சனி, 9 செப்டம்பர், 2023

ஜி20 மாநாடு விருந்து: டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்

மின்னம்பலம்  - மோனிஷா :ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் மாநாடு நடைபெறுகிறது.
ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள்.
தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜி20 மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது.

இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விருந்தில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் டெல்லி சென்றார். முதல்வருடன் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் டெல்லி சென்றுள்ளார்.

மதியம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினை தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் எம்.பி.க்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மோனிஷா

கருத்துகள் இல்லை: