செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

பறிக்கப்பட்ட மருத்துவ படிப்புகள் துக்ளக் வகையறாக்களின் புள்ளி விபரம்

 Sundaram  : துக்ளக் இதழின் "ரீடர்ஸ் க்ளப்" என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி யுள்ள ஒரு கடிததத்தை கீழே கொடுக்கிறேன் படித்துப் பாருங்கள், பிறகு இந்த நீட் என்கின்ற சூழ்ச்சி என்ன என்று புரியும்.....
"பிராமணக் குழந்தைகளே!!!
நீங்கள் டாக்டராக நல்ல வாய்ப்பு!!!
பிராமணக் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்!!!
உங்களில் பலருக்கு எம்.பி.பி.எஸ். டாக்டராக வேண்டுமென்ற கனவு இருக்கும்.
நேற்றுவரை, நாமெல்லாம் ஃபார்வர்ட் கம்யூனிட்டி; நமக்கு டாக்டர் சீட்டெல்லாம் கிடைக்காது என்று நாமே சொல்லிக் கொண்டிருந்தோம். அதில் உண்மையும் இருந்தது.
ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. நீட் தேர்வு முறை நமக்கு நல்ல பலன்களைத் தரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சில புள்ளி விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின்மொத்த எண்ணிக்கை 22.
அவற்றில் உள்ள எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு சீட்களின் எண்ணி க்கை 2,652.
கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். சேருவத ற்காக விண்ணப்பித்த முற்படுத்தப் பட்ட மாணவர்கள் ( Forward Community – FC ) எண்ணிக்கை 4.6 சதவீதம் மட்டுமே.


அவர்களில் 48 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முற்படுத்தப்பட்டவர்கள் அனைவருமே பிராமணர்கள் கிடையாது.
அதில், நாட்டுக்கோட்டை செட்டியார், முதலியார், சைவப் பிள்ளைகள் என பல சமூகத்தவரும் அடங்குவர். ஆக, இந்த 48 பேரில் எத்தனை பிராமணக் குழந்தைகள் இருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.
ஆனால், இந்த முறை நீட் தேர்வு மூலம் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
முற்படுத்தப் பட்ட மாணவர்கள் 6.7 சதவீதம் பேர் நீட் தேர்வை நம்பிக்கையோடு எழுதினர். கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியான போது, FC சமூகத்தினர் மட்டும் 8%  பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர்.
அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட 2652 மாணவர்களில் 8% பேர், அதாவது 211 பேர் முற்படுத்தப்பட்ட மாணவர்கள்.
கடந்த முறை வெறும் 48 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த முறை 211 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னைக் காட்டிலும் 4 மடங்கு 400%  அதிக தேர்ச்சி விகிதத்தை முற்படுத்தப்பட்ட மாணவர்கள் சாதித்துள்ளனர்.
இதற்கு காரணம் நீட் தேர்வு முறை. முன்பெல்லாம் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
இப்போது அப்படியல்ல. இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 63 % பேர் மட்டுமே மாநில பாடத்திட்டத்தின்கீழ் பயின்றவர்கள்.
(முன்னர் இவர்கள் எண்ணிக்கை 99 சதவீதமாக இருந்தது)
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 37 % பிற போர்டுகளில் பயின்றவர்கள். தமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 2 எழுதும் மாணவர் களில் பிற போர்டுகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 2% மட்டுமே.
ஆனால், எம்.பி.பி.எஸ்.க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிற போர்டு மாணவர் எண்ணிக்கை 37 % என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதற்கு ஒரே காரணம் நீட்தேர்வு முறைதான்.
எனவே, நீட் தேர்வு என்பது நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்.
கடவுள் நம்பிக்கையோடும் கடின உழைப்போ டும் நீட் தேர்வுக்கு உழைத்துப் படித்தால், பிராமணக் குழந்தைகள் டாக்டராவது உறுதி.
கட்டண விவரம்:
-------------------------------
நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்தால் ஆண்டுக்கட்டணம் ரூ.13,600 மட்டுமே.
அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தால் ரூ.11,600 மட்டுமே.
(இந்தக் காலத்தில் LKGக்கு வசூலிக் கப்படும் கட்டணத்தைவிட பல மடங்கு இது குறைவு.)
நீட்தேர்வு முறையில் அரசுகோட்டாவின் கீழ் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கிடைத்தால், ஆண்டுக்கு ரூ. 4 லட்சம்வரை கட்ட வேண்டும்.
தனியார் பல் மருத்துவமனையென் றால், ரூ. 2 லட்சம். நீட் தேர்வு மூலம் நிர்வாக கோட்டாவின் கீழ் (Management quota) எம்.பி.பி.எஸ். கிடைத்தால் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும்.
எனவே, அரசு மருத்துவக் கல்லூரி யில் இடம் பிடிக்க செலவில்லாமல் எம்.பி.பி.எஸ். படிக்க முனைப்புடன் நீட் தேர்வுக்கு முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் சிபிஎஸ்இ மாணவர்களாக இருந்தால் இன்னும் சுலபம்.
ஏனெனில், நீட் தேர்வு வினாத்தாளை செட் பண்ணுவதே சிபிஎஸ்இ போர்டுதான்.எனவே, சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள் பாடங்களை (பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2) ஒழுங்காகப் படித்தாலே போதும். நீட் தேர்வை சிறப்பாக எழுத முடியும்.
வருங்கால பிராமண சமுதாயம் நிறைய டாக்டர்களை உருவாக்க வேண்டும். அதற்கு முதற்படி, நீட் தேர்வில் நிறைய பிராமணக் குழந்தைகள் நம்பிக்கையோடு பங்கேற்க வேண்டும்.
எதிர்காலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களில் பிராமணக் குழந்தை களின் எண்ணிக்கை மட்டும் 5 சதவீதத்துக்குமேல் இருந்தால், கிட்டத் தட்ட 300 பிராமணக் குழந்தைகள் ஆண்டுதோறும் டாக்டர்களாக வாய்ப் புண்டு.
எனவே, உங்களுக்கு தெரிந்த பிராமணக் குழந்தைகளை நீட் தேர்வு எழுத உற்சாகப்படுத்துங்கள். மீண்டும் பழைய உன்னதமான காலத்தை மீட்டு எடுப்போம். இது ஒன்றும் முடியாத காரியமல்ல..."

கருத்துகள் இல்லை: