சனி, 19 ஆகஸ்ட், 2023

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினிகாந்த்.. உபியில் “நோஸ்கட்” செய்தும் ஜெயிலர் திருந்தல! வீடியோ இதோ

tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber Ali : லக்னோ: உத்தரப்பிரதேசம் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து அவருக்கு மரியாதை செலுத்திய வீடியோ தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தர்பார், அண்ணாத்த திரைப்படங்களின் தோல்வியை தொடர்ந்து டாக்டர், கோலமாவு கோகிலா, பீஸ்ட் படங்களின் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். மலையாள மெகா ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, யோகி பாபு, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், சுனில், சரவணன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மெகா ஹிட்டாகி உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருக்கிறது.

ஜாக்கி ஷெராப், மோகன் லால், சிவராஜ் குமார் என பல மொழி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருப்பதால் பிற மாநிலங்களிலும் இப்படம் ஹிட் ஆகியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் ரூ.375 கோடிக்கும் அதிகமாக ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்தது.

இந்த நிலையில் திரைப்படம் வெளியாவதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு நாள் முன்பாக இமய மலையில் தியானம் செய்வதற்காக புறப்பட்டு சென்றார். கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை செல்வதாக அவர் தெரிவித்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போது இமய மலைக்கு ரஜினிகாந்த் செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் 6,800 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் 6,800 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்


இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக அவர் இமய மலை செல்லாமல் இருந்த நிலையில், ரஜினி இமயமலையில் தியானத்துக்கு சென்றார். அவர் இமயமலையில் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த நிலையில் இமயமலை பயணத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த், நேராக தமிழ்நாடு திரும்புவார் என்றே அவரது ரசிகர்களும் ஜெயிலர் படக்குழுவினரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்று அங்கு ஆளுநராக உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை ஆளுநர் மாளிகையில் சந்தித்து, ஆளுநரின் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சந்திப்பை தொடர்ந்து ஜார்க்கண்டில் உள்ள புனித தளங்களில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினி இல்லாமலேயே ஜெயிலர் வெற்றிவிழாவை செய்தியாளர் சந்திப்பையும் படக்குழு நடத்தி முடித்துவிட்டது. இதன் பிறகாவது ரஜினி தமிழ்நாடு திரும்புவார் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் உத்தரப்பிரதேசம் சென்றார். அங்கு யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கப்போவதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், இன்று யோகி ஆதித்யநாத் ஜெயிலர் படம் பார்க்க செல்லவில்லை. அவருக்கு பதிலாக உபி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்துடன் திரைப்படம் பார்த்தார். ஆனால், அவரும் படத்தை முழுமையாக பார்க்காமல் பாதியிலேயே புறப்பட்டு சென்றார்.
Actor Rajinikanth fell in UP CM Yogi adityanath feet

இந்த நிலையில் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு ரஜினிகாந்தும், லதா ரஜினிகாந்தும் சென்றார்கள். காரில் இருந்து இறங்கிய ரஜினிகாந்தை வரவேற்க வாசலுக்கு வந்த யோகியின் காலில் விழுந்து ரஜினிகாந்த் மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ வெளியாகி ரஜினி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.


கருத்துகள் இல்லை: