புதன், 5 ஜூலை, 2023

வவுனியா நைனாமடுவில் சீனாவின் சீனி ! நன்மை தீமைகள் எவை?.

Annesley Ratnasingham : வவுனியா நைனாமடுவில் சீனாவின் சீனி !
நன்மை தீமைகள் எவை?.
உலக உணவு பொருளில் சீனி மிகவும் முக்கியமானதும் தேவைக்கு மேலாக பல மடங்கு பாவிக்கப்படும் ஒரு உணவு பொருள்ளாகும்!
சீனாவில் இருந்து வந்தமையால் இதை சீனி என்றழைத்தார்கள்! .
சர்க்கரை என்ற சொல்லிலிருந்து அணைத்து மொழிகளிலும் திரிபு அடைந்து அதே போன்ற உச்சரிப்புடன் வந்தாக பல கட்டுரைகளில் எழுதுகிறார்கள்!
.சீனி  இந்தியாவில் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்திய உணவு கலாச்சாரத்தில் இருந்ததாக பல கட்டுரைகளில் கூறப்படுகிறது ..
அதே போன்று பசுபிக் சமுத்திரத்தில் இருக்கும் Melanesia தீவிலும் அதே காலகட்டத்தில் இந்த சீனி உணவு கலாச்சாரம் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது ....
சீனி உற்பத்தி செய்ய கூடிய 3 வழிகளில் ( வேறு இருந்தால் உங்கள் கருத்தை சொல்லவும் அறிந்து கொள்வோம் )கரும்பு ( Sugarcane ) ..அடுத்தது சீனி கிழங்கு ( Sugar beet ) அதைவிட ரசாயன கலப்புகள்மூலமும் பெறலாம் என்கிறார்கள்!
இன்னும் ஒரு மிக சிறந்த சீனி - தென்னை மரத்தில் ,தேங்காயில் இருந்து பெறலாம் .....ஆனால் உலக தேவைக்கு அல்லது ஒரு நாட்டின் தேவையான அளவுக்கு பெறுவது மிகவும் கடினம் ..

மேலே உள்ளவற்றை பயன்படுத்தி சீனி மட்டும் அல்ல Ethanol என்ற சாராயம் போன்ற குடிவகைகளுக்கு பயன்படுத்தும் திரவத்தையும் மிக அதிகமாக உருவாக்கலாம் ..
.
இந்த கரும்பு மற்றும் சீனி கிழங்கில் இருந்து சீனியை பெறுவதும் மூலம் அவைகளை பிழிந்த  பின் வரும் சக்கையில் மக்களுக்கு தேவையான பல இயற்கையான  பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்கிறார்கள் ..
.
அதைவிட அவைகளை பயன்படுத்தி மின்சத்தி போன்ற சில விடயங்களையும் உருவாக்கலாம் என்கிறார்கள். இப்படி பல நன்மைகள் இருந்தாலும் இதற்க்கு பின்னால் பல தீமைகளும் உண்டு ...
அதாவது நீரின் தேவை மிக மிக அதிகம் என்பது உண்மையே.
.
பிரேசில் நாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒரு கிலோ சீனி உற்பத்தி செய்ய 1 782 ( ஆயிரத்தி எழுநூற்றி என்பதிலிரண்டு ) லிட்டர் நீர் தேவைப்படுகிறது.
.
சீனி உற்பத்தியில் இந்தியாவும் ,பிரேசில்லும் மாறி மாறி  உலகில் முதலாவது இடத்தை பிடிக்கிறார்கள்.
ஆனால் சீனா 3 வது இடத்தை பிடித்தாலும் இந்தியாவைவிட மிகவும் குறைவான சீனி உற்பத்தியே செய்கிறது.
.
சீனி உற்பத்தியில் இந்தியா உலகில்  1 வது இடத்தில இருக்கும்போது எதற்காக எமது அரசியல்வாதிகள் சீனாவுக்கு பின்னால் அலைகிறார்கள் என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்கவேண்டும் ..
.
சீனி உற்பத்தியால் வரும் மிக பெரிய அழிவு கரும்பு உற்பத்திக்கு பாவிக்கப்படும் ரசாயன பொருட்களே ...
.
ரசாயன உரம் இல்லாமல் ஒரு போதும் கரும்பு பயிர் வளர்ச்சி  மிக பெரிய industrial production செய்வதற்கு முடியாது!
.
சீனி உற்பத்திக்கு சீனி கிழங்கை பாவித்தால் மிக மிக குறைவான ரசாயன உரத்துடன் உற்பத்தியை செய்யலாம் ..
ஆனால் கரும்பில் இருந்து செய்வதானால் மிக மிக அதிகமான 3 அல்லது 4 விதமான ரசாயன உரம் தேவைப்படும் .
.அதாவது கரும்பு வளர்ச்சிக்கு ஒன்று.
.வளரும் கரும்பில் சீனி தன்மை அதிகமாக்குவதற்கு ஒன்று .
களைகளை அகற்ற ஒன்று என்பதாகும்.
.
அநேகமாக பாவிக்கப்படும் உரம் ....2,4-Dichlorophenoxyacetic acid என்ற ஒன்று ..
மற்றது ....Agent Orange என்ற ஒன்று இது அமெரிக்காவினால் வியட்னாம் மக்களுக்கு எதிராக யுத்தத்தின் போது வீசி மக்களுக்கு பல நோய்களை உருவாக்கினார்கள் ( Dioxin )
.
இப்படி வேறு பல பெயர்களில் உரம் பாவிக்கப்படுகிறது ..
.
பிரேசிலில் 2013 இல் 77,000 tons of pesticides பாவிக்கப்பட்டது ..
.
1747 இல் சீனி கிழங்கை (  Sugar beet ) பயன்படுத்தி சீனியை பெறலாம் என்று கண்டுபிடித்தவர் ஜெர்மனியை சேர்ந்த Andreas Sigismund Marggraf என்பவர்.
சீனியின் பாவனையை 50 % மேல் கடுமையாக மக்களை குறைக்கும்படி .
World Health Organization சொல்கிறது!
வெளிநாட்டில் பல மில்லியன்களுக்கு வாங்குவதைவிட நாட்டில் உற்பத்தி செய்தால் மிகவும் நல்லதே ..
.
ஆனாலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் ரசாயன உரத்தை அளவில்லாமல் இறைத்து நாசமாக்குவதைவிட ..
சீனி உற்பத்தியை Eco-friendly முறையில் உராப்தி செய்தால் நிலத்துக்கும் நல்லது - மக்களுக்கும் நல்லது!.
ஆனால் உற்பத்தியின் செலவு மிக அதிகம் ஆகும் !
.
அனைத்து விடயங்களையும் உற்பத்தி செய்யலாம்,
ஆனால் அந்த கொம்பனிகளுடன் செய்யும் உடன்படிக்கைகளில் உற்பத்தி முறை மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் இன்னும் பலவிடயங்கள் எழுதப்படவேண்டும்! ..

கருத்துகள் இல்லை: