.

சமணர்கள் அப்பரின் மனமாற்றத்தை கண்டு மகிழ்வுற்று, “எங்கள் அருகதேவன் உம்மை இன்று ஆட்கொண்டான் என்று நினைக்கிறோம்‘ என்று முகமன் கூறினார்கள்.
அச்சமயத்தில், சிதம்பரம் நடராசர் மகோற்சவம் நெருங்கிவிட்டதென்றும், அவ்விழாவை இடையூறின்றி நடத்தி முடிக்க, அவ்வூர்ப் பத்திரக்காளி அம்மனுக்கு காப்புக்கட்டி உற்சவமும், உயிர்ப்பலியும் நடைபெறப் போகிறது என்று கேள்விப்பட்ட அப்பர் மிகுந்த ஆத்திரத்தொடு சிதம்பரம் நோக்கிப்புறப்பட்டார்.

திருநறுங்கொண்டையில் நடந்த சேதியை அறிந்த அந்தணர்கள் அவரை தந்திரமாக கொல்ல முடிவு செய்தனர்.
அப்பர் நடராசர் பேரில் பாடல்களை பாடிக்கொண்டே சிதம்பரம் கோயிலுக்குள் நுழைந்தார்.
உடனே, ஏற்கனவே திட்டமிட்ட படி அப்பர் உள்ளே நுழைந்ததும் கதவை முடிவிட்டனர்.
வெளியே இருந்த மக்கள் ஏன் கதவை முடுகிறீகள் என்று கேட்டதற்கு அப்பருக்கு கடவுள் காட்சி அளிக்க உள்ளார் என்று கூறிவிட்டனர்.
உள்ளே நுழைந்த அப்பரை அங்கு மறைந்து இருந்த அந்தணர்கள் கொன்று புதைத்துவிட்டு, அப்பர் இறைவன் அடி சேர்ந்துவிட்டார் என்று உலகுக்கு அறிவித்து விட்டனர்.

அப்பர் இயற்றிய தேவராம் சிதம்பர நடராஜர் கோவிலில் பாட இப்போது வரை தடையுள்ளது.
தேவாரம் சிவனை போற்றி எழுதியது தானே நாங்கள் படுவோம் என பக்தர்கள் பாட முனைந்த போது, பார்ப்பன தீட்சிதர்கள் அதை தடுத்து, தேவாரம் கோவிலில் பாடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது..
ஆதாரம் - தேவாரம்

கருத்துகள் இல்லை: